கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 1 40

“நான் அவனை நினைப்பது போல் அவனும் என்னை நினைத்துப் பார்ப்பானா?”
“எனக்கு அவனைப் பற்றிய சுகமான எண்ணங்கள் வருகின்றன… செல்வாவுக்கும், இதுபோல் என்னைப்பற்றிய எண்ணங்கள் வருமா?” அவள் மனம் தவித்தது. இந்த தவிப்பை அவள் உள்ளூர ரசித்தாள். வேணி சொன்னது போல் சுகன்யாவின் மனம் அவளையும் அறியாமல் காமத்தின் அர்த்தம் என்ன என்பதை சோதிக்க முடிவு செய்துவிட்டாள். ஆணும், பெண்ணும் பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் சகஜமாக இருப்பதே காதல். காதல் காமத்தை ஆராயும் முதல் படிக்கட்டு. அதை செல்வா மூலம் சோதித்தால் என்ன..? செல்வா அவளுடன் ஆபீசில் வேலை செய்பவன், அவளுக்கு ஒருவருடம் முன் வேலைக்கு வந்தவன். அவளுடைய சீனியர். அவளுடைய இடப்புற கேபினில் உட்காருபவன். செல்வாவை பெரிய அழகன் என்று சொல்ல முடியாது. அவன் நிறம் கருப்புமில்லை; சிவப்புமில்லை, இரண்டுக்கும் இடைப்பட்ட நிறம். மாநிறத்தில் அவனை சேர்க்கலாம். சுருட்டை முடி, எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பான், தொப்பை இல்லாத உடம்பு, அகன்ற மார்பு, உடற்பயிற்சி ஏதாவது செய்கிறான் போலும், உடலை ட்ரிம்மாக, கிண்ணென்று வைத்திருந்தான்.

எல்லோரிடமும் பொதுவாக மெண்மையாகதான் அவன் பேசுகிறான். ஆபீசில் இருந்த பெண்களிடம் வேலைத் தொடர்பாக பேசுவானே தவிர, தேவை இல்லாமல் அரட்டை அடித்துக்கொண்டு ஆபீசில் இருந்த எந்த பெண்ணிடமும் ஜொள்ளு விடும் பழக்கம் அவனிடம் இல்லை. அவனின் இந்த குணம் சுகன்யாவுக்கு பிடித்து இருந்தது. ஒரு வேளை அவனின் இந்த இயல்பே, அவளை அறியாமல் அவன் பால் கொஞ்சம் கொஞ்சமாக அவளை ஆகர்ஷித்திருக்கலாம். சுகன்யாவும் தனிமை, அமைதியை விரும்புபவள். அது அவளுடைய இயல்பான சுபாவம். இருவரின் இந்த பொதுவான அம்சங்களே, மன ஒற்றுமையே, அவர்களுக்குள் ஒரு நெருக்கத்தை உண்டாக்கியது. அவர்கள் நேருக்கு நேர் அதிகம் பேசிக்கொள்வது இல்லை. ஆனாலும் அந்த நெருக்கம், அந்த அலுவலக நட்பு, கொஞ்ச நாளில் வேறு ஒரு புதிய பரிமாணத்தை தொட்டது. அவர்கள் மனதில், மெல்ல மெல்ல ஒரு யுவனுக்கும் ஒரு யுவதிக்கும் இடையில் உண்டாகும் மனோவியாதி, அதுதான்…காதல் எட்டிப்பார்த்தது. இருவரும் அடுத்தவர்பால் ஏற்பட்ட இந்த புதிய மன உணர்வை தங்களுக்குள் உணர்ந்த போதிலும் யார் அதை முதலில் அடுத்தவரிடம் பகிர்வது,

1 Comment

  1. Nice story, எல்லா பகுதி யும் படிசுவிட்டென், waiting for next part.

Comments are closed.