என்ன பண்றது என் காதலனச்சே!! 532

அப்பா: டேய் நீ எதுக்கு டா அங்க போற?

நான்: ஆஹ்ஹ்!!! மாடில இருந்து நிலாக்கு சாட்டிலைட் அனுப்ப போறேன்.

அம்மா: ஏங்க சும்மா இருங்க. அவன் சௌமியா கிட்ட சமாதானம் பேசி கீழ கூப்பிட்டு வருவான்.

எந்த நேரம் தோள் கொடுப்பாங்க, எந்த நேரம் காலை வாருவாங்க ன்னு புரிஞ்சு கொள்ள முடியாத இந்த அம்மாவை பாத்து நான் நன்றி சொல்ற மாதிரி சிரிச்சுட்டு மாடிக்கு போனேன். அண்ணி குத்துக்கால் போட்டு உக்காந்து முந்தானையை கண்ணுல பொத்திக்கிட்டு அழுதுட்டு இருந்தா. நானும் அவளுக்கு எதிரில் உக்காந்தேன்.

நான்: அண்ணி

என் குரலை கேட்டதும் முந்தானையால் கண்ணை துடைச்சிட்டு அழுகையை நிறுத்திட்டு வேற பக்கம் தலையை திருப்பிக்கிட்டா

ஏன் அண்ணி இங்க வந்து உக்காந்து அழுதுட்டு இருக்கீங்க. வாங்க கீழ போவோம்.

(கோவமா என்னை பார்த்து திரும்பி) நான் ஏன் அழுகுறேன் தம்பிக்கு தெரியாதோ?

என்னால பதில் பேச முடியாம சங்கட நிலைமைக்கு தள்ள பட்டேன்..

(ஆச்சரியம் கலந்த கவலையுடன்) தம்பி உனக்கு என்னடா ஆச்சு. நீ ஏன் டா சும்மாவே இருந்த.. நீ தானா இப்டி இருந்தது ன்னு என்னால நம்ப முடியல டா. நான் உன்கிட்ட ஒருநாள் கூட அண்ணியா பழகுனது இல்ல, என் சொந்த தம்பியா நினச்சு பழகிட்டு இருக்கேன்.. அப்டி நினச்ச உன்னை இப்டி பாக்க தான் டா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.

4 Comments

  1. Konja perusa podunga

  2. Konjam perusa podunga..

  3. Super story

Comments are closed.