எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 13 65

“இந்தக் கவிதையோட தீம்.. பர்சனலா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. பெண்மையோட மேன்மையை சொல்ற எந்த விஷயமுமே எனக்கு ரொம்ப பிடிக்கும் தெரியுமா..!! ஏன்னா.. நான் பெண்மையை ரொம்ப மதிக்கிறவன்..!!” – அவன் பெண்மையை மதிக்கிற லட்சணம் வேறொரு நாள்தான் வெளிச்சத்துக்கு வந்தது.
“என்னை பத்தி எல்லாம் தெரிஞ்சும்.. என்கூட யாரும் இவ்வளவு ஃப்ரண்ட்லியாலாம் பேசினது இல்ல.. அதான் தேங்க்ஸ்னு..” – நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவன் இடைமறித்து,

“ப்ச்.. கமான்..!! எனக்கு நீதான் முக்கியம்.. உன்னோட ஹிஸ்டரி, ஜியாக்ரஃபிலாம் யாருக்கு வேணும்..?? நா..நான்.. நான் மத்தவங்க மாதிரி இல்லமா.. ஐ’ம் டிஃபரண்ட்..!! நான் எந்த அளவுக்கு உன்னை பத்தி புரிஞ்சு வச்சிருக்குறேன்னு.. உனக்கு தெரியாது..!! இனிமே இந்த தேங்க்ஸ்.. ஸாரிலாம் சொன்னேன்னு வச்சுக்கோ.. பல்லை உடைச்சிடுவேன்..!!”

என்று கோவமாக சொன்னான். அன்று அவனுடைய அந்த கோவம், எனக்கு எவ்வளவு சந்தோஷத்தை கொடுத்திருக்கும் என்று யாராலும் புரிந்து கொள்ள முடியாது. மத்தாப்பு கொளுத்திப் போட்டது போல.. மனதெல்லாம் அப்படி ஒரு பூரிப்பு..!! அதனால்தான்.. மங்கிப்போன மெழுகுவர்த்தி வெளிச்சத்தில்.. எனது கைவிரல்களை கோர்த்துக்கொண்டு.. என் கண்களை நேருக்கு நேராய் பார்த்துக்கொண்டு.. ஏக்கமும், தவிப்புமான குரலில்..

“I love you..!! Do you love me..??” என்று அவன் கேட்டபோது என்னால் மறுக்க முடியவில்லை..!!

“Yes..!!!” என்றேன்.. அம்மாவின் அனுபவத்தை மறந்து.. அந்த அரவத்தை மாலையென அணிந்துகொண்டேன்..!!

அன்புக்கான ஏக்கம் என் கண்ணை மறைத்திருந்தது.. அன்பென்ற முகமூடி அந்த அரக்கனுக்கும் சரியாகவே பொருந்தியிருந்தது..!! அணைத்து நெருக்கியிருப்பது அரவம் என்று அறியாமல்.. அதை நான் கொஞ்சினேன்.. முத்தமிட்டேன்.. சிரித்தேன்.. அதிர்ஷ்டக்காரியென கர்வம் கொண்டேன்.. கால்கள் தரையில் நில்லாமல் மிதந்தேன்..!!

காலை சுற்றிய பாம்பு.. கடித்து வைக்கவும் தகுந்த நேரத்தை தேர்ந்தெடுத்தது..!!

“தனியா போறதுக்கு எனக்கு போரடிக்குது.. நீயும் வர்றியா.. ப்ளீஸ்..!!” – கெஞ்சினான்.

“காலைல இருந்து சுத்தினது ரொம்ப டயர்டா இருக்குல..?? ஒன்னு பண்ணுவோமா.. பக்கத்துலதான் எங்க கெஸ்ட் ஹவுஸ்.. அங்க போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு கெளம்பலாமா.. ப்ளீஸ்..!!” – கெஞ்சினான்.

“நோ நோ..!! ஃபர்ஸ்ட் டைம் என் வீட்டுக்கு வந்திருக்குற.. அட்லீஸ்ட் இந்த ஜூஸாவது சாப்பிட்டே ஆகணும்.. ப்ளீஸ்..!!” – கெஞ்சினான்.

பிறகு நடந்ததெல்லாம் எனக்கு அரைகுறையாகத்தான் ஞாபகம் இருக்கிறது..!! படுக்கையறைக்கு என்னை தூக்கி சென்ற பாம்பு.. மெத்தையிலே கிடத்தியது.. மேலே கவிழ்ந்தது.. ஆடைகளை களைந்தது.. அதரங்களை கவ்வியது.. என் அங்கமெல்லாம் படர்ந்தது..!! கரும்பை சுவைத்துவிட்டு சக்கையை துப்புவது போல.. எனது கற்பை தின்றுவிட்டு தன் எச்சத்தை கக்கியது.. அந்த பாம்பு..!! அது விஷ எச்சமென்று கூட அப்போது எனக்கு விளங்கவில்லை..!!

