எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 17 45

“ஹ்ஹ.. இட்ஸ் ஓகே.. நைட் தூங்கி எந்திரிச்சா, காலைல எல்லாம் சரியா போயிடும்..!! உனக்கு ஃபர்ஸ்ட் டைம்ல.. அதான்..!! எனக்கு இதுலாம் பழகிப் போச்சு..!!”

ஸ்ரீனிவாச பிரசாத் அவ்வாறு அமர்த்தலாக சொன்னதும்.. அசோக் சிறிது நேரம் அமைதியாக இருந்தான்..!! புகை உள்ளிழுத்து குபுகுபுவென வெளியிட்டவாறே.. எதையோ தீவிரமாக யோசித்தான்..!! பிறகு மனதில் ஒரு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு.. ஸ்ரீனிவாச பிரசாத்தை ஆழம் பார்ப்பது மாதிரி.. மெல்லிய குரலில் அந்த கேள்வியை கேட்டான்..!!

“யா..யாரு இதை பண்ணிருப்பாங்க ஸார்..??”

“எதை..??”

“இ..இந்தக் கொலையை..!!” அசோக் அந்த மாதிரி தயக்கமாக சொன்னதும், ஸ்ரீனிவாச பிரசாத் பட்டென சிரித்துவிட்டார்.

“ஹாஹா..!! டேய்.. என்னை என்ன மந்திரவாதின்னு நெனச்சுட்டியா.. இங்க்-க வெத்தலைல தடவி பட்டுன்னு சொல்றதுக்கு..?? எல்லாம் இன்வெஸ்டிகேட் பண்ணித்தான் கண்டுபிடிக்கணும்..!! ஹ்ம்ம்.. அதுவும்கூட இப்போ என் வேலை கெடையாது.. எல்லாம் ரெட்ஹில்ஸ் போலீஸ் பாத்துப்பாங்க.. கொலை செஞ்சது யாருன்னு அவங்க கண்டுபிடிப்பாங்க..!!”

“தெ..தெரியும் ஸார்.. சும்மா கேட்டேன்..!!”

மெலிதான புன்னகையுடன் சொல்லிவிட்டு அசோக் அமைதியானான். இப்போது ஸ்ரீனிவாச பிரசாத் எதையோ நினைத்துக்கொண்டு புருவத்தை நெறித்தார். ஒரு திடீர் யோசனை தோன்றியவராய் அசோக்கிடம் திரும்பி சொன்னார்.

“அ..அசோக்.. நான் ஒன்னு சொல்லவா..??”

“என்ன ஸார்..??”

“உன் ஆள் பத்தி ரெட்ஹில்ஸ் போலீஸ்ட்ட சொல்லலாமா..??” ஸ்ரீனிவாச பிரசாத் கேட்கும்போதே, அசோக்கின் உடலில் சுரீர் என்றொரு மின்சாரம் பாய்ந்தது.

“மீ..மீரா பத்தியா..??”

“ம்ம்..!!”

“எ..என்ன சொல்லலாம்னு சொல்றீங்க..??”

“அதான்டா.. இந்த விஜயசாரதி உன் ஆளை லவ் பண்ற மாதிரி நடிச்சது.. அவளை அனுபவிச்சுட்டு அப்புறம் ஏமாத்தினது.. அதனால ஆம்பளைங்கன்னாலே உன் ஆளுக்கு ஒரு வெறுப்பு இருந்தது..” ஸ்ரீனிவாச பிரசாத் சொல்லிக்கொண்டு போக, அசோக் இடையில் புகுந்து அவரை தடுத்தான்.

“ஹையோ ஸார்.. அ..அதுலாம் ஜஸ்ட் என்னோட அஸம்ப்ஷன்தான..?? உ..உண்மையா இருக்கனும்னு ஒன்னும் அவசியம் இல்லையே..??”

“ஆமான்டா.. உன்னோட அஸம்ப்ஷன்தான்..!! அதைத்தான் இவங்கட்ட சொல்லலாம்னு சொல்றேன்..!!”

“அதை எதுக்கு இவங்கட்ட..??”

“புரியலையா..?? இந்த கொலையை பண்றதுக்கு உன் ஆளுக்கு ஸ்ட்ராங் மோட்டிவ் இருக்குன்னு இவங்கட்ட சொல்லலாம்.. ஐ மீன்.. அவங்க நம்புற மாதிரி பொய் சொல்லலாம்..!!”

“அ..அதனால என்ன யூஸ்..??”

“ரெட்டை கொலைடா..!! அதுல ஒருத்தன், சென்னைலயே முக்கியமான பிக் ஷாட்டோட பையன்..!! இன்வெஸ்டிகேஷன் ரொம்ப ரொம்ப சீரியஸா இருக்கும்..!! உன் ஆளுக்கு மோட்டிவ் இருக்குன்னு மட்டும் இவங்க நம்பிட்டாங்கன்னு வச்சுக்கோ.. சும்மா விடமாட்டாங்க.. எப்படியாவது அவளை கண்டுபிடிச்சுடுவாங்க..!!”

“ஓ..!!”

“அவளை கண்டுபிடிச்சுடுறாங்கன்னு வச்சுக்கோ.. அப்புறம் அவகிட்ட என்கொய்ரி பண்றப்போ.. அவளுக்கும் இந்த கொலைக்கும் எந்த சம்பந்தம் இல்லன்னு இவங்களுக்கே தெரிஞ்சிடும்.. விட்டுடுவாங்க..!! அப்புறம் என்ன.. இவங்க மூலமா உனக்கு உன் ஆளு கெடைச்சுடுவா.. எல்லாம் சுபம்..!! சிம்பிளா சொல்லப்போனா.. இந்த மர்டர் சம்பந்தமான இன்வெஸ்டிகேஷனை.. உன் ஆளை தேடிக் கண்டுபிடிக்கிறதுக்கு யூஸ் பண்ணிக்கலாம்னு சொல்றேன்.. இப்போ புரியுதா..??”

“புரியுது ஸார்.. ஆ..ஆனா..”

“என்ன ஆனா..??”