கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 1 40

“வேணி…சொல்ல மறந்துட்டேன், சமையல் கடையை நான் பாத்துக்கிறேன். அவனும் வீட்டுல இருக்கான்… முகத்தை கழுவிக்கோ… அந்த துணிப்பையில் நாலு முழம் கிட்ட மல்லிப்பூ இருக்கு… கொஞ்சம் கிள்ளி பிள்ளையார் படத்துக்குப் போட்டுட்டு மீதியை நீ வெச்சுக்கம்மா… இரண்டு பேருமா கோயிலுக்கு போயிட்டு வாங்க” எழுந்து குளியலறை நோக்கி நடந்தாள்.
“என்னம்மா விசேஷம் இன்னைக்கு” வேணியின் நெஞ்சம் சந்தோஷத்தால் துள்ளியது. தன் மாமியாரின் அருகில் சென்று அவள் கையை தன் கையால் பற்றிக் கொண்டாள்.
“ஒன்ணுமில்லேம்மா… இன்னைக்கு வெள்ளிக்கிழமை … கூடவே கிருத்திகை வேற…நல்ல நாளும் அதுவுமா, போய் அந்த முருகனை கும்பிட்டுட்டு வாம்மா, சின்னஞ்சிறுசுங்க நீங்க…அவனும் பத்து நாளா சரியா சோறு தண்ணி இல்லாம ஊரு விட்டு ஊரு சுத்திட்டு வந்திருக்கான்…கொஞ்ச நேரம் சந்தோஷமா அவன் கூட வெளியே போய் வாம்மா” அவள் கண்கள் பாசத்தினால் கனிந்திருந்தன.
“சரிம்மா…ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்ம்மா” வேணி தன் அறையை நோக்கி துள்ளி ஓடினாள்.

மாணிக்கம் முகம் கழுவி உள்ளே வந்தார். வசந்தி சோபாவில் அமர்ந்து ஒரு நாளிதழை புரட்டிக் கொண்டிருந்தாள்.
“என்ன வீடே அமைதியா இருக்கு? பசங்க எங்க? தன் மகனையும் மருமகளையும் பாசத்துடன்
“பசங்க” என்றுதான் அவர் குறிப்பிடுவது வழக்கம்.
“வெள்ளிக்கிழமையாச்சே.. நான்தான் இரண்டு பேரையும் கோயிலுக்கு போய் வாங்களேன்னேன்…இப்பத்தான் போனாங்க…என்ன வேணும்? காபி இல்ல டீ எதாவது போட்டுத் தரட்டுமா? வசந்தி புத்தகத்திலிருந்து தன் தலையை நிமிர்த்தாமலே கேட்டாள்.
“ஒன்னுமில்லே…சும்மாதான் கேட்டேன்.” மாணிக்கம் தன் மனைவியை கூர்ந்து நோக்கினார். ஐம்பத்துநாலு வயதுக்கு அவள் தலையில் நரையோ, முடி உதிர்தலோ அதிகமில்லை. இந்த வயதில் வேலைக்குப் போகும் பெண்களைப் போல அவள் ஹேர் டை எதுவும் உபயோகிப்பதில்லை. அந்தந்த வயதில் உடலில் ஏற்படும் மாற்றங்களை மனமுவந்து ஏற்றுக்கொள்வதால் வீணான மன அழுத்தங்களை தவிர்க்கலாம் என்பது அவள் கருத்து.

மாணிக்கம் வசந்தியை பெண் பார்க்க சென்ற போது, முதல் பார்வையிலேயே அவள் தான் தன் மனைவி என்று முடிவெடுத்துவிட்டார். கல்யாணம் முடிந்து புக்ககத்திற்கு வந்தபின் அவளின் நிதானமான நடையும், பணிவான பேச்சும், சகலரையும் அனுசரித்து செல்லும் போக்கும் அந்த குடும்பத்தில் இருந்த எல்லோரையும் கவர்ந்துவிட்டது. மாணிக்கத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம் தேன் குடித்த நரியைப் போல் அவளிடம் சொக்கிக் கிடந்தார். சுருக்கமாகச் சொன்னால் அந்த வீட்டின் முடிசூடா ராணியாக அவள் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறாள்.
“என்ன அப்படி பாக்கறீங்க…என்னமோ இன்னைக்குத்தான் முதன் முதலா பொண்டாட்டியைப் பார்க்கற மாதிரி” புன்முறுவலுடன் அவர் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். அவள் பார்வையில் கனிவு ததும்பியது.
“ஏன் பார்க்கக்கூடாதா…எனக்கு உரிமை உள்ள பொம்பளையைத்தானே பாக்கறேன்” அவர் அவளை ஆசையுடன் பார்த்தார். அந்த பார்வை எதையோ அவளிடம் கேட்ப்பது போலிருந்தது.
“இங்க வந்து என் பக்கத்துல உட்க்காரேன்” வீட்டில் அவர்களைத் தவிர வேறு யாரும் இல்லை என்ற சுதந்திரத்தில், அவளை தலையிலிருந்து கால் வரை கண்களால் அளவெடுத்தார்.

1 Comment

  1. Nice story, எல்லா பகுதி யும் படிசுவிட்டென், waiting for next part.

Comments are closed.