“அது தான் இல்லை..பக்கத்து ஊரில் வாசம் செய்யும் ஒரு ஏழை அந்தணனுக்கு உங்களை மணம் முடிக்க பேச சென்று உள்ளார்..மாப்பிள்ளை வீட்டார் சம்மதித்த உடன் ரெண்டே நாட்களில் உங்களுக்கு திருமணம்..தங்களை அழைத்து வர விராடன் என்னிடம் ரதத்தை கொடுத்து அனுப்பி உள்ளார்.தாங்கள் வந்தாலும்,வராவிட்டாலும் ரதத்தை நான் மட்டும் திரும்ப சென்று ரதத்தை ஒப்படைக்க வேண்டும். உங்கள் வரவை எதிர்நோக்கி இருக்கும் இளவரசர் நீங்கள் வராவிட்டால் அவர் மனம் நொந்து விடாதா..!அதுவே உங்களை காலம் முழுக்க அவர் வெறுக்க காரணமாகி விடுமே..!,உங்களுக்கு முன் ரெண்டு வழிகள் உள்ளன..ஒன்று மாபெரும் பரந்து விரிந்த தேசத்திற்கு மகாராணியாய் முடிசூட்டிக் கொண்டு எங்களை எல்லாம் ஆள்வது.இன்னொன்று ஒரு பஞ்ச பராரிக்கு வாழ்க்கைபட்டு காலம் முழுக்க கஷ்டப்பட வேண்டியது..இதில் எது வேண்டுமோ தாங்களே தீர்மானித்து கொள்ளுங்கள்..”என தூண்டில் வீசி விட்டு மீன் சிக்குமா என காத்து இருக்காமல் வந்த வழியே ஆரா திரும்ப நடக்க ஆரம்பித்தான்..
விலாசினி நகம் கடித்து யோசிக்க ஆரம்பித்தாள்..”என்ன இது நான் கற்பனை செய்த வாழ்க்கை கிடைக்கும் பொழுது தவற விடலாமா…”என அவள் மனம் யோசித்தது..ஆசை காட்டியது..முடிவில் ஆசையே வென்றது..ஆசையே துன்பத்திற்கு காரணம் என புத்தர் சும்மாவா சொன்னார்.
ஒரு அடி எடுத்து வைக்க அவள் மனம் பலமுறை யோசித்தது.. உடனே “ஆரா” என்று அழைத்தாள்.கடைசியில் ஆரா போட்ட தூண்டிலில் தங்க மீன் சிக்கி விட்டது.ஆனால் தின்ன போகும் அதிர்ஷ்டம் யாருக்கு இருக்க போகிறதோ..
விலாசினி அவனிடம்”நான் வரேன்.ஆனா ஒரு நிபந்தனை.உன் மனைவி என் கூட வர வேண்டும்..”
“கண்டிப்பா உடன் வருவாள் தேவி..”
விலாசினிக்கு கிளம்ப வேண்டும் என்ற எண்ணம் வந்த உடன் அவள் இரு கால்களுக்கு நடுவில் உள்ள தேன் சுரங்கத்தில் ஊறல் எடுத்தது..
மறைவிடத்தில் நின்று இருந்த ரதத்தை ஆரா வெளியே கொண்டு வந்தான்.அது நான்கு வெள்ளை குதிரை பூட்டப்பட்ட ரதம்..
ரதத்தில் விலாசினியும்,கனகாவும் ஏறிக்கொள்ள, ஆரா சாரதியாக மாறி ரதத்தை செலுத்தினான்.. விலாசினி கிட்ட போகும் சந்தோஷத்தில் வேகமாக அவன் ரதத்தை செலுத்த மாயமலை நோக்கி வேகமாக ரதம் பறந்தது..
மாயமலை நெருங்க நெருங்க சூரியன் அந்தி சாயும் நேரத்தில் இயற்கை எழில் காட்சிகள் வரவேற்றன.காடு,மேடு பயணித்த ரதம் மாயமலை கோட்டை நெருங்கிய உடன் வழி சமதளமாக மாறியது..
“தேவி, அதோ மாயமலை கோட்டை வந்து விட்டது பாருங்கள்.எப்படி ஜகஜோதியாய் ஜொலிக்கிறது பாருங்கள்..நேற்று நான் வந்த பொழுது பாழடைந்து இருந்தது..ஆனால் இன்று தங்களை வரவேற்க இளவரசர் மிகப்பெரிய ஏற்பாடுகளை செய்து உள்ளார்..ஆகா..என்ன அழகு”என்று வர்ணித்தான்.
மாயமலை கோட்டை கதவு திறந்தே இருந்தது.ரதம் உள்ளே பிரவேசித்த உடன் எப்படியும் அவர்கள் வெளியே திரும்ப போவது இல்லை என கோட்டை கதவு தானாக சாத்தி கொண்டது.
“வாருங்கள் தேவி,இளவரசர் உள்ளே தான் இருக்கிறார்,என ஆரா முன்னே செல்ல விலாசினி பின் தொடர்ந்தாள்..
முதன்முறை அரண்மனையை பார்த்த சந்தோஷத்தில் பார்வையை நாலாபுறமும் அவள் கண்களை ஓடவிட்டு அரண்மனை பிரமாண்டத்தில் ஆச்சரியத்தில் மூழ்கினாள்.மேலே பார்க்க, விண்ணை முட்டும் அளவுக்கு கூரை இருந்தது..அதில் வரையப்பட்ட ஓவியங்களில் அவள் மனம் மூழ்கியது.. பர்ண சாலையில் வளர்ந்தவளுக்கு அரண்மனையின் பிரமாண்டம் வியப்பு கடலில் மூழ்கடித்தது.
