உன்ன என்னமோன்னு நினைச்சேன் – Part 3 129

இல்ல, ட்ரைவ் நல்லாயிருந்துதில்லன்னு கேட்டேன்.

அது நல்லாதான் இருந்தது. ஆனா, நான் அதைக் கேக்கலை. நம்மளோட அடுத்த ஸ்டெப் என்னான்னு கேட்டேன்!

எனக்கே ஆச்சரியமாய் இருந்தது. மைதிலி! என்றேன்.

காலையிலியே பேசுனா, எங்க நான் திரும்ப ஃபீல் பண்ணுவேன்னோனுதானே, காலையில இருந்து இப்பிடி ட்ரைவ் கூட்டிட்டு போனீங்க! அவள் கிண்டலாகச் சொன்னாலும், அவளுக்கு அது பிடித்திருந்தது.

சரி லாங்க் ட்ரைவுக்கு கூட தேங்க்ஸ் இல்லையா?

அதெல்லாம் சொல்ல முடியாது! இப்பொழுது சீரியசாகவே கேட்டாள், என்ன பண்ணலாம்?

சொல்றேன். முதல்ல ப்ரேம்தான் டார்கெட்! அவுட்லைன் மட்டும் சொல்லுறேன். நானும் லாய்ர்கிட்ட எல்லாம் டிஸ்கஸ் பண்ண வேண்டியிருக்கு. மெதுவாக அவன் திட்டத்தைச் சொல்ல ஆரம்பித்தான்.

மைதிலிக்கும் அது ஓகேயாய் இருந்தது.

சரி, ப்ளான் எப்பயிருந்து ஆரம்பிக்கிறது?

முதற்கட்ட வேலை, லீவ் முடிஞ்சி ரெண்டு மூணு நாள்ல ஆரம்பிச்சிடலாம். அதுக்குள்ள, உங்க வீட்டு வீடீயோவும் கிடைச்சிடும். டிடக்டிவ் ஆளுங்க ரிப்போர்ட் ரெடி பண்ணச் சொல்லிடலாம். அப்பதான் பெருசா எந்தப் பிரச்சினையும் இருக்காது.

ரெண்டாவது கட்ட திட்டத்தப்பதான், நீ கேர்ஃபுல்லா இருக்கனும். உனக்கு கூட ஆளு பாதுகாப்பா இருக்கனும். ரெண்டாவது கட்டம், இன்னும் ஒன்றரை மாசம் கழிச்சு வெச்சுக்கலாம்.

ஏன் அவ்ளோ நாள் கழிச்சு?

முத கட்டம் முடியுறதுக்கே, நமக்கு அவ்ளோ நாள் ஆகிடும். முதற்கட்ட விஷயங்கள் ப்ரியாவுக்கு தெரிஞ்சா பிரச்சினையேயில்லை. ஆனா, ரெண்டாவது கட்டத்துல, ப்ரியாவுக்கு ஒரு மேட்டரும் தெரியக் கூடாது. ப்ரியாவுக்கு, சின்னதா ஒரு ஆன்சைட் ஒர்க் இருக்கு. அது மோஸ்ட்லி, ஒரு மாசம் கழிச்சு போற மாதிரி இருக்கும். அவ போயிட்டு ஒன் ஆர் டூ மந்த்ஸ்ல வந்துடுவா! சோ, அதுதான் பெஸ்ட் டைம்!

ம்ம்ம்.. கரெக்டுதான். என்று சொல்லியவள் திடீரென்று கண் கலங்கினாள். அப்பாகிட்ட இதை எப்பிடிச் சொல்லப் போறேன்னு தெரியலை. அவரு இதை எப்பிடி தாங்கிக்கப் போறாருன்னும் தெரியலை.

கவலைப் படாத மைதிலி, அதை ஒரு வாரம் கழிச்சு யோசிச்சிக்கலாம். நான் அதுக்கும் எப்படின்னு யோசிச்சி சொல்றேன். முக்கியமான விஷயம், நீ எப்பியும் போல இருக்கனும். ப்ரேம்கிட்ட நீ எந்த வித வார்த்தையையும் விட்டுடக் கூடாது. மீதி விஷயங்களை நான் பாத்துக்குறேன்.

மீதியிருந்த இரு நாட்களில், அவர்கள், மற்றப் பல விஷயங்களை மட்டுமே பேசினர். நடந்தது எவ்வளவு பெரிய அதிர்ச்சியாய் இருந்தாலும், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று எடுத்திருந்த முடிவும், நாமும் அவர்களை சும்மா விடப்போவதில்லை என்ற எண்ணமும், எல்லாவற்றுக்கும் மேலாக இருவரது அருகாமையும், இருவருக்கும் தனித் தெம்பைக் கொடுத்திருந்தது!

இரண்டு நாட்கள் கழித்து அவரவர் வீட்டுக்குத் திரும்பும் பொழுது, ப்ரேம், ப்ரியாவை பார்க்க வேண்டுமே, என்ற கடுப்பும், நாங்கள் பிரிய வேண்டுமே என்ற வலியும் மட்டுமே இருந்தது.

ஒரு வாரம், திட்டப் படி, சந்திக்க வேண்டிய ஆட்களை சந்தித்தேன். டிடக்டிவ் ஏஜன்சி ரிப்போர்ட்டும் ரெடியாயிற்று.

வெள்ளி மதியம், மைதிலிக்கு அழைத்து, நாளை ஆஃபிஸ் போவது போல் கிளம்பி, கோடம்பாக்கம் வந்து விடு என்றேன்.

அவள் வீட்டுக்கு வந்த போது மணி 10.

ஒரு முக்கியமான விஷயம் பேசனும் மைதிலி!

1 Comment

  1. Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super
    Super super super super super super
    Super super super super super super
    Super super super super super super
    Super super super super super super

Comments are closed.