பழிக்குப்பழி End 95

dont worry இந்த கோபத்தைலாம் உன் பொண்ணு மேல காட்ட மாட்டேன் என்றாள், நான் சிரித்தேன், இனிமே அவல அவ அம்மாவை விட நான் நல்லா பாத்துக்வேன், அவளுக்காகலாம் இல்ல, நான் உன்மேல வெச்சிருக்க loveகாக என்றாள். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை, ஒரே ஒரு ஆசை எனக்கு நிறவேத்துவியா என்றாள், ஹ்ம்ம் என்றேன், ஒரே ஒருமுறை கட்டி பிடுச்சுக்கிட்டா என்றாள், நான் யோசித்தேன், அதற்குள் பக்கம் வந்து என்னை இறுக்கமாக கட்டிப்பிடித்து நெஞ்சில் சாய்ந்து கொண்டாள், என் சட்டை அவள் கண்ணீரால் ஈரம் ஆனது. என் கையை பிடித்து அவளை கட்டி பிடிக்க சொன்னாள் நான் ஏதும் செய்யவில்லை.

ஒரு 1 நிமிடம் இருக்கும், என்னைவிட்டு விலகி கண்ணை துடைத்துக்கொண்டு திரும்பி பார்க்காமல் சென்றாள். நான் வீட்டுக்கு போகாமல் என் பழைய கிளினிக் சென்றேன், இன்னும் அவள் இங்கேயே இருப்பது போல தோன்றியது, செரி என்று பூட்டிவிட்டு வீட்டுக்கு வந்தேன், எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாது போல தோன்றியது, அட எனக்கு என்ன ஆச்சு என்று என்னை பார்க்க எனக்கே பிடிக்கவில்லை, கண்ணாடியில் முகம் பார்க்க, தாடி , அதை பார்த்ததும் அவள் ஞாபகம், உடனே shave செய்தேன், என் மனைவியிடம் பேசக்கூட எனக்கு தோன்றவில்லை.

மனசு வலித்தது, இந்நேரம் பவித்ரா என்ன செய்து கொண்டிருப்பாள், சாப்பிட்டு இருப்பாளா என்று மனசு அடித்துக்கொண்டது, பேசாமல் பாட்டியை பார்ப்பது போல அவளை பார்த்துவிட்டு வந்துவிடலாமா என்றெல்லாம் தோன்றியது, பல்லை கடித்து கொண்டு இரண்டு நாள் ஓட்டினேன், என்னை அறியாமலே பழய கிளினிக் போகிறேன், போய் ஏமாற்றத்துடன் திரும்பி வருகிறேன், ச்ச ஒருமுறையாவது அவளை கட்டி தழுவி இருந்தாள் என் ஏக்கம் போயிருக்குமே என்று இருந்தது, நான் இப்படி நினைப்பது தவறு, இது என் மனைவிக்கு செய்யும் துரோகம் என்று புத்திக்கு தெரிந்தாலும் மனசுக்கு தெரியவில்லை. என் பவித்ராவை பத்தி சொல்ல வேண்டும் என்றாள், பார்க்க நல்லா பெரிய பொண்ணு போல இருப்பாள், எனக்கே காதுக்கு இருப்பாள், நல்ல அழகு, இதெல்லாமே நான் இப்பொழுது தான் நோட் செய்தேன், எப்போதுமே சிரிக்கின்ற முகம் ஆனால் நக்கல் கொழுப்பு ஜாஸ்தி.

இவ்வளவு நாள் இங்கே இருந்தும் ஒருமுறை கூட என்னை காயப்படுத்தும் எண்ணம் இல்லை அன்று அவ்வளவு அடித்த போது கூட, அமைதியாக அடி வாங்கினாள், அதெல்லாம் நினைக்க நினைக்க கஷ்டமாக இருந்தது,
என்னுடைய marriage arranged marriage, so அதில் பெரிதாக காதல் பகுதி என்று எதுவும் இல்லை, என் வேலையை நான் அதிகமாக காதல் செய்ததால் என் மனைவியை காதலிக்க நேரமில்லை,

ஒருவேளை என் மனைவியை பிரிந்து இருந்தால் நான் உணர்ந்திருப்பேனோ என்னமோ, என் கூடவே தான் இருப்பாள், அவள் மீது அன்பு ஜாஸ்தி, அவள் இல்லை என்றாள் நான் உயிர் வாழ்வது கடினம், இறந்தே போய்விடுவேன், இப்போது அதே நிலை தான் இருக்கிறது, பவித்ராவை நான் விட்டு பிரிந்து இருக்கும் இந்த தருணம், அப்போ இது காதல் தான் என்று புரிந்தது. கேக்க கொஞ்சம் நாராசமாக இருந்தாலும் அதான் உண்மை. இந்த வயதில் அதும் என் பெண்ணை இவ்ளோ தீங்கு செய்த ஒரு பெண்ணின் மீது.

1 Comment

  1. Super super super super super super super super super super super super super

Comments are closed.