எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 17 45

“அதனால என்ன ஸார்.. பரவால..!!” சொன்ன மலரவன் அவரை நெருங்கி,

“Can I borrow a cigarette..??” என்று கேட்டார் ஆங்கில இளிப்புடன்.

உடனே ஸ்ரீனிவாச பிரசாத் சிறு பதற்றத்துடன், சிகரெட் பாக்கெட் எடுத்து அவசரமாக அவரிடம் நீட்ட.. மலரவன் அதிலிருந்து ஒரு சிகரெட்டை உருவி உதட்டில் பொருத்திக் கொண்டார்..!! ஸ்ரீனிவாச பிரசாத் நெருப்பு பற்றவைக்க.. மலரவன் புகையிழுத்து வெளியே ஊதி, வளிமண்டலத்தை மாசுபடுத்த ஆரம்பித்தார்..!!

“வெப்பன் கெடைச்சதா ஸார்..??” கேட்டார் ஸ்ரீனிவாச பிரசாத்.

“எங்க..??? எவ்வளவு தேடியும் கெடைக்கலை..!! Knife மாதிரி எதோ ஷார்ப்பான வெப்பன்தான் ஸார்.. உடம்பு பூரா அப்படியே பஞ்சர் பண்ணிருக்காங்க..!! அந்த மூர்த்தி ஸார் பையனோட பின்னந்தலைல.. இந்த எடத்துல.. செமத்தியா ஒரு அடி விழுந்திருக்கு.. அனேகமா அந்த கிருஷ்ணன் சிலையை வச்சுத்தான் அடிச்சிருக்கனும்னு தோணுது..!! ஹ்ஹ்ம்ம்ம்.. அதுதான் இப்போதைக்கு கெடைச்சிருக்குற ஒரே வெப்பன்..!!” பதில் சொன்னார் மலரவன்.

“ம்ம்.. மூர்த்தி ஸார்க்கு இன்ஃபார்ம் பண்ணியாச்சா..??”

“பண்ணியாச்சு..!! மனுஷன் மலேசியால இருக்காரு போல.. மேட்டரை சொல்றேன், பெருசா அவர்ட்ட ஷாக்கே இல்ல ஸார்..!! சொன்னதெல்லாம் ‘ம்ம்.. ம்ம்..’ன்னு பொறுமையா கேட்டுக்கிட்டாரு.. உடனே கெளம்புறேன்னு மட்டும் சொன்னாரு.. காலைல இங்க இருப்பாருன்னு நெனைக்கிறேன்..!! ஹ்ம்ம்… அப்புறம்.. இன்னொரு விஷயம் ஸார்..”

“என்ன..??”

“உள்ள எங்களுக்கு நெறைய ஃபிங்கர் ப்ரிண்ட்ஸ் கெடைச்சிருக்கு..!! உங்க ரெண்டு பேரோட ஃபிங்கர் ப்ரின்ட்ஸ் கூட எங்களுக்கு வேணும்.. எலிமினேட் பண்றதுக்கு..!!”

“ஷ்யூர்.. அதனால என்ன.. குடுத்திடலாம்..!!”

“தேங்க்ஸ்..!! இப்போ வேணாம்.. நாளைக்கு பாத்துக்கலாம்.. சரியா..?? ம்ம்ம்ம்ம்ம்.. அப்புறம்.. உங்களை இன்னொன்னு கேக்கனும்னு நெனச்சேன்..”

“கேளுங்க..!!”

“நீ..நீங்க எப்படி.. இ..இந்த நேரத்துக்கு.. கரெக்டா இங்க..??”

