எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 17 45

“அந்தப்பையனோட ஃபாரீன் காண்டாக்ட் நம்பர் வாங்கி பேசினேன்.. …………… அவனுக்கு கொஞ்ச நேரம் ஒண்ணுமே புரியல..!! திடீர்னு.. சென்னைல இருந்து போலீஸ்ன்னதும்.. என்ன ஏதுன்னு தெரியாம.. பையன் கொஞ்சம் டென்ஷனாயிட்டான்..!!” – புகை வழிகிற வாயுடன் ஸ்ரீனிவாச பிரசாத்.

“எனக்கு விஜய்ன்ற பேரே பிடிக்காது..!!!!” – நடிகர் விஜய் நடித்த சினிமாவிற்கு செல்லலாம் என்று அழைத்தபோது, மீரா முகம் சிவக்க உக்கிரமாக கத்தியது.

“நீ சொன்ன அந்த நம்பர் விஜயசாரதின்ற பேர்ல ரெஜிஸ்டர் ஆகி இருக்கு..!!” – மீண்டும் புகைமண்டலத்துக்கு நடுவே ஸ்ரீனிவாச பிரசாத்.

அவ்வளவுதான்.. அசோக்கை உடனடியாய் ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது.. அவன் முகத்தில் உச்சபட்சமாய் ஒரு தீவிரம் கொப்பளித்தது..!! உடலின் அத்தனை செல்களிலும் ஒரு பதற்றம் நிறைந்துபோயிருக்க.. நடுங்குகிற கையால் தனது செல்போனை எடுத்தான்.. வெடவெடத்த விரல்களால் ஏதோ ஒரு எண்ணுக்கு டயல் செய்தான்..!! அவனுடைய மாற்றத்தை கவனித்த மும்தாஜ்..

“என்னாச்சு அசோக்..??”

என்று குழப்பமாக கேட்க.. அசோக் அதை அலட்சியம் செய்தான்..!! அடுத்த முனையில் கால் பிக்கப் செய்யப்பட்டதும்..

“ஹலோ ஸார்.. நான் அசோக் பேசுறேன்..!!” என்றான்.

“ஆங்.. சொல்லு அசோக்..!!” என்றார் மறுமுனையில் ஸ்ரீனிவாச பிரசாத்.

“ஸார்.. நீங்க அந்த விஜயசாரதின்ற பையன் பத்தி சொன்னிங்கள்ல..??”

“ம்ம்..!!”

“அவன் வெளிநாட்டுல இருக்கான்னு சொன்னிங்க..!!”

“ஆமாம்..!!”

“அந்த வெளிநாடு.. யூ.எஸ்தான..??”

“ஆ..ஆமாம்..!! உனக்கு எப்படி தெரியும்..??”

ஸ்ரீனிவாச பிரசாத் குழப்பமாக கேட்க.. இந்தப்பக்கம் அசோக்கின் மனம் இன்னும் தெளிவு பெற ஆரம்பித்தது.. அவனது சந்தேகம் இப்போது மிகவும் உறுதிப்பட்டுப் போனது.. நெஞ்சில் எழுந்திருந்த நம்பிக்கை மேலும் அதிகரித்தது..!! அவசரமாக ஏதோ யோசித்தவன், உடனடியாய் ஒரு முடிவுக்கு வந்து.. ஸ்ரீனிவாச பிரசாத்திடம் கேட்டான்..!!

“ஸார்.. நீங்க இப்போ ஃப்ரீயா..?? எனக்காக கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ண முடியுமா..??”

ஸ்ரீனிவாச பிரசாத் அசோக்கின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ள.. அவன் நன்றி சொல்லி காலை கட் செய்தான்..!! உடம்பில் ஒரு பதட்டத்துடன் அந்த அறைவாசலை நோக்கி நகர்ந்தான்..!!

“என்னாச்சு அசோக்..??” மீண்டும் கேட்ட மும்தாஜிடம் திரும்பி,

“ஸாரி மும்தாஜ்.. நீங்க ஏதாவது ஒரு ஆட்டோ பிடிச்சு போயிடுறீங்களா.. எனக்கு அர்ஜண்டா ஒரு வேலை இருக்கு..!!” என்றான்.

மும்தாஜின் பதிலுக்காக கூட காத்திராமல், அலுவலகத்தை விட்டு அவசரமாய் வெளியேறினான்.. தடதடவென படியிறங்கி கீழ் தளத்துக்கு வந்தான்.. பைக்கின் நெற்றியில் சாவி போட்டு திருகி, கிக்கரை படக்கென உதைத்தான்.. ஆக்சிலரேட்டரை முழுவதுமாக முறுக்கி, வண்டியை விர்ரென பறக்க விட்டான்..!!

அடுத்த ஐந்தாவது நிமிடம்.. அசோக் ஸ்ரீனிவாச பிரசாத்தின் முன்பாக அமர்ந்திருந்தான்..!! யாரிடமோ டெலிபோனில் பேசியவர்.. பேசிமுடித்ததும் ரிஸீவரை அதனிடத்தில் வைத்தார்..!! அசோக்கோ பொறுமையற்றவனாய் கேட்டான்..!!

“என்ன ஸார் சொல்றாங்க..??”

“அந்த விஜயசாரதி இந்தியாதான் வந்திருக்கானாம்.. ரெண்டு நாளாச்சு..!! அவனோட இண்டியன் காண்டாக்ட் நம்பர் தெரியலைன்னு சொல்றாங்க..!!”

“ஓ..!! இப்போ என்ன ஸார் பண்றது..??”

“ம்ம்ம்ம்.. அவங்களோட மாதவரம் பங்களா அட்ரஸ் எனக்கு தெரியும்.. அங்கதான் போய் விசாரிக்கணும்..!!”