“ப்ச்.. என்ன நீ.. இதுக்கு போய் இவ்வளவு ஃபீல் பண்ற..?? மேரேஜ்க்கு முன்னாடி.. It’s just a little fun.. அவ்வளவுதான்..!!” – சமாதானம் செய்தான்.

“நான் என்ன பண்றது.. உன் அழகுதான் எல்லாத்துக்கும் காரணம்..!! திடீர்னு மயக்கமாயிட்ட.. எனக்கு என்ன பண்றதுனே தெரியல.. பெட்க்கு தூக்கிட்டு போனேன்.. அங்க போனதும்.. உன் அழகை பாத்ததும்.. எனக்கு ஆசை வந்துடுச்சு.. என்னால கண்ட்ரோல் பண்ண முடியல.. It’s just happened.. அவ்வளவுதான்..!!” – சமாதானம் செய்தான்.

“அப்போ என்னை நம்பலைல..?? ஏமாத்திடுவேன்னு நெனைக்கிறல..?? நீ நம்புறியோ இல்லையோ.. நான் அப்படி நடந்துக்கிட்டதுக்கு.. நான் உன்மேல வச்சிருக்குற லவ்தான்மா காரணம்.. நீ எனக்கு சொந்தமானவன்ற உரிமைதான் காரணம்.. it’s just because my love.. அவ்வளவுதான்..!!” – சமாதானம் செய்தான்.

முன்பொருநாள் அவன் சொன்னது முற்றிலும் உண்மைதான்.. ‘நான் எந்த அளவுக்கு உன்னை பத்தி புரிஞ்சு வச்சிருக்குறேன்னு.. உனக்கு தெரியாது..!!’ என்று சொன்னானே.. அது முற்றிலும் உண்மை..!! என்னை எங்கே அடித்தால்.. எங்கே விழுவேன் என்று நன்றாகவே புரிந்து வைத்திருந்தான்..!!

அவனுடைய சமாதானத்தை ஏற்றுக்கொண்டேன்.. அவனை நம்பினேன்..!! சற்றும் அவன்மீது எனக்கு சந்தேகம் வரவில்லை.. காலையில் இருந்து அலைந்ததால் வந்த மயக்கம்தான் என்று நினைத்தேனே ஒழிய.. அவன் கலந்து தந்த பழச்சாற்றினால் வந்த மயக்கம் என்று நான் நினைக்கவில்லை..!! எவ்வளவு அழகாக காய்நகர்த்தி எனது கற்பை களவாடியிருக்கிறான் என்பதை அப்போது நான் சுத்தமாய் அறியவில்லை..!!

வேறொரு நாளில்.. அம்மா எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறேன் என்று பேச்சை எடுத்த அந்த நாளில்.. அவனை தொலைபேசி மூலம் நான் தொடர்பு கொண்டு பேசிய அதே நாளில்தான்.. அவனது சுயரூபம் எனக்கு தெரியவந்தது.. காதல் என்ற போர்வையில் என் கற்பை சூறையாடிய அவனது கயமை எனக்கு புரியவந்தது..!!

“ஹாஹா.. அதுலாமா இன்னும் ஞாபகம் வச்சுட்டு இருக்குற..?? சரியான லூஸுடி நீ..!!”

“ம்ம்.. மாப்பிள்ளை பாத்தா கட்டிக்கோ.. அதை எதுக்கு எங்கிட்ட வந்து சொல்லிட்டு இருக்குற..?? நான் இங்கயே பொண்ணு பார்த்து.. இங்கயே செட்டில் ஆகப் போறேன்.. நீயும் உன் அம்மா பாக்குற பையனை கல்யாணம் பண்ணிக்கோ.. அதான் உனக்கு நல்லது..!!”

“ப்ச்.. அதான் பேபிலாம் ஒன்னும் ஃபார்ம் ஆகலைல.. அப்புறம் என்ன ஓவரா ஸீன் போட்டுட்டு இருக்குற..?? கமுக்கமா அவனையே கட்டிக்கோ.. கண்டுலாம் புடிக்கமுடியாது..!!”

“காதலும் இல்ல.. ஒரு கருமாந்திரமும் இல்ல.. It’s just matter of one rupee.. just one rupee.. u know..!!”

“அவ கூட பழகிக்காட்டுறியான்னு பசங்க பந்தயம் கட்டுனாங்க.. படுத்தே காட்டுறேன்னு பதிலுக்கு நான் பந்தயம் கட்டுனேன்..!! பந்தயம் எவ்வளவு தெரியுமா.. one rupee..!!!! ஹாஹா ஹாஹா.. I won that one rupee.. u know..??”

Updated: June 15, 2021 — 1:04 pm