ஐ லவ் யூ ஸோ மச்.. மாம்.. ! 57

நான் நிருதி.. !! இன்னும் கல்யாணம் ஆகவில்லை. பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.. !! நான்கைந்து வேலைகள் மாறி.. மாறி இப்போது தற்காலிகமாக.. ஒர யமஹா பைக் ஷோ ரூமில் வேலை செய்கிறேன்..!! என் சொந்த ஊர் கிராமம் என்பதால்.. இங்கு தெரிந்த ஒரு நண்பன் மூலமாக ஒரு தனி ரூம் பிடித்து தங்கியிருக்கிறேன்.. !!
இவள் லாவண்யா..!! என் அத்தையின் மகனின் மகள்..!! நான் அவளுக்கு மாமா.. !! பள்ளிப் படிப்பை முடித்த கையோடு.. இங்கு நான் இருக்கும் நகரத்தில் ஒரு நூல் மில்லுக்கு வேலைக்கு வந்து விட்டாள். !! அவளாக வரவில்லை. அவளைக் கொண்டு வந்து தள்ளி விட்டுப் போய் விட்டார்கள்..!! எல்லாம் இந்த காதலால் வந்த விணை.. !! அவள் வந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகிறது.. !!
நாங்கள் இரண்டு பேரும் ஒரே ஊர்..!! பக்கத்து பக்கத்து வீடு..!! நெருங்கிய சொந்தம் என்பதால்.. இங்கு நான் மட்டும்தான் அவளுக்கு ஆதரவு.. !! வாரம் ஒரு முறை அவள் லீவில் இருக்கும் போது.. சந்தர்ப்பம் அமைந்தால் என் ரூம்க்கு வந்து விட்டு போவாள்..!!
இன்றும் அப்படி வந்தவள்தான். !! அவள் வரும்போதெல்லாம் மாலை நேரத்தை நாங்கள் இந்த பார்க்கில்தான் கழிப்போம்..!! நாங்கள் இங்கு வந்து அரை மணி நேரம் கழித்துத்தான் சொன்னாள்..!! அவள் காதலனுக்கும் அவளுக்கும் சண்டை வந்து.. பிரிந்து விட்டார்களாம்..!!
சண்டைக்கு காரணம்.. அவன் வேறு ஒரு பெண்ணை விரும்புகிறானாம்..!! அவளைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று இவளிடமே சொன்னானாம்.. !!

3 Comments

Add a Comment
  1. கதையை ஒரு சுவாரசியமாக எழுத உங்களால் மட்டுமே முடிகிறது.
    நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களை வரவேற்கிறேன்.

  2. அருமை அருமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *