“எதுவாயிருந்தாலும் நிதானமா பக்குவமா கேளு… இந்த காலத்து குழந்தைகளை பெத்துட்டோங்கற உரிமையில, பெத்தவா யாரும் கோச்சிக்கவும் முடியலை… அதுவும் பொம்பளை கொழந்தைகளை ஒண்ணும் சொல்றதுக்கு இல்லே… எல்லாம் தெரிஞ்ச மாதிரி தஸ்சு புஸ்ன்னு இங்லீஷ்ல பேசறதுகள்… அப்புறமா முன்னுக்குப் பின்னா, ஏதாச்சும் ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிடிச்சின்னா…
“நீ என்னைப் பெத்தவதானே? நீ ஏன்டீ எனக்கு புத்தி சொல்லலேன்னு’, மனசு ஒடைஞ்சு கண்ணை கசக்கிண்டு நிக்கறதுகள்…
“
“நல்லாச் சொன்னீங்க…” மல்லிகா தன் புடவை முந்தானையால் தன்னைப் நன்றாக இழுத்துப் போர்த்திக்கொண்டாள். ஏனோ தெரியவில்லை, அவளுக்கு தீடிரென குளிர்வது போலிருந்தது.
“மல்லிகா நேக்கும் தூக்கம் கண்ணைச் சுத்தறது.. அவா புருஷாள் வந்து படுக்கறப்ப படுக்கட்டும்… நான் இப்படியே என் கட்டையை சாய்ச்சுக்கறேன்…” உட்க்கார்ந்திருந்த பாயிலேயே தன் உடலை சுருக்கிக்கொண்டாள், சியாமளா.
மல்லிகாவுக்கு உறக்கம் பிடிக்கவில்லை என்ற போதிலும், சியாமளாவின் பக்கத்திலேயே அவளும் படுத்தாள். மனம் வெகு நேரம் இலக்கில்லாமல் அலைந்து கொண்டிருந்தது.
சீனு தங்கமான பையன்தான்… கெட்டப்பழக்கம்ன்னு சொன்னா இந்த தெரு முனையில நின்னுக்கிட்டு, சிகரெட்டை ஊதி ஊதி தள்ளி ஒடம்பை கெடுத்துக்கறானே… இதைத்தான் சொல்லணும்… மல்லிகாவின் மனம் அவளிடம் பேசிக்கொண்டிருந்தது.
‘அம்மா… இப்பல்லாம் சீனு வாரத்துக்கு ஒரு தரம்
“கட்டிங்’ வுடறான்.. இவன் கூட சேர்ந்து உன் புள்ளை செல்வாவும் குட்டிசுவரா ஆயிடப் போறான்… இந்த சீனுவுக்கு நீ ரொம்ப செல்லம் குடுக்கறே… சனிக்கிழமை வந்தாப் போதும், வாரத்துக்கு ஒரு தரம் குடிச்சுட்டு வந்து நம்ம வீட்டு மாடியில உருள்றான். அவனை கண்டிச்சி வை. நீ சொன்னா அவன் கொஞ்சமாவது அடங்குவான். என்னைக்காவது ஒரு நாள் அவங்க அத்தை உஷா உன் கிட்ட சண்டை பிடிக்கப் போறாங்க.. ஜாக்கிரதையா இருந்துக்கோ…’
Swathi raam raviraj story I continu pannuga admin super story