அதை கேட்டு கனகா அதிர்ந்தாள்.”அது எப்படி நம் பேச்சை கேட்டு விலாசினி நம் கூட மாயமலைக்கு வருவா..”
“கண்டிப்பா வருவா..கனகா..!கூப்பிடுகிற விதத்தில் கூப்பிட்டா கண்டிப்பா வருவா..அதுவும் நான் மட்டும் போய் தனியா கூப்பிட்டா கண்டிப்பா வர மாட்டா..துணைக்கு நீயும் வருவேன் என்று சொன்னால் மட்டும் தான் வருவா..அதுக்கு தான் நான் உன்னை கூப்பிடறேன்..”
“சரி இப்போ எங்கே இருக்கா அவ..சொல்லு?”
“வரும் வழியில் செண்பக தோட்டத்தில் அவளை பார்த்தேன்.சோகமா கண்ணீர் வழிய உட்கார்ந்து இருந்தா..”
“சரி வா போகலாம்..”என கனகா கிளம்ப,அவள் தலையில் கூரையில் சொருகி இருந்த கொம்பு குத்தியது..
“ஆ…”தலையை தேய்த்து கொண்டே,..”டேய் மச்சான் ஏதோ தப்பா நடக்க போகுது என நினைக்கிறேன்..”கனகா கூற,
“எனக்கு கூட தான் நேற்றில் இருந்து நெஞ்சில் ஏதோ குத்திய மாதிரி உணர்வு..ஒரு நல்லது நடக்க போவதற்கு முன்னாடி இந்த மாதிரி ஆயிரம் தடைகள் வரும்..அதை எல்லாம் கண்டுக்காதே..!நீ கிளம்பி வா..”
கனகா யோசித்து தயங்கி நின்றாள்.
“இங்க பாரு கனகா ,நேரம் ஆயிட்டே இருக்கு,வீணா மனசை போட்டு குழப்பிக்காதே..!அதெல்லாம் ஒன்னும் இல்லடி,நேரமாச்சு வாடி போலாம்..இப்பவே கிளம்பினால் தான் இரவு நாம் மாயமலையை போய் சேர முடியும்..”
செண்பக தோட்டத்தில் சோகமே உருவாய் அமர்ந்து இருந்த விலாசினியிடம் இருவரும் சென்றனர்..
ஆராவை பார்த்த உடன்,எழுந்து செல்ல முயன்ற விலாசினியை பார்த்து ஆரா..”ஒரு நிமிஷம் நில்லுங்க தேவி,நான் உங்களிடம் ஒரு நற்செய்தியை சொல்லவே வந்துள்ளேன்..”
“என்னவென..!” பேசாமல் புருவத்தை மட்டும் உயர்த்தி கேள்வியாய் விலாசினி கேட்டாள்..
“அய்யோ பார்வையாலே கொல்றாளே..!இந்த திமிருக்குதான்டி,உன்னை போட துடிக்குது என் குஞ்சு..”என ஆரா மனதுக்குள் வெதும்பினான்.
ஆரா அவளை விழுங்கும் கண்களுடன்”தேவி நான் தேனேடுக்க மாயமலை எல்லையோரம் நேற்று சென்றேன்..அங்கு தங்கள் ராஜகுமாரரை கண்டேன்..அவர் தங்களை உடனே மாயமலைக்கு அழைத்து வர சொன்னார்..”
‘யாரை சொல்கிறாய்..நீ..”விலாசினி புரிந்தும் புரியாமலும் கேட்க,
ஆராவிற்கு தான் யாரை சொல்கிறோம் என்று அவள் தெரிந்தும் நடிக்கிறாள் என அவனுக்கு புரிந்தது.இருந்தும் பொறுமையாக”இரு தினங்களுக்கு முன்பு இங்கு வந்த கனிஷ்க இளவரசர் விராடனை தான் சொல்கிறேன் தேவி,தங்கள் தந்தை சொன்னது பாதி பொய் ,பாதி உண்மை..அதாவது விராடன் ,காத்தவராயன் மைந்தன் தான்.ஆனால் தங்கள் தந்தை சொல்வது போல காத்தவராயன் ஆவி ஏதும் அங்கே இல்லை..மக்களை நேசித்த மன்னன் இறந்து விட்டதால் அங்கிருக்க பிடிக்காமல் மக்கள் அனைவரும் மாயமலையில் இருந்து வெளியேறி விட்டனர்.
உங்கள் மனம் கவர் கள்வன் விராடன் மாயமலையை புனரமைத்து மீண்டும் மக்களை அங்கே குடியேற்றி,அங்கிருந்தே கனிஷ்க நாட்டையும் ஆள போவதாக எண்ணம் கொண்டுள்ளார்.அதற்கு ராணியாக தங்களை முடிசூட்டிக் கொள்ள அழைத்துள்ளார்..தங்கள் வருகைக்காக அவர் அங்கே காத்து இருக்கிறார்.”என்று சாமர்த்தியமாக பொய்யை இட்டு கட்டி சொன்னான்.
விலாசினி அவனை நம்பாமல்,”உன்னை நான் எப்படி நம்புவது?”
“தாங்கள் இந்த மாதிரி கேட்பீர்கள் என்று தெரியும் தேவி,அதனால் தான் இந்த கணையாழியை கொடுக்க சொன்னார்.மேலும் தங்களை கூட்டி போகும் பொழுது மணமகளின் தோழியாக இருப்பதற்கு என் மனைவியையும் உடன் அழைத்து வர சொன்னார்…”
“என் தந்தையின் அனுமதி இல்லாமல் எனக்கு திருமணமா..!கண்டிப்பா என்னால் வர முடியாது..”
இந்த பதிலை ஆரா சற்றும் எதிர்பார்க்கவே இல்லை,இப்போ விட்டா எப்பவுமே விலாசினி கிடைக்க மாட்டாள் என்று அவனுக்கு தெரிந்தது..அதனால் தன் முயற்சியை தொடர்ந்தான்..”சரி தேவி..!நீங்கள் வர வேண்டாம்..ஆனால் நான் சொல்வதை நம்புகிறீர்களா..”
“ம்ம்…”என மௌனமாக தலை அசைத்தாள்..
“தேவி,இன்னொரு முக்கியமான விசயம்..தங்கள் தந்தை அக்ரூரர் எங்கு சென்று இருப்பதாக நினைக்கிறீர்கள்..”
“பக்கத்து ஊருக்கு யாகம் செய்ய..”
