அசுரன் Part 31 42

மகேந்திரவர்மன் நல்ல உறக்கத்தில் இருந்த பொழுது ஒரு கனவு தோன்றியது..அவன் கனவில் ஒரு மரம் மட்டுமே திரும்ப திரும்ப வந்தது..தீடீரென “தந்தையே” என்று அழைக்க,திடுக்கிட்டு எழுந்தார்.

அவருக்கு மதிவதனி உயிரோடு இருப்பது போல தோன்றியது.உடனே அடுத்த நாள் காலையில் மாயமலையில் இருந்து குடியேறிய மக்கள் எந்தெந்த நாட்டில் குடியேறினார்களோ..! அங்கு எல்லாம் வீரர்கள் அனுப்பி மதிவதனி பற்றி விசாரிக்க சொன்னார்.
அதில் ஒருவனுக்கு மட்டும் விசயம் தெரிய,அவனை அரண்மனைக்கு உடனே அழைத்து வந்தனர்..

அவன்”அரசே..!ஒரு நடுஇரவில் மதிவதனி அரசி,நாலு பெண்களோடு மாயமலை விட்டு கிழக்கு நோக்கி சென்றதை பார்த்தேன்..ஆனால் அவர்கள் எந்த நாட்டுக்கு சென்றார்கள் என்று தெரியாது..அந்த நாலு பெண்களில் ஒருத்தியை சில நாட்களுக்கு முன் பார்த்தேன்..அவள் அப்பொழுது மகேந்திரபுரி சென்று அரசன் மகேந்திரவர்மனை பார்க்க போவதாக சொன்னாள்..கண்டிப்பா அவள் இந்நேரம் வந்து உங்களை சந்தித்து இருக்க வேண்டுமே..!”

உடனே வாயிற்காவலர்களை மன்னன் அழைத்து விசாரித்தான்..அவர்களும் ஒரு பெண் வந்ததை உறுதி செய்தனர்.

“பிறகு ஏன் அவள் வந்து என்னை சந்திக்கவில்லை.”அரசர் கேட்க,

“நாங்கள் தான் அனுமதிக்கவில்லை அரசே”

“ஏன்?”என்றார் மன்னன் கோபமாக,

“அவள் பார்க்க பஞ்சபராரி போல் இருந்தாள் அரசே…அதனால் நாங்கள் அனுமதிக்கவில்லை..”

“முட்டாள்களே..!உங்களை போன்று அதிமேதாவிகளை நான் பார்த்தது இல்லை.அமைச்சரே..!உடனே இவர்களை வாயிற்பொறுப்பில் இருந்து விடுவித்து வேறு பொறுப்புக்கு மாற்றுங்கள்..”

மன்னன் வேறு வீரர்களை அழைத்தான்.அவர்களிடம்”நீங்கள் உடனே இந்த மாயமலை நபரை அழைத்து கொண்டு ,அவன் சுட்டிக்காட்டும் பெண்ணை உடனே அழைத்து வாருங்கள்..”தீடீரென என்ன நினைத்தாரோ என்று தெரியவில்லை,”வேண்டாம் நானே சென்று தேடுகிறேன்..”என தகவல் சொன்ன நபரை ரதத்தில் சரிக்கு சமமாக அவனை அமர்த்திக் கொண்டு நாடு முழுக்க தேடினார்.

மதிவதனியிடம் இருந்து வந்த பெண்,மரம் ஏறி தேன்,கள் இறக்குபவள்.அதனால் வழக்கம் போல் அவள் மரத்தில் ஏறி ஒய்யாரமாக உச்சியில் அமர்ந்து தூங்கி கொண்டு இருந்தாள்..

மன்னர் வீதி உலா என்றால் சும்மாவா..மக்கள் கூடி ஒரே களேபரம் ஆகியது..தீடீரென எழுந்த மக்கள் சத்ததாலும்,மன்னன் வருகை பற்றிய அறிவிப்பும் அவளுக்கு விழிப்பை வரச்செய்தன..

உடனே விறுவிறுவென மரத்தில் இருந்து குதித்தாள்.ஓட்டமும் நடையுமாக கூட்டத்தை பிளந்து கொண்டு மன்னனை நோக்கி ஓடினாள்..வழக்கம் போல காவலர்கள் பயந்து அவளை தடுக்க,ரதத்தில் இருந்த மாயமலை ஆள் அவளை கவனித்து விட்டான்.

“இவள் தான் மன்னா..!என்று அவன் கூவ,

அவளுக்கு வழிவிட சொல்லி,மன்னர் ரதத்தில் இருந்து இறங்கினார்.

ஆவலோடு ஓடிவரும் அவளை பார்த்த உடன் மன்னனுக்கு மகிழ்ச்சி பொங்கியது..

ஓடிவந்து அவள் மூச்சுவாங்க”மன்னா,மதிவதனி தேவியிடம் இருந்து தங்களுக்கு தகவல் கொண்டு வந்து உள்ளேன்.அவர் தங்களை காண விழைகிறார்..”