28 வயது அழகுப் புயல் – பாகம் 57 103

நல்லாயிருக்காங்கடி

நீங்க ரெண்டு பேரும் செட் ஆகிட்டீங்களா

வேற வழி?

அவள் ஹேண்ட் பேகிலிருந்த மருந்துகள், ointment- களை பார்த்த பத்மா, என்னடீ இதெல்லாம்? என்க, நிஷா தனக்கிருக்கும் இடுப்பு வலி, கழுத்து வலி, காலில் ஏற்படும் பிரச்சினை என்று எல்லாவற்றையும் சொன்னாள்.

பத்மாவுக்கு வேதனையாக இருந்தது. இதெல்லாம் வயசான பிறகுதானே வரும், நீ இப்பவே சொல்றியேடி

தெரியலம்மா. இந்த சிசேரியனாலதான்னு நினைக்குறேன்… ரெண்டாவது டெலிவரிக்கு அப்புறம்தான் இவ்ளோ பிரச்சினையும்

பத்மா அவளிடம் டாக்டரை பாத்தீங்களா… என்ன சொன்னார்கள்.. என்று கேட்டுக்கொண்டிருக்க, நெற்றியை பிடித்தபடி, டயர்டா இருக்கும்மா என்று தூங்கிப்போனாள் நிஷா.

பத்மாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆடி, ஓடி, துள்ளித்திரிந்த பெண்… இப்போது வாழ்ந்து முடித்த பெண் போல… சோர்ந்து, துவண்டு முகத்தில் சிரிப்புக்கான களையே இல்லாமல் இப்படி வந்து கிடக்கிறாளே என்று கவலையாக இருந்தது.

ராஜ் இருந்தாலாவது கொஞ்சம் கலகலன்னு இருக்கும். மலர், ஆல்ரெடி ஆபிஸ் டென்ஷனோட வருவா.

ராஜ்ஜும் காமினியும் மும்பை போயிருந்தார்கள். மலர்தான் சென்னை அலுவலகத்தை பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவள், மோகனை கூப்பிட்டு மருந்துகளைக் காட்டினாள். பாருங்க நிஷாவோட நிலைமையை? என்றாள்.

கதிர் என்ன செய்வான் பத்மா. pregnancy முடிஞ்சதும் இவதான் ஒழுங்கா ரெஸ்ட் எடுக்காம ஸ்கூல், ட்யூசன், அது இதுன்னு அலைஞ்சிருக்கா. அங்க யார் ப்ளஸ் ஒன், ப்ளஸ் 2, காலேஜ்-னு வெளியூர்ல போய் சேர்ந்தாலும் இவதான் அலைஞ்சிருக்கா. இவளை யாரு அடுத்தடுத்து ரெண்டு பிள்ளைங்களை பெத்துக்க சொன்னது? குழந்தை வேணும் குழந்தை வேணும்னு ஒரே அலப்பறை. கடவுளா பார்த்து கொடுப்பாருன்னு இருக்கிறது கிடையாது

உங்ககிட்ட போய் கேட்டேன் பாருங்க, பொண்ணுங்க வேதனைகள் உங்களுக்கு எப்படி புரியும்?

பத்மா கடுப்போடு போய் சமைக்க ஆரம்பித்தாள். வாடிய பூவாய் கட்டிலில் கிடக்கும் நிஷாவைப் பார்க்கப் பார்க்க அவளுக்கு வேதனையாக இருந்தது.

5 Comments

  1. Boss, seriously story is being dragged so much. Thought you said you are going to stop it. But it’s still going on.

    Please don’t start seenu and Nisha again. you are indicating that kathur is not getting enough sex,don’t make kathir and Deepa get intimated.

    All are kind of settled so stop the story please.

    Otherwise it will keep going on and purpose of people changing for good goes for toss and does not make sense.

  2. Next please 58

  3. சீனு பார்ட் எழுதுங்க.. வேற எந்த பார்ட்டும் நல்லாவே இல்லை

  4. சீனு பார்ட் எழுதுங்க.. வேற எந்த பார்ட்டும் நல்லாவே இல்லை.. சீனு பார்ட் நல்லதா எழுதுங்கள்

  5. சூப்பர் சார் எல்லா பகுதிகளையும் உள்ளடக்கிய கதை அருமை அருமை
    வாழ்த்துக்கள்.
    G. சங்கர்

Comments are closed.