28 வயது அழகுப் புயல் – பாகம் 57 103

ஆனால் மறுநாள் காலையில் இவன் எழுந்து பார்க்கும்போது கடகடவென்று தன் வேலைகளை செய்துகொண்டிருப்பாள். குழந்தைகளோடு பிசியாக இருப்பாள். தன்னால் முடிந்தவரை… சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருப்பாள்.

என்னங்க சாப்பிட வாங்க

ஏய் வாண்டு… தங்கச்சியை அடிக்காதடி

மாமா இந்தாங்க டீ குடிங்க

அவள் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும்

ஒருநாள், கதிர் கேட்டான். உனக்கு இந்த வாழ்க்கை பிடிச்சிருக்கா நிஷா?

பிடிச்சிருக்குங்க. ஏன்?

இல்ல… குழந்தைகளை வச்சிக்கிட்டு… ரொம்ப கஷ்டமா இருக்குன்னு சொன்னியே

குழந்தைகளுக்காக எவ்வளவு கஷ்டம் வேணும்னாலும் படலாம்ங்க. இந்த மாதிரி குழந்தைகள் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும். – அவள் தன் மக்களை இழுத்து அணைத்துக் கட்டிக்கொண்டாள்.

அன்னைக்கு… ரொம்ப சோகமா விரக்தியா… எங்கயாவது போயிடலாம் போல இருக்குன்னு சொல்லிட்டிருந்தியே நிஷா

ஏங்க… என்னோட கஷ்டத்தை உங்க கூடத்தான ஷேர் பண்ணிக்க முடியும்?

சொல்லிக்கொண்டே அவள் தன் வேலைகளை பார்க்க ஆரம்பித்துவிடுவாள்.

சில மாதங்கள் கழித்து –

நிஷாவுக்கு உயர் பதவிக்கான எக்ஸாம் ஒன்று எழுதவேண்டி வந்தது. சென்னையில் சென்டர். கொஞ்சம் preparation-ம் செய்யவேண்டி இருந்ததால் ஒருவாரத்துக்கு முன்பாகவே சென்னை போனால் நல்லாயிருக்கும் என்றாள் கதிரிடம்.

இவள் அங்கே போயாவது கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும் என்று… டபுள் ஓகே என்றுவிட்டான் அவன்

கதிர், அவளையும் குழந்தைகளையும் சென்னையில் ட்ராப் செய்துவிட்டுப் போனான். அம்மாவின் வீட்டுக்கு வந்த சந்தோஷத்தில் நிஷா தலைகால் புரியாமல் ஓடிப்போய் அம்மாவை கட்டிப்பிடித்துக்கொண்டாள்.

குழந்தைகளை பார்த்துக்கொள்ள அம்மா இருக்கிறாள். அப்பாடா…. என்று போய் கட்டிலில் விழுந்தாள்.

அபர்ணா சித்தி எப்படியிருக்காங்க?

5 Comments

  1. Boss, seriously story is being dragged so much. Thought you said you are going to stop it. But it’s still going on.

    Please don’t start seenu and Nisha again. you are indicating that kathur is not getting enough sex,don’t make kathir and Deepa get intimated.

    All are kind of settled so stop the story please.

    Otherwise it will keep going on and purpose of people changing for good goes for toss and does not make sense.

  2. Next please 58

  3. சீனு பார்ட் எழுதுங்க.. வேற எந்த பார்ட்டும் நல்லாவே இல்லை

  4. சீனு பார்ட் எழுதுங்க.. வேற எந்த பார்ட்டும் நல்லாவே இல்லை.. சீனு பார்ட் நல்லதா எழுதுங்கள்

  5. சூப்பர் சார் எல்லா பகுதிகளையும் உள்ளடக்கிய கதை அருமை அருமை
    வாழ்த்துக்கள்.
    G. சங்கர்

Comments are closed.