என் தேவதை – Part 1 175

நிருதி பைக்கில் உட்கார்ந்து ஸ்டார்ட் பண்ணினான்.
“ஓகே ஓகே.. கூல் பேபிஸ்.. ரெண்டு பேரும் வாங்க கிளம்பலாம்..”

தமிழ் அவன் பின்னால் வந்து உரிமையுடன் உட்கார்ந்தாள். கொஞ்சம் தயங்கி விட்டு அதன் பின் தமிழை வெறுப்பேற்ற வேண்டும் என்பதைப் போல.. தமிழுக்குப் பின்னால் உட்கார்ந்து அவளை நெருக்கினாள் ரூபா.

அவன் பைக்கை நகர்த்தியபோது.. தமிழின் மென் பந்துகள் அவன் முதுகில் நன்றாக அழுந்தி நசுங்கின. நிருதி அந்த மென் பந்துகளின் சுகத்தை உடலில் உணர்ந்து உள்ளுக்குள் சிலிர்த்தான்.

சிறிது தொலைவு சென்றதும் மெல்ல கேட்டான் நிருதி.
“தமிழ்.. லைட்டா ஏதாவது சாப்பிடலாமா?”
“என்ன?”
“கூல்டிரிங்ஸ்.. இல்ல ஐஸ்கிரீம் இந்த மாதிரி ஏதாவது..”

“எனக்கு ஐஸ்கிரீம்” என்றாள் பின்னால் உட்கார்ந்து கொண்டிருந்த ரூபா.. !!

பெண்கள் இருவரையும் ஐஸ்கிரீம் பார்லர் அழைத்து சென்றான் நிருதி. ரூபா ஆர்வமாக இருந்தாள். ஆனால் தமிழ்ச்செல்வி கொஞ்சம் பிகு செய்து விட்டு நிருதிக்காக மனமிறங்கியவளைப் போல காட்டிக் கொண்டாள் .

“ஆனாலும் நீ ரொம்பத்தான்டி பண்றே?” என்று தமிழ் மீது பாய்ந்தாள் மனம் பொறுக்க முடியாத ரூபா.

“ஏய்.. நான் என்னடி பண்ணேன்?” என்று கேட்டாள் தமிழ்.

“என்னமோ நீ ஐஸ்கிரீமே சாப்பிட மாட்டாதவளாட்டம் எத்தனை சீன் போடுறே.? பாவம் அந்தண்ணா.. எவ்ளோ ஆசையா இருக்காங்க.. ஆனா நீ..”

“ஏய்.. இரு இரு.. மொத ஒண்ணு சொல்லு நீ எனக்கு பிரெண்டா இல்ல அவருக்கு பிரெண்டா?”

“உனக்குத்தான். அதனாலதான் இன்னும் மரியாதையா பேசிட்டிருக்கேன். இல்லேன்னு வை.. நீ பண்ற ஏத்தத்துக்கெல்லாம்..”

“நீ ஏன்டி தேவையில்லாம இப்போ டென்ஷனாகிக்கறே?”

“உனக்கு நெஜமாவே அவரை பிடிக்கலேன்னா.. நீ பண்றதெல்லாம் ஓகேதான். ஆனா அந்தண்ணாவை உனக்கு எவ்ளோ பிடிக்கும்னு நீயே என்கிட்ட பல தடவை சொல்லியிருக்க. ஆனா இப்ப பாரு உன்னை லவ் பண்றேனு அவரா வாயை தெறந்து சொன்னப்பறமும் நீ என்னமா சீன் போடுற..”

ரூபா மூச்சு விடாமல் பேச.. அவளை இடை மறித்தாள் தமிழ்.
“சரி போதும் . நீ மூடு. இது எங்க ரெண்டு பேரோட பர்ஷ்னல் மேட்டர். அதை நான் பாத்துக்கறேன்”