எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 13 65

“ஹ்ம்ம்.. ஆக்சுவலா உனக்குத்தான் தேங்க்ஸ் சொல்லணும்.. நான் நெனச்சதை விட ரொம்ம்ம்ப ஈஸியா படிஞ்சுட்ட..!! ஒரே ஒரு தடவைதான்.. இருந்தாலும் லைஃப்லயெ மறக்க முடியாத மாதிரி ஒரு எக்ஸ்பீரியன்ஸ் எனக்கு கொடுத்த.. ஆஹ்ஹ்ஹ்.. இப்ப நெனச்சாலும் அப்படியே ஜிவ்வுன்னு இருக்குது..!! ரொம்ப ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்..!!”

“ஆங்.. அன்னைக்கு நடந்ததுலாம் உனக்கு சரியா ஞாபகம் இல்லைன்னு சொன்னேல.. வீடியோ அனுப்புறேன் பாக்குறியா..?? இன்னும் என் மொபைல்லதான் வச்சிருக்கேன்.. உன் ஞாபகம் வர்றப்போலாம் அப்பப்போ எடுத்து பாத்துக்குவேன்.. ஹாஹா..!!”

“ப்ச்.. நான்தான் சொல்றேன்ல.. எல்லாம் சும்மா ஜாலிக்கு, நீயும் ஜாலியா எடுத்துக்கோன்னு..!! அப்புறமும் சாவப்போறேன், கூவப்போறேன்னா என்ன அர்த்தம்..?? போ.. சாவு.. போ..!!”

இரக்கமே இல்லாமல் சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்தான்..!! ஆண்களை அரவங்கள் என்று அம்மா சொன்னதன் முழு அர்த்தமும் அன்றுதான் எனக்கு விளங்கியது..!! அன்றுதான்.. அம்மாவுக்கு முதன்முறையாக ஹார்ட் அட்டாக்கும் வந்தது..!! உள்ளத்தில் ஏற்பட்ட கொதிப்பை அடக்க முடியாமல்.. உண்மையை அம்மாவிடம் வந்து சொல்ல..

“எ..என்னடி சொல்ற..??”

என்று விரிந்த விழிகளுடன், நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அமர்ந்தவள்தான்..!! அப்புறம்.. மருத்துவமனைக்கு கொண்டுசென்று சிகிச்சை அளித்து.. மறுநாள்தான் கண்விழித்து பார்த்தாள்..!!

அதன்பிறகு வந்த நாட்களில்.. எந்த நேரமும் எனது நிலையை நினைத்து நினைத்து.. அம்மா வடித்த கண்ணீரின் அளவு.. கடலளவு கொள்ளும்..!! தனக்கு நேர்ந்த கொடூரம் தனது பெண்ணுக்கும் நேர்ந்துவிட்டதே என்ற நினைவே.. அவளை கொஞ்சம் கொஞ்சமாய் அரித்து தின்ன ஆரம்பித்தது..!!

“இப்படி பண்ணிட்டியேடி.. எத்தனை தடவை திரும்ப திரும்ப சொல்லிருப்பேன்.. என் பொழைப்பை பாத்துமா உனக்கு புத்தி வரல..??”

அனுதினமும் அம்மாவின் புலம்பல்தான்..!! எனது நிலை அவளை துயரம் கொள்ள செய்ததென்றால்.. அவளது நிலை என்னை நிலைகுலைய செய்தது.. நொறுங்கிப்போக வைத்தது.. அதனால்தானே நான்.. நான் செய்த காரியம் அம்மாவுக்கு மேலும் வேதனையையே கொடுக்கும் என்று ஏன் எனக்கு அப்போது தோன்றவில்லை..??

மீரா இப்போது மீண்டும் தனது ஆசன நிலையை மாற்றி அமைத்துக் கொண்டாள்.. மீண்டும் சம்மணமிட்டு அமர்ந்து.. மார்புகள் ரெண்டும் ‘புஸ்.. புஸ்..’ என சுருங்கி விரிய.. மிக ஆழமாக மூச்சிழுத்து வெளியிட்டாள்.. நெஞ்சில் கொந்தளிக்கிற நினைவுகளை கொஞ்சமாவது அடக்கிட முயன்றாள்.. அவளுடைய முயற்சி தோல்வியே..!!

ஆனால்.. அந்த முயற்சியினால்.. அவளது மனதில் பொங்குகிற நினைவுகள் இப்போது தடம் புரண்டிருந்தன..!! அம்மாவுக்கு வந்த முதல் மாரடைப்பை பற்றி எண்ணியதும் அதனுடன் தொடர்புகொண்ட இன்னொரு நிகழ்வும்.. உடனடியாய் அவளது நினைவுக்கு வந்தது.. அது வேறொன்றுமல்ல.. நீலப்ரபாவுக்கு இரண்டாம் முறையாக மாரடைப்பு வந்த நிகழ்வுதான்..!! அசோக்கின் அறிமுகம் ஏற்பட்ட பிறகேதான் அந்த சம்பவம் நிகழ்ந்தது..!!

