உன்ன என்னமோன்னு நினைச்சேன் – Part 3 129

ப்ரேமுக்கு பதைபதைத்தது…. ஏன், என்ன திடீர்னு?

தெரில்லை, நல்ல விஷயந்தான்னு சொன்னாரு.

அந்தப் பதில் ப்ரேமுக்கு தைரியத்தைத் தரவும், அவன் சரி என்றான்.

சரி மைதிலி, அப்பா ரெஸ்ட் எடுத்துக்கட்டும். ரொம்ப டயர்டாயிருப்பாரு.

மைதிலிக்கும் அதுதான் சரியென்றிருந்தது. ஏனெனில், என்னதான் அவர் தைரியமாக இருந்தாலும், ராஜாவுடன் அவர் தனியாகப் பேசிய பொழுது, என்னதான் நல்லதுக்குன்னு நினைச்சிகிட்டாலும், என் பொண்ணு வாழ்க்கையை நினைச்சா ரொம்ப கவலையா இருக்கு தம்பி என்று கண் கலங்கியிருந்தார்.

ராஜாதான், நீங்க கவலைப் படும் அளவிற்கு ஒரு பிரச்சினையும் வராது. உங்கப் பொண்ணு மனசுக்கு, இனிதான் சந்தோஷமா இருப்பா என்று தேற்றியிருந்தான். அதனால், அவர் கொஞ்சம் தூங்கி ரெஸ்ட் எடுப்பது நல்லது என்றே மைதிலியும் நினைத்தாள்.

அவர் அறைக்குச் சென்று படுத்ததும், ஹாலுக்கு வந்தவள், ராஜாவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஏன், அப்பாவைப் பாக்கப் போற விஷயத்தை என்கிட்ட சொல்லவேயில்லை?

புன்னகைத்தவன், உன் பெரிய கவலையே அவர்தானே. எப்பிடி அவர்கிட்ட சொல்றதுன்னுதானே புலம்பிகிட்டிருந்த. அதான், நானே நேர்ல போயி பாத்துட்டேன். நீ வேற ஏற்கனவே என்னைப் பத்தி நல்லவிதமா சொல்லி வெச்சிருந்திருக்க. நான் பேரு சொன்ன உடனே அவருக்கு தெரிஞ்சிருக்கு. அப்புறம் பக்குவமா விஷயத்தைச் சொல்லி, கொஞ்சம் மனசை தைரியப்படுத்தி, நானே கூட்டிட்டு வந்துட்டேன்… இப்ப கவலையில்லைதானே என்று புன்னகையுடன் கேட்டான்.

அவளும் சந்தோஷமா இல்லை என்று புன்னகைத்தாள். இருந்தாலும் கேட்டாள், என்கிட்ட சொல்லியிட்டுப் போயிருக்கலாம்ல?

சொல்லியிருந்தா, நான் திரும்பி வர்ற வரைக்கும், நீ உங்க அப்பா எப்பிடி எடுத்துகிட்டார், ரொம்ப ஃபீல் பண்ணாரான்னு கண்டதையும் நினைச்சி புலம்பிட்டிருப்ப… அதான் இப்பிடி பண்ணேன்!

அவள் மனம் நெகிழ்ந்திருந்தது. எதுக்கு இவன் எனக்காக இவ்வளவும் செய்கிறான். அப்படி என்ன செய்து விட்டேன் இவனுக்கு? மென்மையாய்தான் எல்லா விஷயங்களையும் செய்கிறான், ஆனால் சூறாவளி போல், என் உணர்வுகளை வளைக்கிறான். கண்மூடித்தனமான அன்பில் என்னை ஏன் குளிப்பாட்டுகிறான். அளவில்லா தன்னம்பிக்கையினை எனக்கு கொடுத்து விட்டு, அவன் அன்பினில் நிலை தடுமாற வைக்கிறான்?!

உணர்வின் பிடியில், அவள், அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளையறியாமல், அவளது கை, அவனது கையை இறுகப் பற்றியிருந்தது.

அவளது உணர்வுகளைப் புரிந்திருந்த அவன், அவளை இலகுவாக்க நினைத்தவன், எல்லாம் சரி, இதுக்குனாச்சும் தாங்ஸ் சொல்லுவியா என்றான்…

அவளும், அதெல்லாம் சொல்ல முடியாது என்றாள். அவள் கிண்டலாகச் சிரித்தாளும், உதடுக்குள் முணுமுணுத்தாள்… திருடா!

அன்றிரவு, ப்ரேம் வீட்டில்.

மாப்ளை ஒரு முக்கியமான விஷயம் பேசணும்!

சொல்லுங்க மாமா! ஏதாவது பிரச்சினையா? (அவனுக்கு உள்ளுக்குள் இன்னமும் உதறல் இருந்தது)

1 Comment

  1. Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super
    Super super super super super super
    Super super super super super super
    Super super super super super super
    Super super super super super super

Comments are closed.