என் தேவதை – Part 1 175

“ஆனா.. நீ இதுக்கெல்லாம் ஒரு நாள் பீல் பண்ணுவேடி” என்று சாபமிட்டாள் ரூபா.

நிருதி இடையில் எதுவும் பேசவே இல்லை. ஆனால் அவனுக்காக தன் தோழியிடம் சண்டை போடும் ரூபா மீது ஒரு விதமான வாஞ்சை உண்டானது.

மூவரும் உள்ளே சென்று அமர்ந்தனர். ஒரே டேபிளில் நிருதி பக்கத்தில் தமிழ் உட்கார்ந்தாள். ரூபா அவர்களுக்கு எதிர் பக்கத்தில் உட்கார்ந்தாள். வெண்ணிலா ஐஸ்கிரீம் ஆர்டர் செய்தான்.

“மிஸ் ரூபா” என்றான் நிருதி.
“எஸ் ப்ரோ..” என்றாள் ரூபா.
“உன்னை பத்தி நான் தெரிஞ்சுக்கலாமா?”
“தாராளமா..”

தமிழ் “ஆமா.. இவ பெரிய இவ..” என்று சிரித்தாள். “இப்போதைக்கு இவ என் பிரெண்டு அவ்வளவுதான் போதும் ”

“பொறாமை..” என்று சிரித்தாள் ரூபா.

“ஆமாடி.. அப்படித்தான் வெச்சிக்கோ.. அதுக்கு என்ன இப்போ?”

ரூபா நிருதியைப் பார்த்து புன்னகையுடன் கட்டை விரலை உயர்த்தி தம்ஸ் அப் காட்டினாள்.
“செம..”

“என்னது?”

“உங்க மேல பயங்கர லவ்ல இருக்கா. உஙக முன்னால சும்மாதான் சீன் போட்டுக்கறா.. மத்தபடி வேற எவளையும் கிட்ட நெருங்க விட மாட்டா..”

“எனக்கே தெரியுது. இதுக்கெல்லாம் உனக்குத்தான் தேங்க்ஸ் சொல்லணும்”

“எனக்கு எதுக்கு ப்ரோ தேங்க்ஸ்?”

“நீ வரலேன்னா.. பொறந்த நாளும் அதுவுமா இன்னிக்கும் என்னை டபாய்ச்சிட்டு போயிறுப்பா.” என்று தமிழைப் பார்த்தான்.

தமிழ் லேசான வெட்கத்துடன் சிரித்தாள். அவன் கை மீது தன் கை வைத்துச் சொன்னாள்.
“எனக்கு லவ்னாலே புடிக்காது”

“அப்றம்?”

“ஒன்லி மேரேஜ்..”

“அடிப்பாவி..” என்றாள் ரூபா. “பெரிய பிளான்..”

ஐஸ்கிரீம் வந்தது. பொதுவாக பேசி ஜாலியாகச் சிரித்தபடி ஐஸ்கிரீம் சுவைத்தனர்.

நிருதி பாதி சாப்பிட்ட ஐஸ்கிரீமை தன் பக்கம் இழுத்து தன்னுடையதை அவனுக்கு கொடுத்தாள் தமிிழ்.

“தேங்க்ஸ் டார்லிங் ”

ரூபா.. “நடத்துங்க.. நடத்துங்க..” என்றாள்.. !!

“என்ன நடத்துறாங்க இப்ப?” என்று மெல்லிய புன்னகையுடன் ரூபாவைப் பார்த்து கேட்டாள் தமிழ் .
“ஐஸ்கிரீம்லாம் மாத்திக்கறீங்க.. இதை விட என்ன நடக்கணும்?”
“ஐஸ்கிரீம் மாத்திட்டா?”
“அப்பறம் எல்லாமே மாறும்”
“ஒண்ணும் மாறாது..”
“பாக்கறேன்”
“பாரு..”

நிருதி சுவைத்த ஐஸ்கிரீம் தமிழுக்கு மிகவும் பிடித்தது. ஐஸ்கிரீம் என்னவோ ஒரே மாதிரியானதுதான் ஆனால் அதில் பாதி அவன் சாப்பிட்டது என்கிற உணர்வுதான் அவளுக்கு படு கிளர்ச்சியை கொடுத்தது. அவளைப் போலவேதான் அவனுக்கும் இருந்தது.. !!

அங்கிருந்து கிளம்பி தியேட்டர் சென்றனர். டிக்கெட் வாங்கி உள்ளே போய் உட்கார்ந்ததும் நிருதியின் கையைக் கோர்த்துக் கொண்டாள் தமிழ்.