ஐ லவ் யூ ஸோ மச்.. மாம்.. ! 82

எனக்கும் அவனைத் தெரியும். இவளது பள்ளியில் துவங்கிய காதல் அது..!! அதனால்தான்.. பள்ளிப் படிப்பை முடித்த கையோடு இவளைக் கொண்டு வந்து இங்கே தள்ளி விட்டுப் போனார்கள்..!! அவன் கில்லாடி .. விடாமல் இவளைத் துரத்தி வந்து… காதல் வலையை விரித்து.. காரியத்தை சாதித்து விட்டான்.. !!
சிறிது நேரம் அழுது கலங்கிய லாவண்யா.. கண்களையும் கன்னங்களையும் அழுத்தித் துடைத்துக் கொண்டாள். துப்பட்டாவால் மூக்கைச் சிந்தி சுத்தம் செய்து கொண்டாள். !!
என் பக்கம் திரும்பி அமைதியாக.. உட்கார்ந்து கொண்டிருந்த என்னைப் பார்த்தாள். அவள் கண் இமைகள் நீரில் நனைந்திருந்தன.. !!
” ஸாரி.. ” என முனகினாள்.
” ம்ம்..!!” நான் அவளைப் பார்த்துச் சொன்னேன். ”எல்லாம் வயசு கோளாறும்பாங்க..!! அந்த வயசுல சொன்னா அது புரியறதில்ல. இப்ப பாரு..?? உன் படிப்பு போயி.. பெத்தவங்களுக்கு பகையாகி.. தேவையா இதெல்லாம்.. ??”
“ஹ்ம்ம்ம்” மெலிதாகப் புன்னகைத்தாள்.
” பட்டாத்தான் புத்தி வருது.. !!”

6 Comments

  1. Welcome Niru….

  2. கதையை ஒரு சுவாரசியமாக எழுத உங்களால் மட்டுமே முடிகிறது.
    நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களை வரவேற்கிறேன்.

  3. அருமை அருமை

  4. செம்ம யா இருக்கு பா
    அருமையான கதை
    படிக்க படிக்க ஸ்வாரசியம்

Comments are closed.