ஒரு நாள் குத்து 1 204

கோயில் உள்ளே பூ அலங்காரம் கோயிலைசுற்றி செய்திருந்தனர் அது பார்க்க மிகவும் அழகாக இருந்தது நான் இதுவரை இதுபோல் ஒரு அலங்காரத்தை என் வாழ்நாளில் நான் பார்த்தது கிடையாது அந்த அலங்காரம் பார்க்கும் போதே சரவணனின் உழைப்பு தெரிந்தது. நாங்கள் அனைவரும் கோயில் உள்ளே நுழையும்போது கோயில் ஐயர் யாருடனோ போனில் பேசிக்கொண்டு இருந்தார் அவர் பேசிமுடித்ததும் என்னிடம் வா ராஜா எப்படி இருக்கிறாய் என்று கேட்டார் அதற்கு நான் நன்றாக இருக்கிறேன் என்று கூறினேன் பிறகு அவர் என்னிடம் இன்று காலை உங்கள் பங்காளி பூஜை செய்கிறார்கள் என்று கூறினார் நான் சிரித்தேன் அவரிடம் என்னுடைய பங்காளிகள் யாரும் பூஜை செய்யவில்லை நான் தான் பூஜை செய்ய போகிறேன் என்று கூறினேன் உடனே அவர் அப்படி பூஜை செய்ய முடியாது உனக்கு பூஜை செய்ய வேண்டும் என்றால் சாயந்திரம் உன் குடும்பத்தாருடன் வந்து செய்துக்கொள்ள என்று கூறினார் இதை கேட்ட உடன் சரவணன் மற்றும் என் நண்பர்கள் சத்தம் போடதுடங்கினர் நான் அவர்களை நோக்கி அமைதியாக இருக்கும் படி கூறினேன் பிறகு ஐயரை பார்த்து சாமி நம்ம ஊரு வழக்கப்படி திருவிழா காலங்களில் ஒவ்வொரு நாளும் ஒரு குடும்பம் பூஜை செய்ய வேண்டும் என்று இருக்கிறது சரி தானே என்று கேட்டேன் அதற்கு அவரும் ஆமாம் நீ சொல்வது சரிதான் என்று கூறினார் அப்படி பூஜை செய்யும் நாளில் யாருக்காவது கருத்து வேறுபாடு இருந்தால் அவர்கள் காலையில் பூஜை செய்யும் வழக்கம் இருக்கிறது இல்லையா என்று கேட்டேன் அதற்கும் அவர் நீ சொல்வது சரிதான் என்று கூறினார் அதற்கு நான் இப்பொழுது எனக்கும் என் குடும்பத்திற்கும் எந்த வித விதமான தொடர்பும் கிடையாது அதனால் தான் நான் காலையில் பூஜை செய்ய விரும்புகிறேன் என்றேன் அதற்கு அவர் நீ வரும்போது என்னிடம் போனில் பேசிக்கொண்டு இருந்தது உன் அப்பா தான் அவர் என்னிடம் உனக்கு தனியாக பூஜை செய்ய கூடாது என்று கூறினார் நான் என்ன செய்வேன் என்று கேட்டார் அதற்கு நான் அவர் எனக்கு அப்பாவும் கிடையாது நான் அவருக்கு மகனும் கிடையாது எங்கள் உறவு ஆறு வருடங்கள் முன்பே அறுந்து விட்டது அதனால் நீங்கள் எனக்கு பூஜை செய்தே ஆகவேண்டும் என்று கூறினேன் ஐயர் அதற்கு முடியாது என்று கூறிவிட்டார் உடனே சரவணன் இரண்டு வருடங்கள் முன்பு ராமசாமி ஐயாவின் மகள் தனியாக வந்து பூஜை செய்தாளே அது எப்படி செய்தீர்கள் என்று கேட்டான் அதற்கு அவர் ராமசாமி எந்தவொரு தடையும் கூறவில்லை அதனால் தான் நான் அவர்களுக்கு பூஜை செய்து கொடுத்தேன் என்று கூறினார் நான் அவரை பார்த்து நான் என்னை நன்றாக வாழவைக்கும் அம்மனுக்கு என் நன்றி செலுத்த தான் இந்த பூஜைக்கு ஏற்பாடு செய்தேன் ஆனால் நீங்களோ என் குடும்பத்தினருடன் வந்தால் தான் பூஜை செய்வேன் என்று சொல்கிரிர்கள் ஆனால் நான் என் குடும்பத்தில் உள்ளவர்கள் உடன் இணைந்து வந்து இந்த பூஜையை செய்ய மாட்டேன் என்னை பொறுத்தவரை அவர்கள் வேறு நான் வேறு நம்ம ஊரில் ஒரு பழமொழி உண்டு தாயும் பிள்ளையும் ஒன்று என்றாலும் வாயும் வயிறும் வேறு என்று அதுபோல் நானும் அவர்களும் வேறே வீட்டில் அவமானப்படுத்திய