உங்க மாப்பிள்ளை எப்பவோ ரெடி அக்கா 173

தோப்பு சாமியார் ராஜுவின் குடும்பத்திற்கு நெடுநாள் பழக்கம். ராஜுவின் அப்பா காலத்தில் இருந்து தெரியும். ராஜுவின் அப்பாவை விட 4-5 வயது குறைந்தவராக இருக்கலாம். இப்போது 85 வயது. கும்மிடிப்பூண்டி பக்கம் அவருக்கு தோப்பு உண்டு. அங்கே கோவில் கட்டி, குறிசொல்வது, ஜோதிடம் பார்ப்பது, பரிகார பூஜை எல்லாம் செய்கிறார்.

வாரத்தில் 2 நாட்கள் அவர் திருமுல்லைவாயில் அருகில் உள்ள அவர் மகள் வீட்டில் இருப்பார். ராஜுவிற்கு அவர் குடும்பத்தவர்களை தெரியும் என்பதால் அவர் வித்யாசாகரை கூட்டிக்கொண்டு மீனா & மற்ற குடும்பத்தவர்கள் ஜாதகங்களையும் குணாவின் ஜாதகத்தையும் எடுத்துக்கொண்டு சென்றார். பொதுவாக சாமியார் மகள் வீட்டில் தன் பிசினெஸ்ஸை பார்ப்பதில்லை என்றாலும் ராஜு தெரிந்தவர் என்பதாலும் அன்று மகள் குடும்பத்தவர்கள் ஒரு கல்யாணத்திற்கு வெளியூர் சென்றிருந்தாலும் சம்மதித்தார்.

சுருக்கமாகவும் கவுரவமான வகையிலும் ராஜு குணா சங்கதியை சொன்னார். குழந்தை இல்லாத குணா மீனாவை கல்யாணம் செய்துக்கொள்ள விரும்புவதை சொன்னார்.

மீனா, வித்யாசாகர், அனுபமாவின் ஜாதகங்களையும் குணாவின் ஜாதகத்தையும் முதலில் ஆராய்ந்தார் தோப்பு சாமியார்.

கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் அங்கே யாரும் பேசிக்கொள்ளவில்லை. சாமியார் கைவிரல்களை விட்டு கணக்குப்போடுவதும், அதை ஒரு பேப்பரில் குறிப்பதுமாக பிசியாக இருந்தார். பிறகு சிறிது நேரம் ஆழ்ந்த யோசனையிலும் சரிபார்ப்பதிலும் பிசியாக இருந்தார்.

ராஜுவும் வித்யாவும் வேடிக்கை பார்ப்பதை தவிர வேறு வேலை இல்லை.

ஒரு வழியாக சாமியார் தொண்டையை கனைத்துவிட்டு பேசத்தொடங்கினார்.

“ராஜு…. எனக்கு உன் குடும்பத்தை கிட்டத்தட்ட 70 வருசமா தெரியும் இல்லையா”

“ஆமாம் சாமி. அப்பா உங்க மேலதான் தீவிர நம்பிக்கை வெச்சிருந்தார். நானும் அப்படி தானுங்க”

“ம்… ”

“உன் பையன் அந்த மலையாளத்தாளை கட்டிக்கிட்டானே… எப்படி இருக்கான்”

“இருக்கானுங்க. ஒரு பொட்ட பிள்ளை அவனுக்கு ”

“ம்….”

“எப்படியோ உன் வம்சம் உன்னோட முடிஞ்சிடிச்சி”

“என்ன சாமி சொல்லுறீங்க”

“உன் பையன் தான் மலையாள கிறிஸ்தவச்சியை கட்டிக்கிட்டானே. அவன் எப்படி உனக்கு வாரிசுங்குற தகுதியோட இருக்க முடியும்”

“அவன் மதம் மாறலீங்க”

“அந்த பேச்சை விடு. நான் என்ன சொல்ல வரேன்னா…. இனி உன் காலம் உன் மக வழி பிள்ளைகளோட தான். அதனால உன் குடும்ப பெருமை, பாரம்பரியம் எல்லாம் பத்தி பெருசா மனசை அலட்டிக்காம, காலத்துக்கு ஏத்தமாதிரி இருக்க பாரு”