கனகா குழப்பத்துடன்”அவனால் எப்படி மந்திரகட்டை உடைக்க முடியும்..அக்ரூரர் தன்னோட சாதி பெண்களுக்கு மட்டும் தானே அந்த மந்திரத்தை சொல்லி கொடுத்து இருக்கார்..”
“இல்லை கனகா.. மங்கள நாட்டு இளவரசி மங்களாதேவி உனக்கு தெரியும் தானே..”
“ஆமா சில ஆண்டுகளுக்கு முன்பு அதாவது விலாசினி பிறப்பதற்கு முன் இங்கே வந்து அக்ரூரர் ஆசிரமத்தில் சில நாட்கள் தங்கி இருந்தாங்க”
“மங்களா தேவிக்கும் அக்ரூரர்,அந்த மந்திரத்தை சொல்லி கொடுத்து இருக்கார்..ஆனா அந்த காத்தவராயன் உயிரோடு இருந்த பொழுதே இந்த மந்திரகட்டை உடைச்சி,அவளையும் அடைந்து விட்டான்.இப்போ ஆவியா வேறு இருக்கான்..சொல்லவா வேணும்..நான் காத்தவராயனுக்கு உதவினால் அவன் எனக்கு விலாசினியை அடைய உதவுவான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு..”
கனகா அவனிடம்”நீ சொன்ன ஆமை கதையை வைத்தே வச்சே உனக்கு உதாரணம் சொல்றேன் ஆரா.வானத்தில் பறக்கும் பொழுது ஆமை,குச்சியை விட்டாலோ,கொக்கு குச்சியை விட்டாலோ ஆமையை நிலையை நினைச்சு பார்த்தியா..அது போல தான் காத்தவராயன் ரொம்ப மோசனானவன்.அவனை நம்பி நீ போனால் உன் நிலைமையும் அந்த ஆமை நிலைமை போல தான் ஆகும்..தேடி போய் ஆபத்தை விலை கொடுத்து வாங்காதே..!”என எச்சரித்தாள்..
“இங்க பாருடி கனகா..காத்தவராயன் ஒரு பெண் பித்தன்,அவனோ ரொம்ப நாளாக இந்த பொன்னமராவதி பெண்களை சுவைக்கணும் என ஏங்கிட்டு இருக்கான்.அதுக்கு நான் வழி ஏற்படுத்தி கொடுத்தா,பதிலுக்கு எனக்கு அவன் உதவ மாட்டானா..!அவனும் பெண் பித்தன்,நானும் பெண் பித்தன்..கூட்டி கழிச்சு பாரு..கணக்கு சரியா வரும்.”
“சரி இப்போ என்ன தான் முடிவு பண்ணி இருக்கே…!”
“மாயமலை செல்ல போறேன்..அங்கு போய் காத்தவராயன் கிட்ட உதவி கேட்க போறேன்..”
“வேண்டாம் ஆரா இது விஷப்பரிட்சை..”கனகா மீண்டும் எச்சரித்தாள்..
‘இல்ல கனகா..!விலாசினிக்கு இப்போ தான் விராடன் மேல காதல் வந்து இருக்கு.அவளை இங்கிருந்து ஏதாவது ஒரு காரணம் சொல்லி வெளியே கூட்டி போக சந்தர்ப்பம் அமைஞ்சு இருக்கு.இதை விட்டால் வேற நல்ல சந்தர்ப்பம் வாய்க்காது.அவளோட பொன்மேனியை அனுபவிக்க எந்த ஆபத்தையும் நான் சந்திக்க தயார்.அதுக்கு நீதான் உதவி செய்யணும்..”
“என்னை ஏன்யா இந்த ஆட்டத்தில் இழுக்கிறே..”கனகா பயந்தாள்.
“வேற வழி இல்லை கனகா..எனக்கு நீதான் உதவி புரியனும்.முடமா இருக்கும் புருஷனை விபச்சாரி வீட்டுக்கு தோளில் சுமந்து சென்றாளாம் நளாயினி,அவளை மாதிரி உன்னை சுமந்து போக சொல்லல..ஆனா உதவி செய்தால் போதும் என்று சொல்றேன்..”
“சரி இப்போ நான் என்ன செய்யணும்”
“முதலில் நான் மாயமலை போய்ட்டு வரேன்.போய்ட்டு வந்து என்ன உதவி என்று சொல்றேன்..”
ஆரா மாயமலை நோக்கி கிளம்பினான்..
காத்தவராயனுக்கு பயந்து மாயமலையில் இருந்து மக்கள் வேறு வேறு நாடுகளுக்கு இடம் பெயர்ந்து விட்டனர்.அப்படி குடியேறிய நாடுகளில் மதிவதனியின் மகேந்திரபுரியும் ஒன்று..காத்தவராயன் பற்றி வந்த தகவல்கள் மன்னன் மகேந்திரவர்மனுக்கு அச்சமூட்டின.மதிவதனி உயிர் நீத்து விடுவதாக சொல்லி இருந்தாளே..என் தங்கத்திற்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லையே..!
மதிவதனி பற்றி விசாரித்தும் எந்த தகவலும் இல்லை..அவள் உயிர் இழந்து இருப்பாள் என மன்னன் எண்ணி ஆண்டுகள் பல கடந்து விட்டன. மன்னனும் முதுமை பிராயத்தில் இருந்தான்.முதுமை வந்த பிறகு தான் நாம் செய்த தவறுகள் எல்லாம் கண்முன் வந்து நிற்கும்.மதிவதனியை எப்பாடுபட்டாவது காத்தவராயனிடம் இருந்து மீட்டு கொண்டு வந்து இருக்க வேண்டும் என வருந்தினான்..
