உங்க மாப்பிள்ளை எப்பவோ ரெடி அக்கா 173

மீனாவும் குமுதாவிடம் நன்றி விசுவாசத்தோடு தான் இருந்தாள்.

இரண்டு ஆண்டுகள் வரை மீனாவை குணா பார்த்ததில்லை. தன் அக்காள் கணவரான மந்திரியின் பினாமியாக மலேசியாவில் இருந்த சொத்துக்களை பார்த்துக்கொள்ள அங்கே சென்றுருந்தார் குணா. எதற்கு 2 வருஷம் மலேசியாவில் தொடர்ந்து இருக்க வேண்டும்? வேற என்ன… இங்கே ஒரு கேசில் தேடப்பட்டார். நிலைமை சரியாகும் வரை பாதுகாப்பிற்காக அங்கே சென்றார்.

குமுதாவின் நேரம் சரி இல்லை போல. குணா மலேசியாவில் இருந்து வந்த நாளே மீனா அவர் கண்ணில் பட்டுவிட்டாள்.

குமுதாவும் நல்ல அழகி தான். ஆனால் ஆள் கருப்பு. மீனா சிவப்பு. அந்த சிவப்பழகும், உடல் அழகும் குணாவை என்னவோ செய்தது. இருந்தாலும் வெளிக்காட்டி கொள்ளவில்லை.

மீனாவின் கதையை குணாவிடம் சொல்லி வருத்தப்பட்டுள்ளாள் குமுதா. குணாவிற்கு இயற்கையிலேயே இரக்க குணம். மீனாவின் அப்பா ராஜு பாங்கில் கிளெர்க் வேலை பார்த்து ரிட்டயர்டு ஆனவர். அவருக்கு தன் ஆபீசில் வேலை போட்டுக்கொடுத்தார் குணா. ராஜுவும் குணாவிற்கு விசுவாசமாக இருக்கலானார். குணாவின் காஷியர் ராஜு. எத்தனை லட்சம் / கோடி பணம் ஆனாலும் நம்பிக்கையாக கையாள்பவர் ராஜு. குணாவும் குமுதாவிடம் இதை பெருமையாக சொல்வார். இது குமுதாவின் மனதில் மீனாவின் மேல் இருந்த பாசத்தை இன்னும் பெருக்கியது.

ஒரு வருஷம் கழித்து, அம்மாவின் உடல் நிலை சரியில்லை என்று அவளை பார்க்க தன் சொந்த ஊரான ஆந்திர மாநிலம் குண்டூருக்கு சென்றால் குமுதா. நேரம் தேடிக்கொண்டு இருந்த குணா இதை சாதகமாக்கிக்கொண்டார்.

ராஜூவை ஒருநாள் சாயந்திரம் 5 ஸ்டார் ஹோட்டலுக்கு அழைத்துச்சென்று பாரின் சரக்கு வாங்கித்தந்தார். அது குணாவிற்கு என்று எப்போதும் ரிசர்வில் உள்ள ரூம். ராஜுவின் முகமெல்லாம் பல்.

“ரொம்ப தாங்க்ஸ் முதலாளி”

“என்ன ராஜு நீங்க. எனக்கு எவ்வளவு விசுவாசமா இருக்கீங்க. நமக்குள்ள என்ன தாங்க்ஸ் எல்லாம்”

“அப்படி இல்லீங்க. நீங்க முதலாளி எவ்வளவு பெரிய ஆள். என்னையும் மதிச்சு உங்களுக்கு சமமா பாரின் சரக்கு வாங்கி தர்றீங்களே”

“ராஜு” அவர் தோளில் கை போட்டுக்கொண்டு…”நாம ரெண்டு பேரும் சரி சமமா ஆக ஒரு வழி உண்டு”

“என்ன சொல்லுறீங்க…. நீங்க படி அளந்தாதான் என் வீட்டுல உலை”

ராஜூவை தட்டிக்கொடுத்தார் குணா.

“ராஜு, உங்களுக்கு ஒரு பேரன் ஒரு பேத்தி இல்லை”

“மகள் வழியில ஆமாங்க. என் மகனுக்கு ஒரே பொண்ணு தாங்க”

“மகள் வழி பேர புள்ளைங்க உங்க பராமரிப்புல தானே இருக்கு. பேரன் படிப்புச்செலவு, பேத்தி கல்யாண செலவுக்கெல்லாம் சேத்து வெச்சி இருக்கீங்களா”

“சொந்தமா ஒரு வீடு. அது உங்களுக்கே தெரியுமே. அதை விட்டா பெருசா ஒன்னும் இல்லீங்க”

“சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே….”

“ஐயோ ஐயா… சொல்லுங்க…”

“உங்க பையன் வந்து வீட்டை தன் பேருக்கு எழுதி கொடுக்க சொன்னா உங்க பொண்ணும் அதன் பிள்ளைங்க நிலைமை என்னாகுறது?”

வேர்த்து வியர்த்தது ராஜுவிற்கு.

குணா தொடர்ந்தார். “ஒரு பேச்சுக்கு தான் ராஜு அப்படி சொன்னேன்…. சரி, செத்துப்போன உங்க மாப்பிள்ளை வீட்டுல எதுவும் உதவலியா”