மன்னர் ஆர்வமாக,”எங்கே என் தங்கம்,அவள் இங்கு வரவில்லையா..”
“இல்லை மன்னா,அவர் வரக்கூடிய சூழ்நிலையில் இல்லை.தாங்கள் தான் அவரை சென்று காண வேண்டும்..”
“சரி பெண்ணே..என்னுடன் இப்போ அரண்மனைக்கு வந்து ஓய்வு எடு.நாளையே நாம் என் தங்கம் இருக்குமிடத்திற்கு செல்வோம்..”
“மன்னிக்கவும் மன்னரே…!தங்களுக்கு தகவல் சொல்ல மட்டும் தான் தேவியின் ஆணை..தேவி இருக்கும் இடமே எங்களுக்கு சொர்க்கம்.அவரை பிரிந்து வந்து 5 நாட்கள் ஆகிவிட்டன..அதுவே எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது.தேவி தங்கி இருக்கும் இடம் ஶ்ரீமுஷ்ணம்.நான் உடனே அங்கு செல்ல வேண்டும்.தங்களை வரவேற்க நான் அங்கு காத்து இருப்பேன்”என்று சொல்லிவிட்டு அவள் குதிரையில் தாவி ஏறி சிட்டென பறந்து விட்டாள்..
“ஆகா..!!மதிவதனி உயிரோடு இருக்கிறாள்..!அதுவே எவ்வளவு இனிப்பான செய்தி..மதிவதனி கருவுற்று இருந்தாள் என தகவல் வந்ததே..! பேரப்பிள்ளையும் மதிவதனி உடன் தான் இருக்க வேண்டும்.என் நாட்டை ஆள வாரிசு கிடைத்து விட்டது என மகிழ்ச்சியில் திளைத்தார்.
உடனே அமைச்சரை அழைத்து,பொறுப்புகளை அவரிடம் ஒப்படைத்து விட்டு உடனே அதிகாலையிலேயே கிளம்பி விட்டார்…
ஶ்ரீமுஷ்ணம்,மகேந்திரபுரியில் இருந்து செல்ல மாயமலை எல்லை வழியாக சென்றால் 12 மணி நேரத்தில் போய் சேர்ந்து விடலாம்..ஆனால் காத்தவராயன் ஆவியாக செய்து கொண்டு இருக்கும் அட்டகாசத்தினால் அந்த வழியை எல்லோரும் தவிர்த்தனர்..மேற்கு தொடர்ச்சி மலை கடந்து சேரநாடு சென்றால் தான் ஶ்ரீமுஷ்ணம் செல்ல முடியும்..
சுற்றி கொண்டு செல்வதற்குள் மறுநாள் அதிகாலை ஆகி விட்டது..மகேந்திரவர்மனும் மகளை காணும் ஆவலில் இரவு ஓய்வு எடுக்க கூட விருப்பமில்லாமல் ஶ்ரீமுஷ்ணம் சென்றடைந்து விட்டார்..
“எங்கே என் மகள்?என கண்கள் தேட,அவரை நான்கு பெண்கள் வரவேற்றனர்.அங்கு பூஜிக்கபட்டு இருந்த மரத்தை கண்டதும்,அதிர்ச்சி அடைந்தார்.
“இந்த மரம் என் கனவில் வந்த மரமல்லவா..?”என அவர் அதிர்ச்சி அடைந்து நிற்க,அந்த மரத்தை கண்டவுடன் அவர் கண்களில் கண்ணீர் தானாக வழிந்தது..யாரும் சொல்லலாமே மதிவதனி தான் மரமாகி இருக்கிறாள் என அவருக்கு தெரிந்து விட்டது.
அந்த பெண் பேச தொடங்கினாள்..”மன்னரே..!எங்களை வாழ வைக்கும் அரசி மரமாகி 20 வருடங்கள் ஆகி விட்டன..அவர் காத்தவராயனை முற்றிலும் அழிக்க எண்ணி நித்தம் நித்தம் தவம் இருக்கிறார்.உங்களை அழைத்து வர எங்களுக்கு ஆணையிட்டு இருந்தார்.அதனால் தான் உங்களை அழைக்க வந்தேன் நான்..”
“என் பெண்ணிடம் எப்படி நான் பேசுவது”மன்னர் நா தழுதழுக்க கேட்க.,
“மன்னா,மரத்தின் முன் உட்கார்ந்து,மனதை ஒருமுகப்படுத்துங்கள்..உங்கள் மகள் பேசுவது உங்களுக்கு கேட்கும்..”
மன்னரும் சம்மணமிட்டு அமர்ந்து,மனதை ஒருமுகப்படுத்திய உடன்,அவருக்கு மதிவதனி பேசுவது நன்றாக கேட்டது..
“தந்தையே..!உங்களிடம் ஒரு உதவி வேண்டியே நான் இங்கே அழைத்தேன்..”
“மதி,இது என்னம்மா கோலம்..!தந்தையிடம் நீ வந்து இருக்கலாமே..!,
“நான் வந்து இருந்தால் காத்தவராயன் மகேந்திரபுரியை முற்றிலும் அழித்து இருப்பான் தந்தையே..!அவன் என்னை தேடி மகேந்திரபுரி வந்தான்.நீங்கள் கவலைப்பட வேண்டாம்.காத்தவராயனை அழிக்க நான் மறுபிறப்பு எடுக்க போகிறேன்..நான் அடைய வேண்டிய இலக்கு மிக மிக அசாதாரணமானது..அதற்கு நீண்ட நாள் தவம் இருக்க வேண்டியே இந்த உருவை எடுத்து உள்ளேன்..”
“உதவி ஏதோ கேட்டாயே மதி”
“ஆம் தந்தையே..!என்னோட மகன் விராடன்,கனிஷ்க நாட்டில் வளர்ந்து வந்தான்.அவன் பிறப்பை பற்றிய எல்லா உண்மையையும் சகுந்தலா தேவி மூலம் அறிந்து கொண்டு,இப்போ மாயமலை நோக்கி சென்று கொண்டு இருக்கிறான்.அவன் காத்தவராயன் பிடியில் சிக்க போகிறான்.அவனை தாங்கள் அங்கிருந்து மீட்டு நம் வம்சத்தை தொடர வழி செய்ய வேண்டும்.அவன் வாழ்வது மிக அவசியம்..அவன் மூலமா தொடர போகும் காத்தவராயன் வம்சத்தின் வாரிசு,நான் மறுபிறப்பு எடுத்து காத்தவராயனை அழிக்கும் பொழுது எனக்கு அந்த வாரிசின் உதவி தேவை.அதனால் அவனை தாங்கள் மீட்டு கொண்டு வர வேண்டும்..”
“நான் உடனே நம் படைகளோடு சென்று அவனை மீட்கிறேன் மதி..”
“அது உங்களால் முடியாது தந்தையே..!அங்கே தாங்கள் படைகளோடு நுழைவதே அசாத்தியம்..அங்கே நுழைய வேண்டுமெனில் ஒருவர் உதவி தேவை.அவனை மீட்க நான் சொல்வதை போல செய்யுங்கள்..!அது ஒன்று தான் வழி..”
“என்ன வழி..மதி..!
“விராடன்,அதாவது என் மகன் விரும்பும் ஒரு பெண் காத்தவராயனிடம் கற்பை இழக்க போகிறாள்..”
