உன்ன என்னமோன்னு நினைச்சேன் – Part 3 129

ம்ம். சொல்லுங்க!

இல்லை, நீங்க பேசிட்டிருங்க, நான் வெளிய போயிட்டு வந்துடுறேன் என்று சொல்லிவிட்டு வெளியே சென்றான் ராஜா! யாரிடம் பேசச் சொல்கிறான் என்று திகைத்த மைதிலிக்கு, உள்ளிருந்து வந்த ஆளைப் பார்த்து அவள் கண்கள் விரிந்தது!

உள்ளிருந்து வந்தது, மைதிலியின் அப்பா!

அப்பா!

பாப்பா!

அப்பாவின் கண்கள் கலங்கியிருந்தன. ஆனாலும் அவர் தைரியமாக இருந்தார். ராஜா என்ன சொல்லி அப்பாவைக் கூட்டி வந்தார் என்று தெரியவில்லை, ஆனால் அவர் என்னை எதுவும் கேட்கவில்லை. மாறாக, இவ்ளோ கஷ்டத்தையும் மனசுலியே வெச்சிருக்கனுமா பாப்பா? முன்னமே சொல்லியிருக்கலாமே? உன் சந்தோஷம்தானே பாப்பா எனக்கு எப்பியும் முக்கியம்.

மைதிலி அவர் மடியில் படுத்து அழுது கொண்டிருந்தாள்! எந்த அப்பாவின் மனது கஷ்டப்படுமோ என்று அவள் பயந்தாளோ, அந்த அப்பாவே இதை மிகத் தைரியமாக எதிர் கொண்டது, அவளுக்கு மிகுந்த தெம்பைத் தந்திருந்தது. அவரிடம், இந்த விஷயத்தை எப்படிச் சொல்வது என்ற கவலையும் நீங்கியது. அவரும், அவளைப் புரிந்து கொண்ட பின், ஏனோ மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. கொஞ்ச நேரம் கழித்து கேட்டாள் மைதிலி,

நீங்க எப்பிடிப்பா இங்க வந்தீங்க?

ராஜா தம்பி நேத்து ஊருக்கு வந்து என்னப் பாத்தாரு. விஷயத்தைச் சொன்னாரு! எனக்கும் பயங்கர அதிர்ச்சிதான். ஆனா. அவருதான் கொஞ்சம் கொஞ்சமா என் கூடவே இருந்து எல்லாத்தையும் புரிய வெச்சாரு.

ம்ம்ம்… அப்படியே அவரது பேச்சு வளர்ந்தது. ஒரு மணிக்கு ராஜா வந்த போது, லஞ்ச் வாங்கி வந்திருந்தான்.

மைதிலியின் முகம் ஓரளவு மலர்ச்சியாய் இருக்கவே, அவனுக்கும் நிம்மதியாய் இருந்தது. அவளைக் கிண்டல் பண்ணினான், என்னா, அப்பாவும், பொண்ணும் ரொம்பக் கொஞ்சிகிட்டீங்க போல என்று சிரித்தான்.

அவர்களது ப்ரைவசியில் அவன் தலையிடாதது அவன் மேல் இந்த அன்பை அவளுக்கு அதிகப்படுத்தியது. மெல்ல அவனுக்கு வழிவிட்டவள், அவனுக்கு மட்டும் கேட்கும் படி முணுமுணுத்தாள். ‘பண்றதெல்லாம் பண்ணிட்டு, இப்ப ஒன்னுமே தெரியாத மாதிரி கேக்குறதைப் பாரு’.

புன்னகைத்த படியே நுழைந்தவன், மைதிலியின் அப்பாவிடம் பேசிக் கொண்டிருந்தான்.

சாப்பிட்ட பின், மைதிலியின் அப்பாவிடம் நீண்ட நேரம் தனியாக பேசியவன், பின் மைதிலியையும் அழைத்து திட்டத்தை விளக்கினான். மைதிலியின் அப்பாவும் ஓரளவு விவரம் தெரிந்தவராய் இருக்கவும், அவர் இன்னும் சில மாறுதல்களைச் சொன்னார். இறுதியில் அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தனர்.

திட்டத்தை அன்றே ஆரம்பித்து விடும் முடிவில், மைதிலி ப்ரேமுக்கு ஃபோன் செய்தாள்.

ம்.. சொல்லு. இப்ப பிசியா இருக்கேன். என்ன விஷயம். (வீட்ல இருக்கிறவன், பிசியா இருக்கானாம், ஆஃபிஸ் போறேன்னு சொன்ன நான் வெட்டியா இருக்கேனா?)

ஒண்ணுமில்லை, அப்பா ஃபோன் பண்ணாரு, நம்ம வீட்டுக்கு வந்துட்டிருக்காராம், உங்ககிட்ட என்னமோ பேசனுமாம். நைட்டு லேட் ஈவ்னிங் வந்துடுவாராம். நான், ஆஃபிஸ்ல இருந்து அவரை கூட்டிட்டு வந்துடுறேன்.

1 Comment

  1. Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super
    Super super super super super super
    Super super super super super super
    Super super super super super super
    Super super super super super super

Comments are closed.