உங்க மாப்பிள்ளை எப்பவோ ரெடி அக்கா 173

“மாப்பிள்ளை செத்த அன்னைக்கே விட்டுட்டு போனவங்க. திரும்பிக்கூட பார்க்கலை”

“அடப்பாவமே…. ராஜு (குழைந்தபடி சொன்னார்) நான் ஒரு யோசனை சொல்லட்டுமா”

“சொல்லுங்க ஐயா”

“வந்து…. உங்களுக்கு பாரமா இருக்குற உங்க பொண்ணுக்கு ஒரு மறு கல்யாணம் செஞ்சு வெச்சிட்டா, உங்க பாரம் குறையும் இல்ல”

“ஐயா… மறு கல்யாணம் செஞ்சி வெச்சாலும் பேரன் பேத்தியை நான் தானே பாத்துக்கணும்”

“ஒரு வேளை கட்டிக்கிறவனே பார்த்துக்கிட்டா”

“அப்படி யாருங்க ஐயா பார்த்துக்குங்க”

“பார்த்துக்கிட்டா ”

ராஜுவின் மனதில் புது தெம்பு. அவர் முகத்திலும் தெரிந்தது. “அப்படி இருந்தா தான் ரொம்ப நல்லா இருக்குமே. அப்படி பட்ட பையன் யாருங்கய்யா”

“ஏன் ராஜு…. நான் உங்க பொண்ணு மேல ஆசைப்பட்டா மறுப்பீங்களா”

ராஜுவின் தெம்பெல்லாம் சரிந்துவிட்டது. இடி விழுந்தது போல ஆகிவிட்டது.

ராஜு வீ ட்டிற்கு வந்ததில் இருந்து என்னமோ மாதிரி இருக்க, பொறுக்கமாட்டாமல் கவிதா கேட்டாள். முதலில் மழுப்பினாலும், அடுத்தநாள் மீனா வெளியே சென்ற பிறகு தன் மனைவி கவிதாவிடம் நடந்ததை சொன்னார் ராஜு.

கவிதாவும் கலங்கிப்போனாள். ஒரே ஆறுதல் குணா முரட்டுத்தனமாக முயற்சிக்கவில்லை. ராஜுவிடம் கூட யோசித்து 1 வாரம் கழித்து சொன்னால் போதும் என்றார்.

கவிதா இரண்டு நாட்களாக மனம் குழம்பினாலும் மூன்றாம் நாள் தன் கணவன் ராஜு வந்தவுடன் அவரை அழைத்துக்கொண்டு கடைக்கு போவது போல போக்குக்காட்டி தனி இடத்திற்கு அழைத்துச்சென்றாள்.

“சொல்லு கவி. நான் சொன்னா மாதிரி எங்காவது கண்காணாத இடத்துக்கு மொத்தமா போயிடுவோம்”

“போயி…. சொந்த வீட்டை விட்டுட்டு எங்க போயி என்ன செய்யங்க”

“வேற வழி என்ன இருக்கு. மொத்தமா 5 பேரும் தற்கொலை பண்ணிக்க வேண்டியதுதான்”

“ரொம்ப நல்லதுங்க. மூட்ட பூச்சி தொல்லைக்காக வீட்டை கொளுத்துன கதை தான்”

“என்ன தான் செய்யலாம் சொல்லு”

“மீனாவுக்கு வாழவேண்டிய வயசுங்க. அவளுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நாமே பேசி இருக்கோமே”

“இன்னொரு கல்யாணம்னா… தாரம் இழந்தவனுக்கோ, விவாகரத்து ஆனவனுக்கோ தானே…. இவன் பொண்டாட்டி கூட வாழுறவன். நம்ம பொண்ணை….” தடுமாறினார்.

“வெச்சிக்க பாக்குறான்னு சொல்லுறீங்களா” அழுத்தமாக கேட்டாள் கவிதா.

“ஏன்டி…. நாமே நம்ம பொண்ணு சோரம் போக துணை போகலாமா”

யாரும் இல்லாத இடம் என்பதால் தைரியமாக தன் கணவன் மார்பில் சாய்ந்தாள் கவிதா… “நான் அப்படி சொல்வேனா”