“ம்கூம்.. இல்ல..”
“தென்..”
“பட் நீங்க என்னை லவ் பண்றிங்கள்ள.. அது போதும்”
நிருதி ரூபாவைப் பார்த்தான். அவள் சிரித்தாள்.
“தேங்க் யூ ஸோ மச் ரூபா”
“பாத்திங்கள்ள அவளை? அவளுக்கு உங்க மேல பயங்கர லவ் இருக்கு.. ஆனா உங்ககிட்ட அதை சொல்ல மாட்டேங்குறா..”
“அதனாலதான் உனக்கு தேங்க்ஸ் சொன்னேன். இதுல உன்னை ஹர்ட் பண்ணியிருந்தா.. ஐ ஆம் வெரி ஸாரி..”
“இட்ஸ் ஓகே.. இது ஒரு ட்ராமாதானே?”
“ட்ராமாவா?” தமிழ் “என்ன எனக்கு தெரியாம ரெண்டு பேரும் பேசி வெச்சுகிட்டீங்களா?”
“ஆமா” என்று சிரித்தாள் ரூபா.
ஆனால் உண்மையில் அப்படி எதையும் பேசி வைத்துக் கொள்ளவில்லை.. !!
தோழிகள் இருவரையும் சமாதானம் செய்தபின் கேட்டான் நிருதி.
“சரி.. இப்ப சொல்லுங்க.. என்ன பண்ணலாம்?”
“சினிமா போலாம்” என்றாள் தமிழ்.
“என்னை என் வீட்ல ட்ராப் பண்ணிருங்க” என்றாள் ரூபா.
“ஏன் ரூபா?”
“நீங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸ்.. நீங்க ஜோடியா போவீங்க.. நான் எதுக்கு நடூல நந்தி மாதிரி..” அவள் குரலில் லேசான ஒரு பொறாமையும் ஆதங்கமும் வெளிப் பட்டது.
“ச்ச..” என்றான் நிருதி.
தமிழ் “ஏய்.. நாங்க லவ்வர்ஸ்னு நீ முடிவு பண்ண கூடாது. இது ஒன் சைடு லவ்.. நீ வா மூனு பேரும்தான் போறோம்”
“ஒன்சைடு லவ்வா? இதை நான் நம்பனுமா?”
“என் மேல நம்பிக்கை இல்லையா உனக்கு? என் பேச்சு பத்தி தெரியுமில்ல?”
“நம்ம்பிட்டேன்..”
நிருதி புன்னகைத்தான்.
“ரூபா ஸாரி. நெஜமா நாங்க இன்னும் லவ்வர்ஸ் ஆகிடல. தமிழ் மனசார எப்ப என்னை ஏத்துக்கறாளோ அப்பருந்துதான் நாங்க லவ்வர்ஸ்.. இல்லேன்னா அவ சொல்ற மாதிரி இது ஒன் சைடு லவ்தான். ஸோ நீ பீல் பண்ணிக்க வேண்டாம். ஜஸ்ட்.. எனக்கு ஒரு பிரெண்டா வா..”
அவன் சொன்னதைக் கேட்டு மனசு மாறினாள் ரூபா.
“ஓகே வரேன்.” பின் தமிழைப் பார்த்துச் சொன்னாள்.
“ஏய்.. நீ லவ் பண்லேன்னா நான் அவருகூட ஜாலியா சிரிச்சு பேசி விளையாடுவேன். அதுக்கு ஏதாவது கோவிச்சிட்டு என்னை திட்னே.. மகளே.. அப்றம் பாரு..”
“அதுக்குனு ஒரு லிமிட் வெச்சு நடந்துக்கோ.. ரூட் ஏதாவது மாறிச்சு…”
“அப்போ நீ அவரை லவ் பண்றே?”
“அப்படி ஒண்ணும் கிடையாது”