ஐ லவ் யூ ஸோ மச்.. மாம்.. ! 63

” இல்ல.. உன்னால எப்படி.. இப்படி சட்டுனு உன் மனசை மாத்திக்க முடிஞ்சிது..??” நான் அவளைப் பார்த்துக் கேட்க.. அவள் மெலிதான புன் சிரிப்பைக் காட்டினாள்.
” என் மனசை என்னால மாத்திக்க முடியலை மாம். என் காதலுக்கு அவன் லாயக்கானவன் இல்லேன்னு தெரிஞ்சதுக்கு அப்பறமும் நான் ஏன் அவனையே நினைச்சிட்டு இருக்கனும். ?? அதான்..என் மனசை நான் ரிப்ரெஷ் பண்ணிக்க முடிவு பண்ணிட்டேன். அதுக்காக உங்களை நான் கம்பெல் பண்ணலை. உங்களுக்கு ஓகேன்னா.. யூ லவ் மீ.. இல்லேன்னா ஐ லவ் யூ மட்டும்.. ”
அவள் அப்படிச் சொன்னபோது என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. என் ஒற்றை விரலால் அவள் கன்னம் தட்டிச் சிரித்தேன்.!!
” ம்ம்.. குட்..!! பாசிட்டிவ் தாட்தான்.. பட்… எனக்குத்தான்.. இன்னும் ஏத்துக்க முடியலை..!!”
” மாம்.. நான் மறுபடி சொல்றேன். நீங்க என்னை லவ் பண்ணனும்னு அவசியம் இல்லை. நான் பண்றேன். எனக்கு கம்பெனி குடுங்க.. போதும்..”
இப்போதைக்கு நான் அவளுடன் வாக்குவாதம் செய்வதை விரும்பவில்லை. அவள் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது.. !!
மடை மாற்றம் என்பது யாருக்கும் தேவையான ஒன்றுதான். என்ன.. இவள் அதை விளையாட்டாகவே எடுத்துக் கொள்கிறாள்.!!
மேலும் ஒரு அரை மணி நேரம் சும்மா பேசிக் கொண்டிருந்த பின் என் பக்கத்தில் நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு கேட்டாள் லாவன்யா.
” இன்னிக்கு பூரா.. இந்த ரூம்லயே உக்காந்துட்டிருக்க போறோமோ மாம்.. ??”
” ஏன்.. ?? வேற என்ன பண்றது.. ??”
” சினிமா போலாமா..? மேட்னி.. ??” என அவள் ஆவலாகக் கேட்க.. நான் தலையை ஆட்டினேன்.
” என்ன படத்துக்கு. ??”
” தளபதி படத்துக்கு போலாம்..!! பைரவா. !!” என்றாள்.. !!
மதிய உணவை ஒரு அசைவ உணவகத்தில் முடித்துக் கொண்டு தியேட்டருக்குப் போனோம். !!
ஏ ஸி தியேட்டரில் அருகருகே உட்கார்ந்ததும் லாவண்யா என் கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக் கொண்டாள். !!

6 Comments

Add a Comment
  1. கதையை ஒரு சுவாரசியமாக எழுத உங்களால் மட்டுமே முடிகிறது.
    நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களை வரவேற்கிறேன்.

  2. அருமை அருமை

  3. செம்ம யா இருக்கு பா
    அருமையான கதை
    படிக்க படிக்க ஸ்வாரசியம்

Leave a Reply

Your email address will not be published.