வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் நான்கு 59

என்ன மாம்ஸ்? ஓவர் பில்டப் கொடுத்தீங்க. இப்ப சைலண்ட் ஆயிட்டீங்க? அவ்ளோதானா, உங்க கெத்து? இதுக்கா, அவ்ளோ பெரிய பில்டப்பு?

எனக்கென்ன பயம்? ஆனா, நீ ஏன் இந்த சவால் விடுற? ஒரு வேளை, நீ யாரையாவது லவ் பண்ணிகிட்டு இருந்து, அவளை தொட்டா? என் அளவுக்கு இதுல எக்ஸ்பீரியன்ஸ் இல்லாட்டியும், உன் காசுக்கு, ஸ்டேட்டசுக்கு, நீ சும்மா கூப்பிட்டாலே ஒரு சிலர் வருவாங்க!

அவன் புத்திசாலி என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தான். ஆனால், நான் மிகச் சரியாக அவனை உசுப்பேற்றினேன்.

யோவ் மாம்ஸ், லவ் பண்ற பொண்ணை உன் முன்னாடி தொடுறதுக்கு, நானும் உன்னை மாதிரி கேவலமானவன்னு நினைச்சியா? இது நீ ஓவரா பேசுனதுனால விடுற சவால். எனக்கு இருக்குற வேலைக்கு மத்தியில, இதுக்கு ஃபோகஸ் பண்ணனும்கிறதே, எனக்கு லாஸ்தான்.

நான் சொன்ன மாதிரி, தொடக் கூடிய பொண்ணூ, உனக்கு நல்லா தெரிஞ்ச பொண்ணா இருக்கும். ஓகேயா? ஆனாலும், நீ வெறும் வாய்தான்யா! முழுசா ஒரு கோடி, நான் தோத்தா. ஆனா, இவரு தோத்தா, நயா பைசா வேணாம்னு சொல்லியும், இவ்ளோ யோசிக்கிற பாத்தியா, அங்கியே நான் ஜெயிச்சிட்டேன்!

சரியாக மாட்டினான் மோகன். இல்லை மதன், நான் சவாலுக்கு ஒத்துக்குறேன். ஆனா, தோத்தா ஒரு கோடி தரணும், ஓகே? இப்பொழுது அவன் மிகுந்த கான்ஃபிடண்ட்டுடன் இருந்தான்.

ஓகே, சரியா, அடுத்த சனிக்கிழமை காலை 6 மணிக்குள்ள நான் நடத்திக் காட்டுறேன்! ஓகே?

என்னைப் பற்றி முழுதாக அறியாத மோகன், மிகச் சரியாக என் வலையில் விழுந்தான். என் மனமோ, இன்னமும் செய்ய வேண்டிய செயல்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தது!

நான் எப்படி பழி வாங்கப் போகிறேன் என்று, அனைவருக்கும் புரிந்திருக்கும்! ஆனால், அவனது கேவலங்களுக்கு, அது மட்டும் போதுமா???

என் திட்டப்படி, மிகச் சரியாக, ஞாயிறு காலை, இருவரும் சாப்பிடும் போது, எனக்கு ஒரு ஃபோன் கால் வந்தது. மோகன் முன்புதான் நான் பேசினேன். நான் பேசிய முறையினைப் பார்த்து, மோகனே கேட்டான்!

என்ன மாப்ளை ஏதாச்சும் பிரச்சினையா?

எஸ்! ஒரு முக்கியமான காண்ட்ராக்ட், அதுல பெரிய பிரச்ச்சினை!. ஏறக்குறைய 500 கோடி வேல்யூ ப்ராஜக்ட்! செம ப்ராஃபிட் ப்ராஜெக்ட். அதுல சொதப்பியிருக்காங்க, ஆஃபிஸ்ல!

அய்யய்யோ, இப்ப என்ன பண்ணப் போறீங்க?

நான் சாப்ட்டு ஆஃபிஸ் கெளம்புறேன். இன்னும் நாலைஞ்சு நாளைக்குள்ள இதை க்ளியர் பண்ணாட்டி பெரிய லாஸ்!

உள்ளுக்குள் மகிழ்ந்தாலும், ஓ, சரி மாப்ளை நீங்க கிளம்புங்க. பாத்துக்கலாம்.

சரியாக, அடுத்த வெள்ளி மாலை வரை, வேண்டுமென்றே, மிக லேட்டாக வீட்டுக்கு வந்து, மிக ஏர்லியாக கிளம்பிக் கோண்டிருந்தேன். மோகனைப் பார்ப்பதே, காலையில் கிளம்பும் போதுதான் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கியிருந்தேன்.

இடையில், வியாழக்கிழமை மதியம், சீதாவுக்கு ஃபோனில், வீடியோகாலில் அழைத்திருந்தேன்…

ஹலோ …

சொல்லுங்க, இப்பல்லாம் ரொம்ப பிசியாயிட்டீங்க போல!

ஏன் அப்படிச் சொல்ற?

1 Comment

  1. Raji ma wait ur mail

Comments are closed.