என் தேவதை – Part 1 175

அதே நேரம் அவனுக்கும் வெளியூரில் வேலை கிடைக்க.. அவனும் அவள் நினைவை சுமந்தபடி போய் விட்டான். இரண்டு பேரும் இந்த இரண்டு வருடங்களாக சந்தித்துக் கொள்ளவே இல்லை. கடந்த ஒரு மாதம் முன்புதான் தமிழின் தோழி ஒருத்தியைப் பார்த்து பேசி.. அவளிடம் போன் நெம்பர் வாங்கினான். அதன்பின் இருவருக்குமான நட்பு வாட்ஸப் மூலம் துவங்கியது.. !!

அது இன்று.. இப்போது.. நேரில் சந்திக்கும் அளவுக்கு வந்திருக்கிறது.. !!

” தமிழ் இது?”

தமிழ்ச் செல்வியின் அருகில் நின்று கொண்டிருந்த அவளின் தோழியைப் பற்றிக் கேட்டான் நிருதி.

அந்தப் பெண் உடனே அவனைப் பார்த்து சினேகமாகச் சிரித்தாள். அவள் சிரித்தபோது கண்கள் சுருங்கியது. சிரிக்கும் போது அவள் அழகாக இருந்தாள்.

“என் பிரெண்டு” அவனிடம் இருந்து தன் கையை விடுவித்துக் கொண்டு சொன்னாள் தமிழ் “ரூபா.. நாங்க ரெண்டு பேரும் ஒரே க்ரூப்..”

“ஹாய்..” என்றான்.

அவளும் “ஹாய்..” என்றாள். “தமிழ் உங்களை பத்தி நிறைய சொல்லியிருக்கா”

“அப்படியா? என்ன சொல்லியிருக்கா..?”

“தப்பால்லாம் இல்ல.. ரொம்ப நல்ல அண்ணா. எனக்கு அந்த ஊர்லயே ரொம்ப புடிச்ச அண்ணானு சொல்லுவா.. அடிக்கடி உங்களை பத்தி ஏதாவது பேசிட்டே இருப்பா”

நிருதி தமிழைப் பார்த்தான். அவள் சிரித்தாள். தமிழின் கன்னத்தில் செல்லமாக கிள்ளினான்.
“ம்ம்.. எனக்கும் ரொம்ப ரொம்ப பிடிச்ச ஒரே பொண்ணு இந்த காந்த கண்ணழகி மட்டும்தான்”

“ஹை..” எனச் சிரித்தாள் தமிழ் .

“அப்போ.. லவ் பண்றீங்களா தமிழை?” அவள் தோழி சட்டென கேட்டாள்.

“சாட்சாத்..” என்றான். “பட்.. ஒன் சைடா..”

“ஓ.. நோ..” என்று அழகாய் வெட்கப் பட்டாள் தமிழ்.

“ஏய்.. ஏன்டி.. இந்தண்ணாக்கு என்ன? நல்லாத்தான இருக்காங்க..?” தமிழைக் கேட்டாள் ரூபா.

“ச்சீ.. பேசாம இரு” என்று வெட்கப்பட்டாள் தமிழ்.

“சூப்பரா இருக்காங்க இந்த அண்ணா. இவர மாதிரி ஒருத்தர் உன்னை லவ் பண்றதே பெரிய விஷயம். ஆனா நீ மாட்டேங்குற? செரியான லூசுதான் நீ..”

“ஆமா நா லூஸுதான்.. வாயை மூடு.”

“ஓகே ஓகே கூல் பேபிஸ்.. இப்ப எதுக்கு இந்த சண்டை? விட்டுத் தள்ளுங்க.. ! நெக்ஸ்ட்.. என்ன பண்ணலாம் தமிழ்? ”

“கோவிலுக்கு போலாமா? நான் சாமி கும்பிடணும்”

“ஓ.. ஏன்?”