அன்று நீலப்ரபாவை டாக்ஸியில் ஏற்றிக்கொண்டு.. மருத்துவமனைக்கு விரைந்த அந்த காட்சி.. இப்போது அவளது மனதில் பளிச்சிட்டது..!! அந்த நள்ளிரவில்.. போக்குவரத்து குறைந்திருந்த அண்ணாசாலையில் அந்த டாக்ஸி பறந்து கொண்டிருந்தது..!! டாக்ஸியின் பின்சீட்டில் மீராவும், நீலப்ரபாவும்..!! மீராவின் மார்பில் தலைசாய்த்திருந்த நீலப்ரபா.. தனது மார்பில் கைவைத்து அழுத்தி பிடித்திருந்தாள்..!! வேதனையில் தத்தளித்துக்கொண்டிருந்த அவளது முகம் வியர்வையில் நனைந்திருந்தது.. கவலையில் துடித்துக்கொண்டிருந்த மீராவின் முகமோ கண்ணீரில் குளித்திருந்தது..!!

“கொஞ்சம் சீக்கிரமா போங்கண்ணா.. ப்ளீஸ்..!!” டாக்ஸி ட்ரைவரிடம் சொன்ன மீரா, பிறகு அம்மாவிடம் திரும்பி,

“கொஞ்சநேரம் பொறுத்துக்கம்மா.. ஹாஸ்பிடல் இந்தா வந்துடும்..!!” என்றாள் ஆறுதலாக.

“இ..இல்லடி.. அ..அம்மா பொழைக்கமாட்டேன்..!!” நீலப்ரபா திணறலாக சொன்னாள்.

“ஐயோ.. ஏன்மா இப்படிலாம் பேசுற..??”

“எ..எனக்கு தெரிஞ்சு போச்சு..!! உ..உன்னை இப்படி விட்டுட்டு போறோமேன்னுதான்.. க..கவலையா இருக்கு..!!”

“அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா.. நீ கொஞ்ச நேரம் பேசாம இரு..!!”

“அ..அப்புறம்.. பேசவே முடியாதே..??”

“அம்மா.. ப்ளீஸ்..!! இப்படிலாம் பேசினா.. அப்புறம் நான் பயந்துடுவேன்..!!”

“அ..அம்மாவை மன்னிச்சிடும்மா..!! நீ படுற கஷ்டத்துக்குலாம் நாந்தான் காரணம்..!!”

“ஹையோ.. என்னம்மா நீ..??” மீராவுக்கு இப்போது அழுகை பீறிட்டது.

“நா..நான் செஞ்ச பாவம்லாம்.. உன்னை புடிச்சு ஆட்டுது..!!”

“இல்லம்மா.. உன்மேல எந்த தப்பும் இல்ல.. நீ எந்த பாவமும் பண்ணல.. நான்தான் பாவி..!! நான் செஞ்ச பாவந்தான்.. உன்னை இந்த மாதிரி ஆக்கிடுச்சு..!! நான்தான் பாவி.. நான்தான் பாவி..!!”

மீரா கண்ணீரோடு கதறியதெல்லாம் நீலப்ரபாவின் காதில் விழுந்த மாதிரியே தெரியவில்லை.. திரும்ப திரும்ப அதே வார்த்தைகளை சொல்லிக்கொண்டிருந்தாள்..!!

“அ..அம்மாவை மன்னிச்சிடும்மா..!! அ..அம்மாவை மன்னிச்சிடும்மா..!!” – அவைதான் நீலப்ரபா பேசிய கடைசி வார்த்தைகள்..!!

“அ..அம்மா.. அம்மா.. ப்ளீஸ்மா.. கண்ணை தொறந்து பாருமா..!! என்னை விட்டு போயிடாதம்மா.. ப்ளீஸ்மா.. எனக்கு உன்னை விட்டா வேற யாரும்மா இருக்காங்க..?? ப்ளீஸ்மா.. என்னை விட்டு போயிடாதம்மா..!!”

அம்மாவின் உயிர் பிரிந்தது தெரியாமல்.. அவளது கன்னத்தை தட்டி தட்டி.. அழுது அரற்றிக்கொண்டிருந்தாள் மீரா..!! நீலப்ரபா செய்த தவறினால்.. மீரா என்ற உயிர் பிறந்தது..!! மீரா செய்த தவறினால்.. நீலப்ரபா என்ற உயிர் பிரிந்தது..!!

மருத்துவமனைக்கு கொண்டு செல்கிற வழியிலேயே நீலப்ரபா இறந்து போனாள்..!! அன்றுதான்.. மீரா அசோக்கை சந்திக்க நேர்ந்த நாளிலிருந்து 47-ஆவது நாள்..!! அதன்பிறகான மூன்று நாட்கள்தான்.. மீராவுக்கு என்ன ஆனது என்று தெரியாமல்.. அசோக் தவித்து திரிந்த நாட்கள்..!!

Updated: June 15, 2021 — 1:04 pm