நெற்றியை சுருக்கியவாறு மலரவன் அந்தமாதிரி கேட்க.. அத்தனை நேரம் அமைதியாக நின்றிருந்த அசோக்கின் மனதுக்குள்.. இப்போது திடீரென ஒரு கலக்கம்..!! படக்கென பக்கவாட்டில் திரும்பி ஸ்ரீனிவாச பிரசாத்தின் முகத்தை ஏறிட்டான்.. அவர் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று.. பதற்றம் அப்பிய முகத்துடன் அவரையே பார்த்தான்..!! அவரும் தனது முகத்தை திருப்பி, அசோக்கை ஒரு சலனமற்ற பார்வை பார்த்தார்.. பிறகு மலரவனிடம் திரும்பி..

“நாங்க.. ஒரு ஃப்ராட் பொண்ணை ட்ரேஸ் பண்ணிட்டு இருக்கோம் ஸார்..!!” என்றார்.

“ஓகே..!!”

“அந்தப்பொண்ணு யூஸ் பண்ணின மொபைல் நம்பர்.. இந்த விஜயசாரதியோட பேர்ல ரெஜிஸ்டர் ஆகி இருந்தது.. அது சம்பந்தமா விசாரிக்கத்தான் வந்தோம்..!!”

“ஓ..!! ம்ம்… அப்போ அந்தப்பொண்ணுக்கும் இந்த பையனுக்கும்..??” மலரவன் கேள்வியாக பார்க்க,

“இல்ல.. எந்த சம்பந்தமும் இல்ல..!!” ஸ்ரீனிவாச பிரசாத் அழுத்தம் திருத்தமாக சொன்னார். சொன்னவர் கோர்வையாக மேலும் தொடர்ந்தார்.

“ரெண்டு வாரம் முன்னாடியே.. விஜயசாரதி கூட நான் ஃபோன்ல பேசினேன்.. அப்போவே தெளிவா சொல்லிட்டான்.. இவனுக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு..!! ஆக்சுவலா.. இவன் யூ.எஸ் போறதுக்கு முன்னாடியே.. இவனோட செல்ஃபோனை எங்கயோ தொலைச்சிருக்கான்.. அது அந்தப்பொண்ணு கைல சிக்கிருக்கு.. அவ அதே நம்பரை அவளோட ஃப்ராட் வேலைக்கு யூஸ் பண்ணிருக்கா.. தேட்ஸ் ஆல்..!!”

“ஹ்ஹ.. ஓகே ஓகே..!! ஹ்ம்ம்.. அப்படி என்ன ஃப்ராட் பண்ணினா அந்தப்பொண்ணு..??”

“பேங்க்ல லோன் வாங்கி தர்றதா சொல்லி.. ஒரு நாலஞ்சு பேர்ட்ட, பத்து லட்ச ரூபாக்கு மேல ஆட்டையை போட்டுட்டு.. ஆள் எஸ்கேப் ஆகிட்டா..!! ஒருமாசமா அலையுறோம்.. அவளை ட்ரேஸ் பண்ணவே முடியல..!!”

“ம்ம்ம்… செம கேடியா இருப்பா போல..??”

“சந்தேகமே வேணாம் ஸார்.. பயங்கர கேடி..!!” சொன்ன ஸ்ரீனிவாச பிரசாத் அசோக்கிடம் திரும்பி,

“என்ன அசோக்.. சரிதான..??” என்று சற்றே கிண்டலான குரலில் கேட்டார்.

“ஆ..ஆமாம்..!!” அசோக் தடுமாற்றமாக சொன்னான்.

“ஹ்ம்ம்.. So.. What’s your next move..??” மலரவன் அவ்வாறு கேட்க,

“Next move-னா..?? புரியல..!!” ஸ்ரீனிவாச பிரசாத் புரிந்தும் புரியாதவர் போல திரும்ப கேட்டார்.

“இல்ல.. இ..இப்போ இந்த விஜயசாரதியும் இல்ல.. அந்தப்பொண்ணை எப்படி கண்டு பிடிக்கப் போறீங்கன்னு கேட்டேன்..!!”

“ஹாஹா.. அது என் தலைவலி ஸார்.. உங்களுக்கு எதுக்கு..??”

