உன்ன என்னமோன்னு நினைச்சேன் – Part 3 129

ஆமா, என்னதான் அவர் தைரியமா இருந்தாலும், நடக்குறது நல்லதுக்கா இருந்தாலும், இன்னிக்கு அவர் பொண்ணு விடுதலைப்பத்திரத்துல கையெழுத்தாகியிருக்குங்கிற நாள் ங்கிறது அவருக்கு பெரிய அடியாயிருக்கும்! இந்த நிலையில, அவரை தனியா விடலாமா?

அவள் கண்கள் விரிந்தன. ஆமால்ல! இதை எப்புடி நான் யோசிக்காமல் விட்டேன்? ப்ரேமை இப்பொழுதெல்லாம், ஒரு பொருட்டாகவே நினைக்காததாலா, நடப்பவை எல்லாம் நல்லதுக்கே என்ற சந்தோஷமா அல்லது ராஜா இருக்காரு, எல்லாத்தையும் அவர் பாத்துக்குவாரு என்கிற நிம்மதியா. இவை எல்லாம் சேர்ந்து, மைதிலியை அப்படி யோசிக்க வைக்கவில்லை!

இப்பொழுதும் கிண்டலாக ராஜாவே சொன்னான். ரொம்ப யோசிக்காத, மூளை தேஞ்சிடும் என்றான். அவள் கோபமாக முறைக்கவும், சிரித்த படியே இருந்தவன் சீரியசானான். இல்ல மைதிலி, ஒரு ஆம்பிளைய எங்க அடிச்சா வலிக்கும்னு, இன்னொரு ஆம்பிளைக்கு ஈசியா தெரியும். அதான் என்னால, ப்ரேமே ஈசியா கவுக்க முடிஞ்சுது! அதே மாதிரிதான், ஒரு அப்பாவா எப்பிடி யோசிப்பாருன்னு என்னால் புரிஞ்சிக்க முடிஞ்சிது!

மைதிலிக்கு மனம் நிறைந்திருந்தது!

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், அவள் கைகளைத் தொட்டான்!

மைதிலி!

நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

இப்ப சந்தோஷமா? திருப்தியா?

அவளுக்கு, அவன் இந்தக் கேள்வியைக் கேட்டது மிகவும் சந்தோஷமாக இருந்தது.

ரொம்ப. இத்தனை நாளா இருந்த வலியெல்லாம் இன்னிக்கு போயி ரிலீஃபா இருக்கு! என்று சொல்லியவள் திடீரென்று பொய் கோபம் கொண்டிருந்தாள். இன்னிக்கு, நீங்களும் அங்க இருந்திருக்கனும். நாந்தான் சொன்னேன்ல, இதுக்கு மேல அவனால் ஒண்ணும் பண்ண முடியாதுன்னு. நீங்க இருந்து, அவன் மூஞ்சி போன விதத்தை பாத்திருக்கனும்! நீங்க மிஸ் பண்ணிட்டீங்க போங்க! சொல்லியவள் கோபமாக திரும்பி உட்கார்ந்து கொண்டாள்!

1 Comment

  1. Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super
    Super super super super super super
    Super super super super super super
    Super super super super super super
    Super super super super super super

Comments are closed.