கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 1 40

“நீ எப்படா வந்தே” கேட்ட மாணிக்கம் அவன் பதிலை எதிர்பார்க்காமல் உள்ளே நுழைந்தார்.
“இரண்டு மணி நேரம் ஆச்சு…ராதாவும் மாப்பிள்ளையும் எப்படி இருக்காங்க ப்பா…?” சங்கர் அவர் கையில் இருந்த பையை வாங்கிக்கொண்டே அவர் பின்னே நுழைந்தான்.
“வாங்க மாமா… அத்தை எங்கே?
“வெய்யில் அதிகமாப் போச்சு… இவர் எப்ப ஊர்லேருந்து வரார்ன்னு மதியம் வரை தெரியலை… இல்லன்னா இவரே ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்திருப்பார். அத்தே நீங்க பேனுக்கு கீழே உக்காருங்க… கூலா தண்ணியை கொஞ்சம் குடிங்க… பால் தயாராக இருக்கு, உங்களுக்கு காபி கொண்டுவரேன்” கையில் குளிர்ந்த நீருடன் வந்த வேணி அவர்களை உபசரிக்கத் தொடங்கினாள். பேசிக்கொண்டே காபி கொண்டு வர வேணி மீண்டும் கிச்சனுக்குள் நுழைந்தாள்.
“குடும்மா காபியை முதல்ல…நீ எப்படி இருக்க… சங்கர் ஊர்ல இருந்து வந்து சாப்டாச்சா… நீயும் காபியை குடிக்கறதுதானே… மணி அஞ்சாச்சே” காபியுடன் வந்த வேணியை நிமிர்ந்து பார்த்த வசந்தி கேள்விகளை வீசினாள்.
“குடிக்க ஆரம்பிச்சேன்…நீங்க வந்துட்டீங்க…பெங்களூரில் அக்கா எப்படி இருக்காங்க? மாமா நல்லா இருக்காரா? வேணி நலம் விசாரித்தாள்.
“நல்லா இருக்காங்க எல்லோரும்…உன்னை விசாரிச்சாங்க… விசேஷம் எதுவும் உண்டான்னு?” வேணியின் முகத்தைப் பார்த்து புன்னகைத்தாள். வேணிக்கு அவள் தன் மகளுக்கும் மேலான இடத்தை தன் மனதில் கொடுத்திருந்தாள். வேணியின் முகம் சிவந்தது. வெட்கத்தினால் தலையை குனிந்து கொண்டாள். ஓரக்கண்ணால் தன் கணவனைப் பார்த்தாள், சங்கர் அவளைப் பார்த்து கண்ணடித்தான். அவளுடைய மாமனார் இமைகளை மூடி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தார்.
“மாமா…டிபன் ஏதாவது செய்யட்டுமா, சூடா சாப்பிடறீங்களா”? தன் தலையை கோதிக் கொண்டே வேணி எழுந்தாள்.”
“வேண்டாம்மா.. ஒரு வழியா ராத்திரிக்குத்தான் சாப்பிடப்போறேன். ஒரு கை சாதமும் மிள்கு ரசமும் வேணும், முடிந்தால்…தேங்காய் தொகையல் அரைச்சுடு…அது போதும் எனக்கு” சொல்லியவாறு எழுந்து பின்புறம் நோக்கிச் சென்றார். நாளின் பாதியை அவர் வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்தில்தான் செலவிடுவார்.
“என்னம்மா செய்யற… நான் வேணா ரசம் கூட்டிடவா” வசந்தியும் எழுந்தாள்.
“இல்லம்மா… ஒரு வேலையும் இப்ப இல்ல.. ஏற்கனவே நீங்க வருவீங்கன்னு வடிச்ச சாதம் அப்படியே இருக்கு… ரசமும் மதியானம் வெச்சு இருக்கேன். தொகையல்தான் அரைக்கணும்…தேங்காய் திருகிட்டா நிமிழத்துல ஆயிடும்…நான் பாத்துக்கிறேன்…நீங்க செத்த நேரம் படுங்களேன்” வேணி தன் மாமியாரை ஆதுரத்துடன் பார்த்தாள்.

1 Comment

  1. Nice story, எல்லா பகுதி யும் படிசுவிட்டென், waiting for next part.

Comments are closed.