உங்க மாப்பிள்ளை எப்பவோ ரெடி அக்கா 173

சாமியார் சொல்வது ராஜுவிற்கு சரியாக பிடிபடவில்லை.

“உன் மக மீனாவுக்கு ரெண்டு தாலி. என்னதான் உன் மூத்த மாப்பிள்ளைக்கு கண்டம் இருந்தாலும், உன் பொண்ணோட ஜாதகப்படி அவ தாலி அறுக்க வேண்டிய காலம். அதான் அந்த கண்டத்துல இருந்து உன் மாப்பிள்ளை தப்பிக்க முடியலை. சரி விடு. உன் மக ஜாதகப்படி யோககாலம் தொடங்கியாச்சு.”

ராஜு மனதிற்கு ஆறுதலாக இருந்தது.

“யோககாலம் தொடங்கிடிச்சின்னாலும் இன்னமும் களத்திர ஸ்தானம் சரியாக்களை.”

“என்ன சாமி சொல்றீங்க”

“ஆமாம். இன்னும் 4 வருஷம் கழிச்சி தான் அவ கழுத்துல அடுத்த தாலி ஏறனும்”

“அப்படீங்களா”

“ஆமாம். ஏன் என்ன ஆச்சு”

“ஒன்னும் இல்லீங்க சாமி”

“என்ன குணா அவசரப்படுறானா. எனக்கு அவனை 5 வருஷமா தெரியும். அவன் குணம் நல்லாவே தெரியும்”

ராஜு மென்று முழுங்கினார். “வந்து குணா தம்பி கிட்ட நீங்களே பதமா சொன்னீங்கன்னா….”

“ராஜு இதை நான் சொல்லக்கூடாதுதான். தாலி கட்டத்தான் 4 வருஷம் பொறுக்கணும்…. புரிஞ்சிக்குவேன்னு நினைக்கிறேன்”

அப்போ….. தாலி கட்டாம… ச்சே ச்சே…

“நான் தான் சொன்னேனே ராஜு…. உன் குடும்ப கவுரவம் பத்தின எண்ணத்தை விடு. உன் வம்சம் முடிஞ்சிடிச்சி. இது மீனாவோட வம்சம். அதுக்கு நீ இப்போதைக்கு கார்டியன் தான்.”

“இருந்தாலும் சாமி….”

“மீனா ஜாதகம் அப்படி இருக்குப்பா. இதுக்கே இப்படின்னா…. உன் பேத்தி அனுபமா ஜாதகம்….”

“சாமி அனு ஜாதகத்துல என்ன பிரச்சனை ”

“அதை அப்புறம் பார்ப்போம்.”

ராஜுவிற்கு வியர்த்து வழிந்தது.

“மீனாவுக்கு இப்போ யோகமும் கெட்ட பேரும் சேர்ந்து வந்திருக்கு. காசு பணம் கொட்டும். சொத்து சேரும். அதே அளவுக்கு கெட்ட பேரும், பகையும் சேரும்”

“ஏதும் பரிகாரம் இல்லையா சாமி.”

“பரிகாரம் பண்ணுனா கெட்டத்தோட சேர்ந்து வரவேண்டிய நல்லதும் போயிடும்ப்பா”

“வேற வழி இல்லையா சாமி”

“4 வருஷத்துக்கு அவ தாலிக்கட்டம தான் குணா கூட வாழனும். வேணும்னா பழைய தாலியை அவ கழுத்துல போட்டுக்க சொல்லு.”

“சரிங்க.”

சாமியார் ஒரு நாளை குறித்துக்கொடுத்தார். 4 ஆண்டுகள் & 2 மாதங்கள் கழித்த ஒரு சுபமுகூர்த்த நாள். அந்த நாளில் குணா-மீனா கல்யாணத்தை வைத்துக்கொள்ள சொன்னார்.

“உன் பேரன் வித்யாவுக்கு இனி வாழ்க்கையில எல்லாமே ஏத்தம் தான். அவன் அம்மாவாலையும் தங்கையாளையும் வாழ்க்கையில மேல மேல போக போறான்”