எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 13 65

தீபாவளியும் அதுவுமாய்.. பட்டாசு வெடித்துக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு சிறுவர்களிடம்தான், அவள் அவ்வாறு கேட்டது..!! அவள் அந்தமாதிரி அந்த சிறுவர்களிடம்.. அடிக்கடி வெட்கத்தை விட்டு நட்பு யாசகம் கேட்பது வழக்கமான ஒன்றுதான்..!! அதே மாதிரி.. அந்த சிறுவர்கள் இவளை திட்டுவதும், குச்சியால் அடித்து விரட்டுவதும், கல் எடுத்து எறிவதுமே வழக்கமான ஒன்றுதான்..!! அந்த சிறுவர்களின் அம்மாக்கள் நீலப்ரபா மீது கொண்டிருந்த ஒரு காரணமற்ற வெறுப்பை.. அப்படியே அந்த சிறுவர்களுக்கும் மீரா மீதான வெறுப்பாக உள்ளீடு செய்திருந்தனர்..!!

எப்போதும் குச்சி.. அல்லது சிறிய கல்..!! அன்று.. தீபாவளி ஸ்பெஷல்.. திரி கொளுத்திய சரவெடியை தூக்கி மீராவின் மீது போட்டார்கள்..!!! மேலே விழுந்த சரவெடி.. ‘பட்.. பட்.. பட்..’ என்று வெப்பமாக வெடித்து சிதற.. துள்ளித்துடித்து பதறிப்போன மீராக்குட்டி.. முதுகுப்புறம் கைவைத்து தட்டிவிட்டவாறே..

“அம்மாஆஆஆஆ..!!!!!” என்று கதறிக்கொண்டு வீட்டுக்கு ஓடினாள்.

“பட்.. பட்.. பட்.. பட்.. பட்..!!!”

யோகாவிலிருக்கும் மீராவின் செவிப்பறைகளில் இப்போது அந்த சரவெடி வெடித்து.. அந்த நினைவு இப்போதும் அவளை துன்புறுத்தியது..!! வீட்டுக்குள் ஓடிவந்து, அன்று முழுதும் அம்மாவின் மடியை கட்டிக்கொண்டு, ‘ஒஒஒஒ’ என அழுது கண்ணீர் சிந்தியது நினைவுக்கு வந்தது..!! மீராவுடைய இமைகள் இன்னும் மூடியிருக்க.. மனதுக்குள் மட்டும் ஒரு ஆதங்கம் பொங்கியது.. ‘ஹ்ஹாஆஆ..’ என்று வேதனை கலந்த ஒரு வெப்ப மூச்சினை வெளிப்படுத்தினாள்.. அவளுடைய மார்புகள் வேறு விம்மி விம்மி நிமிர்ந்தன..!!

அந்த சரவெடி சம்பவத்துக்கு அப்புறம்.. அடுத்தவர்களிடம் நட்பு யாசகம் கேட்கிற வழக்கத்தை.. மீரா முற்றிலுமாக கைவிட்டுவிட்டாள்..!! ‘யாராவது பேசினால்தான் நாமும் பேச வேண்டும்.. வலிய சென்று நாமாக பேசினால், வலியையே அனுபவிக்க நேரிடும்..’ என்ற ஒரு கொடுமையான எண்ணத்தை.. அந்த பிஞ்சு வயதிலேயே நெஞ்சில் பதித்துக் கொண்டாள்..!!

அந்த தீபாவளிக்கு அடுத்த நாள்..

“ஹைய்ய்ய்.. டெடி பேர் (teddy bear)..!!!!”

கண்களில் பிரகாசமும், குரலில் உற்சாகமுமாக.. அம்மாவின் கையிலிருந்த அந்த கரடி பொம்மையை.. மீரா ஆவலாக வாங்கிக்கொண்டாள்..!!

“பொம்மை உனக்கு பிடிச்சிருக்கா சின்னு..??”

“ம்ம்ம்ம்… பிடிச்சிருக்கே.. ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.. ரொம்ம்ம்ப அழகா இருக்கு..!!” குட்டி மீரா முத்துப்பற்கள் தெரிய சிரித்தாள்.

“ம்ம்.. இனிமே இந்த பொம்மைதான் சின்னுக்குட்டியோட பிரண்டாம்.. சரியா..??”