அந்த விஷயத்தை பற்றி, அதற்கு மேலும் பேச தனக்கு விருப்பம் இல்லை என்பதை.. ஒரு சிரிப்புடன் ஸ்ரீனிவாச பிரசாத் நாசுக்காக சொன்னார்..!! மலரவனுக்கும் அது புரியாமல் இல்லை.. பதிலுக்கு புன்னகைத்தவர்..

“ஹாஹா.. ஆமாமாம்.. உங்க தலைவலி எனக்கெதுக்கு..?? எனக்குத்தான் ஏற்கனவே ரெட்டைத்தலைவலி வந்துடுச்சே.. அதைப்போய் என்னன்னு பாக்குறேன்..!!”

என்று சிரிப்புடனே சொல்லிவிட்டு.. சிகரெட்டை கீழே போட்டு காலால் மிதித்து நசுக்கிவிட்டு.. அங்கிருந்து நகன்றார்..!! இப்போது ஸ்ரீனிவாச பிரசாத் அசோக்கிடம் திரும்பி.. ‘என்னடா.. திருப்தியா..?’ என்பது போன்ற பார்வையுடன் புன்னகைத்தார்..!! அசோக்கும்.. அவர் மலரவனிடம் பேசிய விதத்தில் விளைந்திருந்த ஒருவகை நிம்மதியுடன்..

“தேங்க்ஸ் ஸார்..!!” என்றான் மெலிதாக.

அசோக்கிற்கு வந்திருந்த அந்த நிம்மதி.. அதேசமயம் தனது படுக்கையறை மெத்தையில் வீழ்ந்து கிடந்த மீராவிடம்.. துளியும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்..!! உள்ளம் முழுக்க அழுத்தத்துடன் வீடு நுழைந்தவளுக்கு.. உடைகளை மாற்றிக் கொள்கிற எண்ணம் கூட வரவில்லை..!! மூளைக்குள் குடைச்சலுடன் படுக்கையில் சரிந்தவள்.. முதுகு குலுங்க விம்மி விம்மி அழ ஆரம்பித்திருந்தாள்..!! அவளுடைய கண்களில் இருந்து வழிந்த நீர்த்துளிகள்.. கைக்குள் அகப்பட்டிருந்த அசோக்கின் புகைப்படத்தில் பட்டு தெறித்தன..!! அழுகையினூடே.. அவ்வப்போது அந்த புகைப்படத்துக்கு.. தனது சிவந்த உதடுகளால் முத்தங்களும் வைத்தாள்..!!

விஜயசாரதியின் விருந்தினர் மாளிகையில் வைத்து.. அசோக்கை காணநேரிடும் என்று அவள் சற்றும் எதிர்பார்த்திரவில்லை.. அதுவும் அந்த மாதிரியான ஒரு சூழ்நிலையில்..!! செல்ஃபோனை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தவளுக்கு.. தூரத்தில் காவல்துறை அதிகாரி ஒருவருடன் நடந்துவந்த அவளது காதலன் காணக்கிடைத்தான்..!! ஒருகணம் என்ன செய்வதென்றே அவளுக்கு எதுவும் புரியவில்லை.. நீண்ட நாட்களுக்கப்புறம் பார்ப்பதற்கு வாய்த்த அந்த ஆசைமுகம்.. அவனுக்கு இணையாக நடந்து வந்த அந்த காவல்துறை அதிகாரி.. குருதியிலே குளித்து முடித்த மாதிரி வீட்டுக்குள்ளே இரட்டைப் பிணங்கள்..!!

தடுமாறினாள்.. மூளை சிந்திக்க மறுத்து சிக்கிக்கொண்டது.. கால்கள் நகர மறுத்து பிண்ணிக்கொண்டன..!! எப்படியோ ஒருவழியாக சமாளித்து சுதாரித்துக் கொண்டாள்.. அவசரமாய் யோசித்து ஒரு முடிவெடுத்தவள்.. அப்படியே பின்னால் நகர்ந்து வீட்டின் பின்புறம் ஓடினாள்..!!