வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் நான்கு 59

ஓ எஸ்! இன்னிக்குதான் நல்ல படியா முடிஞ்சுது. ஃபைனலி, 500 க்ரோர்ஸ் லாபம்!

500 கோடி லாபமா? வெரி குட். வெரி குட்.

தாங்க்ஸ்!

500 கோடி லாபம்னா, 1 கோடி உனக்கு பெருசா தெரியாது இல்ல? மோகனின் குரலில் நக்கல் நன்றாகவே தெரிந்தது!

என்ன மாமா சொல்லுறீங்க?

மறந்துட்டியா மதன்? என்கிட்ட பெட் கட்டியிருந்ததை? இன்னியோட நீ சொன்ன நாள் முடியப் போகுது.

ஊப்… ச்சே! ஆமால்ல, இந்தப் பிரச்சினைல்ல அதை மறந்தே போயிட்டேன்! ச்சே! என்று சொல்லி, என் தலையில் கை வைத்து யோசித்த படியே அமர்ந்தேன்.

இது வரை கொஞ்சம் ஆழம் பார்த்துக் கொண்டிருந்த மோகனும், நான் உண்மையாலுமே மறந்து விட்டதாக நினைத்து, மிகவும் தெம்படைந்தான்.

பின், நான் யோசித்தவாறே மோகனைப் பார்த்தேன்.

ஏன் மாம்ஸ், உங்களுக்கே சிச்சுவேஷன் தெரியுமில்ல? பேசாம, இன்னிலருந்து, அடுத்த வாரம் வரைக்கும் டைம் தர்ரீங்களா?

ஹா ஹா ஹா! ஏன் மதன், நாந்தான் சொன்னேனில்ல, இதெல்லாம் உனக்கு செட்டாகாதுன்னு! நீ சின்னப் பையன் மதன்! உனக்கு ஏன் இந்த வேலையெல்லாம்? மோகனிக் பேச்சில் மிக அப்பட்டமான நக்கல்.

சரி, இன்னும் ஒரு வாரத்துக்கு ஓகேயா?

இன்னும் ஒரு மாசம் வெச்சாலும், உன்னால முடியாது மதன்! நான் சொல்றதை கேளு! பேசாம, தோத்தேன்னு ஒத்துகிட்டு, பணத்தைக் கொடுத்திடு!

கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க மாம்ஸ்!

உன்கிட்டதான் ஏகப்பட்ட பணம் இருக்கே மதன்! ஒரு கோடி உனக்கு பிசாத்து தானே? எனக்குதானே தர்ற? அதுல என்ன சங்கடம்?

எனக்கு கூட, எனக்கு ஒரு கோடி பெருசில்ல மதன்! ஆனா, இந்த விஷயத்துல் நாந்தான் பெஸ்ட்டுன்னு வர்றதை எப்டி நான் விட்டுத் தர முடியும்?

நானா, உன்கிட்ட பெட்டு கட்டினேன். நீதான் பெருசா பேசுன? இப்ப பேசுன பேச்சை மாத்துறியே? இப்டிதான் நீ பிஸ்னஸ் டீல் பண்ணுவியா?

மோகனின் குரலில் நக்கலும், என்னதான் பணம் முக்கியமில்லை என்றாலும், ஒரு கோடியின் மீதான பேராசையும் நன்கு தெரிந்தது.

அப்ப சவால்னா சவால்தான்? நீங்க கொஞ்சம் கூட கன்சிடர் பண்ண மாட்டீங்க இல்ல?

உனக்காக கன்சிடர் பண்ணலாம்தான் மதன். பட், இது என் திறமையை நீ குறைச்சு பேசிட்டீல்ல? அதை எப்டி நான் விட்டுத் தர முடியும் சொல்லு? இது நீயா தேடிகிட்டது. அதுனால, பேசாம, ஒரு கோடியைக் கொடுத்திடு!

நான் பெரு மூச்சு விட்ட படி, அமைதியாக எழுந்து செக் புக்கில், ஒரு கோடிக்கு செக் எழுதி, அதைக் கிழித்தேன்.

செக் எழுதும் போது, மோகன் சொன்னான், இன்னிக்கு ஃப்ரைடே. வழக்கம் போல ட்ரிங்க்ஸ் சாப்பிடலாம். நீயும் தோத்த கவலையில இருப்ப. அதுனால நீயும் சாப்டு, சரியாயிடும்! என்ன சொல்ற?

அமைதியாகச் செக்கைக் கிழித்தவன், அதை வாங்க கையை நீட்டிய மோகனிடம் கொடுக்காமல், மடித்து என் சட்டைப் பாக்கெட்டில் வைத்தேன்.

என்ன மதன்?

காலையில கொடுக்குறேன் மாம்ஸ்! நாளைக் காலை வரை நமக்கு டைம் இருக்குல்ல? என்னாதான் நீங்க வின் பண்னிட்டீங்கன்னாலும், அந்த டைம் முடிஞ்சுதான, பேமெண்ட் பண்ணனும். அப்டித்தானே பிஸ்னஸ் டீல் நடக்கும்.

நான் மிகக் கேஷூவலாகச் சொன்னதும், நானே தோற்றதுமாக ஒப்புக் கொண்டதும் சேர்ந்து மோகனது லேசான சந்தேகத்தையும் களைந்தது.

1 Comment

  1. Raji ma wait ur mail

Comments are closed.