“ஹைய்ய்ய்.. இந்த டெடி பேர் என் ஃப்ரண்டா..??” கேட்கும்போதே ஒரு பரவசம் மீராவின் முகத்தில் பொங்கியது.

“ஆ..ஆமாம்.. இதுதான் உன் பிரண்டு..!!” சொல்லும்போதே ஒரு துக்கம் நீலப்ரபாவின் நெஞ்சை அடைத்தது.

“ஹாய் டெடி ஃப்ரண்ட்.. ஹவ் ஆர் யூ..??” மீரா கவலை மறந்து குதுகலாமானாள்.

அம்மாவுக்கு அடுத்தபடியாக அந்த கரடி பொம்மையை மீராவுக்கு மிகவும் பிடித்துப் போனது..!! எங்கு சென்றாலும் தூக்கிக்கொண்டே அலைந்தாள்.. எதுவும் பதில் பேசாமல் அந்த பொம்மை புன்னகைத்துக்கொண்டே இருந்தாலும்.. இவள் அதனுடன் லொடலொடவென பேசிக்கொண்டே இருப்பாள்..!!

“இந்த ட்ரஸ் எனக்கு நல்லா இருக்கா டெடி பேர்.. பாப்பா அழக்கா இருக்கேனா..??”

“ஷேம் ஷேம் பப்பி ஷேம்.. ஹஹா.. ஹஹா..!!”

“வாக்கிங் போலாமா டெடி பேர்..?? வா.. வாக்கிங் போலாம்..!!”

“போ.. உன்கூட டூ.. பேசமாட்டேன் போ..!!”

“இது எக்ஸ்.. இது வொய்.. இது இஸட்.. தேட்ஸ் இட்..!!”

அதற்கு முத்தமிட்டாள்.. அதனுடன் சண்டையிட்டாள்.. சட்டை போட்டு விட்டாள்.. சாதம் ஊட்டி விட்டாள்.. மடியில் கிடத்தி தாலாட்டினாள்.. மார்பில் போட்டு கண்ணுறங்கினாள்..!!

முன்பெல்லாம் அம்மாவை கட்டிக்கொண்டுதான் தூங்குவாள்..!! தூங்கும் நேரம் மட்டுமல்ல.. எந்த நேரமும் அம்மாவின் பார்வை தன் மீது பதிந்திருக்க வேண்டும் என்று நினைப்பாள்..!! அம்மா அருகில் இல்லாத ஒவ்வொரு நொடியுமே.. ஒருவித பாதுகாப்பற்ற தன்மையை உணர்வாள்..!! அதுவும் இரவு நேரங்களில் கேட்கவே வேண்டாம்.. அந்த பயம் அதிகமாக அவளுக்குள் எழும்..!! மதுசூதனன் வீட்டுக்கு வருகிற அந்த வாரத்து ஒருநாளில்.. அம்மா இல்லாமல் தனித்திருக்க வேண்டிய சூழலில்.. தவித்து, மிரண்டு, துடித்துப் போவாள்..!!

“போகாதம்மா..!! பாப்பாக்கு பயமா இருக்குல..??” அம்மாவிடம் கெஞ்சுவாள்.

“ஹையோ.. அழக்கூடாது சின்னு..!! அப்பா வந்திருக்கார்ல.. அம்மா போய் கொஞ்ச நேரம் அப்பாட்ட பேசிட்டு வர்றேன்..!! நீ நல்லபுள்ளையா தூங்குவியாம்..!!”

“எனக்கு பயமா இருக்கும்.. தூக்கம் வராது..!!” மீரா பரிதாபமாக சொல்லிக்கொண்டிருக்கும்போதே,

“ஏய்..!!! இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க அங்க..??” அடுத்த அறையில் இருந்து மதுசூதனனின் குரல் பொறுமையில்லாமல் ஒலிக்கும்.

“ஆங்.. இதோ வந்துட்டேன்..!!” இங்கிருந்தே அவருக்கு பதில் சொல்கிற நீலப்ரபா,

“படுத்துக்கோடா செல்லம்.. அம்மா இதோ அஞ்சு நிமிஷத்துல வந்துடுறேன்..!!” என்று மீராவை சமாதானம் செய்து, படுக்கையில் கிடத்திவிட்டு செல்வாள்.

Updated: June 15, 2021 — 1:04 pm