வித்யா என் கையை பிடித்துக் கொண்டு “நீங்க ஏன் பைக்ல எல்லாம் போறீங்க. உங்களுக்கு ஏதாச்சும் ஆகியிருந்தா, என்னாலே நினைத்து கூட பார்க்க முடியலைங்க உங்களை விட்டால் எனக்கு என்ன வேற யாரு இருக்கா.” கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது.
“வித்யா என்னது இது சின்னபுள்ள மாதிரி அழுதுகிட்டு, இவ்வளவு கோயில் குளம் போயி சாமி கும்பிடற அந்த சாமி சும்மா விடுமா என்ன” நான் அப்படி சொன்னது சாமி கும்பிட போறேன் என்று சொல்லிவிட்டு ஒழு வாங்க சென்றது உறுத்தியிருக்க வேண்டும், அவளின் அழுகை இன்னும் அதிகமானது.
“அழாதே வித்யா, நான் எங்கேயும் போகல இங்க தானே இருக்கேன்” பெட்டில் படுத்துக்கொண்டு எவ்வளவு சொல்லியும் சமாதானம் ஆகவில்லை. அவ்வளவே ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு யோசித்து யோசித்து திடீரென அழுதாள்.
என் மேல் எவ்வளவு அன்பு இருந்திருந்தால் ஒன்றுமே இல்லாத இதற்கு அவள் இவ்வளவு வருத்த பட வேண்டும். அவளைப் பார்க்கையில் எனக்கு இப்போது உண்மையில் பாவமாக இருந்தது. இதற்கே இப்படி என்றால் எனக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாக உறவு வைத்துக் கொண்டு அதை மறைப்பது அவளுக்கு இன்னும் எவ்வளவு மன உளைச்சலை கொடுத்து இருக்க வேண்டும். வீட்டிற்கு போனவுடன் சர்மா சொன்னது போல அவளிடம் மனதார பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
நாள் முழுக்க இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை செக்கப் என்று சோம்பேறியாக கழிந்தது. அன்று இரவு வித்யா ரூமில் இருந்த சோபாவில் படுத்துக்கொண்டாள். அடுத்த நாள் காலை 7 மணிக்கெல்லாம் டாக்டர் வந்து பரிசோதித்தார்.
“ஒரு பிரச்சனையும் இல்லை மிஸ்டர் பாலசுப்ரமணியன். இன்னைக்கு மதியத்துக்கு மேல டிஸ்சார்ஜ் பண்ணி விடுறேன். ஒரு வாரத்துக்கு ஆபீஸ் போகாதீங்க. மயக்கம் தலை சுத்துற மாதிரி இருந்தா மட்டும் உடனே ஹாஸ்பிடல் வந்துடுங்க.”
“சரி டாக்டர்.”
டாக்டர் சொல்லி விட்டு கிளம்ப ஒன்பது மணிவாக்கில் ஐஸ்வர்யா வந்தாள். பீச் கலரில் ஒரு குர்தா துப்பட்டா இல்லாமல் போட்டு இருந்தது அவளின் வளைவுகளை எடுப்பாக காட்டியது.
“என்ன சார், என்ன ஆச்சு. நேத்து ஆபீஸ் முழுக்க உங்களுக்கு ஆக்சிடென்ட் ஆச்சுனு பேசிக்கிட்டாங்க, அது தான் பார்த்துட்டு போலாம்னு” ஒரு வித பதற்றம் அவள் முகத்தில்.
“அது ஒன்னும் இல்லம்மா சும்மா ஒரு மைனர் ஆக்சிடெண்ட். டாக்டர் கூட காலையில் வந்து பார்த்துட்டு மதியம் டிஸ்சார்ஜ் பண்ணுறேன் அப்படின்னு சொல்லிட்டு போயிட்டாரு.”
“எல்லாம் அந்த கடவுளுக்குத்தான் நன்றி சொல்லணும் ஐஸ்வர்யா” என்று வித்யா அவள் மீது சாய்ந்து கொண்டாள்.
“ஐஸ்வர்யா வித்யா நேத்துல இருந்து அழுதுகிட்டே ஒன்றுமே சாப்பிடாமல் இருக்கா, நீ போய் அவளுக்கு ஏதாச்சும் வாங்கி கொடுமா.”
“சரி சார் நான் மேடத்தை கூட்டிட்டு போறேன்” ஐஸ்வர்யா என் மனைவியை கூட்டிக் கொண்டு சென்றாள்.