தால் நான் வீட்டிற்கு போகாமல் இருக்கின்றேன் இங்கு நீங்கள் கோயிலில் என்னை அவமான படுத்துகிறிர்கள் இனிமேல் நான் கோயிலுக்கு வரமாட்டேன் நம் ஊர் அம்மன் சக்திவாய்ந்தது என்றால் நான் தவறு செய்தால் என்னை தண்டிக்கட்டும் இல்லை நீங்கள் இன்று பூஜை செய்ய முடியாது என்பது தவறு என்றால் உங்களை தண்டிக்க வேண்டும் அதற்கு பிறகு நான் கோயிலுக்கு வருகிறேன் என்று ஆவேசமாக சொன்னேன் உடனே அவர் என்னிடம் நான் என்ன செய்வேன் என்று கேட்டார். அதற்கு நான் நீங்கள் பூஜை செய்யுங்கள் உங்களுக்கு எதாவது பிரச்சனை வந்தால் நான் பார்த்து கொள்கிறேன் என்று கூறினேன் அதேநேரம் இதேவரை எங்கள் விவாதத்தை கேட்டுக்கொண்டு இருந்தன கோயில் செயலாளரும் ராஜா சொல்வது தான் சரி நீங்கள் பூஜையை ஆரம்பிக்கப் என்று கூறினார் ஆனாலும் ஐயர் இவனுடைய அப்பா வந்து சாயங்காலம் கேட்டால் நான் என்ன சொல்வது என்று கேட்டார் அதற்கு கோயிலுக்கு வந்திருந்த ஊர்க்காரர்கள் அனைவரும் அவன் தான் சொல்கிறாரே அவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் எந்த ஒரு உறவும் இல்லை என்று அப்படி யாராவது ஒருவர் சொன்னால் அவர்களுக்கு பூஜை செய்து கொடுப்பது தானே உங்கள் வேலை என்று அனைவரும் அவரிடம் கூறினர் உடனே அவர் வா ராஜா அந்த தட்டை என்னிடம் கொடு என்று கூறி நான் கொண்டு போன தட்டை என்னிடம் இருந்து வாங்கினார். பிறகு அவர் பூஜை ஆரம்பிக்கப் பட்டது அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனையும் காட்டப்பட்டது நான் ஐயர் தட்டில் தட்சனையாக பத்தாயிரம் ரூபாய் போட்டேன் அதைப்பார்த்து ஐயர் மிகவும் சந்தோஷமாக என்னை வாழ்த்தினார். அவரிடம் நான் கூறினேன் நான் எதாவது தவறாக பேசியிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறினேன் அதற்கு அவர் நீ தவறாக எதுவும் பேசவில்லை நான் தான் உன்னிடம் தவறாக பேசிவிட்டேன் நீ என்னை மன்னித்து விடு இனிமேல் இதுபோல் நடந்து கொள்ள மாட்டேன் என்று கூறினார். நான் அவரிடம் நீங்கள் பெரியவர் நீங்கள் என்னிடம் மன்னிப்பு எல்லாம் கேட்க கூடாது உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்றாலும் சரவணனிடம் கூறுங்கள் அவன் என்னிடம் சொல்லி விடுவான் நீங்கள் கேட்கும் உதவி என்னால் செய்ய கூடியது என்றால் கண்டிப்பாக செய்து தருவேன் என் அப்பாவை நினைத்து பயபடவேண்டாம் அதை நான் பார்த்து கொள்கிறேன் இனிமேல் நான் கோயம்புத்தூரில் தான் இருக்க போகிறேன் அதனால் எதை நினைத்தும் கவலை கொள்ளவேண்டாம் சாயந்திரம் அவர் வந்து உங்களிடம் எதாவது பிரச்சனை செய்தார் என்றால் நீங்கள் அவரிடம் உன் மகன் தான் சொன்னான் அவனுக்கும் உங்களுக்கும் எந்த உறவும் கிடையாது என்று அதனால் நீங்க உங்க மகனை கூட்டிட்டு வாங்க அப்போ நான் செய்தது தவறு என ஒப்புக்கொள்கிறேன் என்று என் அப்பாவிடம் சொல்லுங்கள் அதோடு அவர் எதுவும் பேசாமல் இருப்பார் என்று கூறினேன். அதை கேட்ட ஊர் மக்கள் அனைவரும் சிரித்தனர்.

2 Comments

  1. கதை சூப்பர் அடுத்த பகுதிய தொடங்குங்க

  2. Bro story Vera Vera Vera level broo……semaa broooo,…. continue Pannu brooooo

Comments are closed.