“யப்பா எவ்வளவு உயரம் ஆரா..இந்த அரண்மனையை எப்படி கட்டி இருப்பாங்க..”என விலாசினி கேட்க,முன்னே சென்ற ஆராவையும் காணவில்லை.. பின்னே வந்த கனகாவையும் காணவில்லை..
ஆரா….,கனகா.. என்று கூச்சல் எழுப்ப,அவள் குரல் மட்டுமே அரண்மனை சுவர்களில் பட்டு எதிரொலித்தது..அவள் குரலையே கேட்டு அடிவயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறந்தது..
“மீண்டும் ஆரா…கனகா… விராடா..”என ஒலி எழுப்பினாள்.ஆனால் எந்த பதிலும் இல்லை..
ஆனால் யாரோ தன்னை பின்தொடர்வது போல அவள் உணர்ந்தாள்..
காத்தவராயனும்,”ஆகா என்ன அழகு ..!என்ன அழகு..!ரம்பையை தோற்கடிக்கும் அளவுக்கு அல்லவா இவளிடம் அழகு கொட்டி கிடக்கிறது..ஆள் பார்க்க வெள்ளை பணியாரம் போல இருக்கிறாள்..இவளை இன்று இரவு ஆசைதீர அனுபவிக்க போகிறேன்..இன்று வரலாற்றில் முதன்முறையாக தேவ இரத்தமும்,அசுர இரத்தமும் ஒன்றாக இணைய போகிறது..ஹாஹாஹா…”என்று காத்தவராயன் சிரித்தான்.
நிகழ் காலம்
காளிங்கன் செய்த செய்கை அனன்யாவிற்கே ஆச்சரியமாக இருந்தது.தாவணியை பறிகொடுத்த அனன்யாவிற்கு அவன் சட்டையை கழட்டி அணிவித்தான்.
“என்ன ஆச்சரியமா பார்க்கிற அனன்யா..!நான் கேட்டதை தான் நீ கொடுத்துட்டீயே..!பாவம் என்னால தான் உன் தாவணி போச்சு..அதனால் தான் என் சட்டையை கழட்டி கொடுத்தேன்..சரி போலாமா..”
கொடுத்தது என்ன..!என்று அவன் சுட்டிக்காட்டி பேசியது அவளுக்கு லேசா கோபத்தை தூண்டினாலும் உள்ளுக்குள் சிரிப்பை தூண்டியது.அது லேசாக அவள் இதழில் வெளிப்பட்டது..அதை காளிங்கனும் கவனிக்க தவறவில்லை.
ஏற்கனவே இருள் கவிழ்ந்து இருந்தது..மொபைலில் இருந்த வெளிச்சம் கொஞ்ச தூரத்துக்கு தான் தெரிந்தது..பாதையை கவனித்து நடக்க தான் வெளிச்சம் போதுமானதாக இருந்தது.இருட்டில் வழி தெரியாமல் இருவரும் மாறி மாறி ஒரே இடத்தில் சுற்றி கொண்டு இருந்தனர்..
“டாக்டர்..!ஒரே இடத்தில் சுத்திட்டு இருக்கோம்.நிலா வெளிச்சம் இருந்தும் வழி தெரியலயே..எப்படி வெளியே போவது..?”
காளிங்கன் கொஞ்சம் சோகமாக”இதுக்கு தான் அனன்யா..இருட்டுவதற்குள் வழுக்கு பாறை போய் சேர்ந்து விட வேண்டும் என நினைச்சேன்..ஆனால் முடியல..இப்போ என்ன பண்றது..”சுற்றும் முற்றும் பார்த்தான்..
“அங்கே பார் அனன்யா..”என்று ஒரிடத்தை காண்பித்தான்..
இரண்டு மரங்களுக்கு நடுவில் உயரத்தில் சாரங்கள் அமைத்து மேடை போன்று இருந்தது..பார்ப்பதற்கு வயற்காட்டில் மிருகங்கள் நடமாட்டத்தை கண்காணிக்க உயரமாக மேடை அமைத்து இருப்பர்.இன்னும் சொல்ல போனால் கும்கி படத்தில் விக்ரம் பிரபு தங்குவதற்கு சாரம் கட்டி இருப்பாங்களே..!அதே போல தான்.ஆனால் இதில் ரெண்டு மரங்களுக்கு நடுவில் சேர்ந்தார் போல படுப்பதற்கு அமைத்து இருந்தனர்.நான்கு பேர் தங்குவதற்கான வசதி மேலே இருந்தது.
காளிங்கன் அந்த இடத்தை சுட்டி காட்டி”அனன்யா அங்கே பாரு,அதில் ஏறி பார்த்தால் ரொம்ப தூரம் வரை தெரியும்.அதை வைத்து வழி கண்டுபிடித்து விடலாம்..வா உடனே அந்த இடத்திற்கு போகலாம்..”
அனன்யா கண்களில் பயத்துடன்”காட்டில் இங்கே வந்து இதுபோன்று யாரு மேடை அமைச்சு இருப்பாங்க.வேற யாராவது இங்கே இருக்காங்களா..”என கேட்டாள்.
“இது வேட்டைகாரங்க இரவில் தங்கி வேட்டையாட கட்டி வச்சு இருப்பாங்க அனன்யா..!நான் மேலே ஏறி பார்க்கிறேன்..”
அனன்யா கீழே நிற்க,காளிங்கன் மட்டும் கயிறால் அமைத்து இருந்த ஏணியில் ஏறி நாலாபுறமும் பார்த்தான்..அவனுக்கு வழுக்கு பாறை போக வழி தெரிந்தது..ஆனால் அவன் கண்கள் ஒரு இடத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தன.
