என் தேவதை – Part 1 175

“ம்ம்? ”
“பக்கத்துல யாராவது இருக்காங்களா?”
“இல்ல.. ஏன்?”
“ஒரு செல்பி எடுத்து அனுப்பி வை..”
“ம்கூம்.. அதான் நேர்ல பாக்க போறோம்ல?”
“நேர்ல ஓகேமா.. இப்ப நீ எப்படி இருக்கேனு ஒரு செல்பி.. ப்ளீஸ்”
“இப்ப என்ன அவசரம்? ”
“அவசரமில்லாம நீ மெதுவாவே வா.. அதுவரை நான் என் தேவதையை ரசிச்சிட்டிருக்கேனே?”
“ஓகே.. வெய்ட்..” காலை கட் பண்ணினாள்.

நிருதி மொபைலை சட்டை பாக்கெட்டில் திணித்தான். பைக்கை ஸ்டார்ட் செய்து சாலையில் கலந்தான். முறுக்கிப் பிடித்தால் பத்து நிமிடத்தில் தமிழ் சொன்ன ஸ்கூலை அடைந்து விடலாம். ஆனால் அங்கே போய் நிறைய நேரம் காத்திருக்க வேண்டியது வரலாம் என்பதால் மெதுவாகவே பைக்கை ஓட்டினான்.. !!

அவன் எண்ணம்.. சிந்தனை.. மனசு எல்லாம் தழிழைப் பற்றியே ஓடிக் கொண்டிருந்தது.. !!

தமிழ் சொன்ன இடத்தை அடைந்தான் நிருதி. பைக்கை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு பாக்கெட்டில் இருந்த மொபைலை எடுத்தான். நெட் ஆன் செய்து வாட்ஸப் ஓபன் பண்ணினான். தமிழிடமிருந்து அவளின் படம் வந்திருந்தது. ஆர்வமாக அதை திறந்து பார்த்தான். அவன் மனசு குதூகலித்தது.. !!

தழிம்.. பிறந்த நாள் உடையில் அழகாக இருந்தாள். ஓவர் மேக்கப் எல்லாம் செய்யவில்லை. ஆனால் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி பார்க்கும் படியாக மேக்கப் செய்திருந்தாள். அவளின் காந்தக் கண்கள் அவனை காதலாகப் பார்ப்பதை.. உற்று நோக்கி சிலிர்த்தான்.. !!

‘நிச்சயமாக இவளும் என்னை மனதார விரும்புகிறாள். அதை அவள் கண்கள் அப்பட்டமாக சொல்கிறது. ஆனால் அதை ஒத்துக் கொள்ள மறுக்கிறாள். இருக்கட்டும்.. எத்தனை நாள் தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டிருப்பாள் என்று பார்த்து விடலாம்’

அவனது மனம் கவர்ந்த தமிழின் அழகு முகத்தை ரசித்தபடி அவள் வரக் காத்திருந்தான். அவளுக்காக காத்திருக்கும் அந்த நொடிகள் அவனுக்கு சுகமாகவே இருந்தது.

ஒரு கால் மணி நேரம் கழித்து செல்பியில் பார்த்த அதே உடையில்.. அதே தோற்றத்தில் முகம் நிறைய சிரிப்புடன் அவனிடம் வந்தாள் தமிழ்.. !! ஆனால் அவள் தனியாக வரவில்லை. அவளுடன் இன்னொரு பெண்ணும் வந்தாள்.. !!

“ஹாய் தமிழ்”