வாசமான ஜாதிமல்லி – பாகம் 1 168

பிரபு அவன் மாமா பெண்ணை அவசரமாக கல்யாணம் செய்து கொண்டு போன இரண்டு வருடம் மற்றும் சில மாதங்கள் கழித்து …

“அம்மா பூ வாங்கிக்கிங்கொ மா … குண்டுமல்லி இருக்கு, வசம்மான ஜாதிமல்லி இருக்கு…”

அந்த பூக்காரி கூவுவதை கேட்டு மீரா திரும்பி அந்த பூக்காரியை பார்த்தாள். ‘வாசமான ஜாதிமல்லி’ என்று அவள் சொன்னது தான் அவள் கவனத்தை ஈர்த்தது. சற்று நேரம் அவள் கண்கள் அந்த பூக்காரி கூடையில் இருந்த ஜாதிமல்லியை பார்த்துக்கொண்டு இருந்தது. அது அவள் மனதில் அலைபோல் பழைய நினைவுகளை பாய செய்தது. இவ்வளவு காலம் கடந்தும் அந்த நினைவுகள் மறையவில்லை.

அவள் கணவர் வாகனத்தை பார்க் செய்ய சென்றுஇக்கார். வழக்கம் போல வெள்ளிக்கிழமை அன்று புதிஸ்வரர் கோயிலுக்கு வந்து இறுக்கர்கள். இங்கே தானே முதல் முறையாக பிரபுவை சந்தித்தாள். அப்போது அவள் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்திட்டு செல்வான் என்று தெரியாது. அந்த பாதிப்பில் இருந்து அவள் இன்னும் மீளவில்லை.

“என்னமா, அப்படியே பார்த்துக்கொண்டு இருக்கீங்க,” என்று அவள் மகளின் குரலை கேட்டபின்பு தான் சுயநினைவுக்கு வந்தாள்.

வாகனத்தை பார்க் செய்துவிட்டு அவர்களை பார்த்துக்கொண்டே அவள் கணவன் சரவணன் அவர்களை பார்த்துக்கொண்டே வருவதை பார்த்து அவள் அந்த பூக்காரியிடம், “வேணாம் எனக்கு குண்டுமல்லியே கொடு,” என்றாள் அவசரமாக.

அவள் கணவன் வந்து சேர்வதுக்கும், அவள் பூவை அவள் கூந்தலில் சூடுவதுக்கும் சரியாக இருந்தது. சரவணன் அந்த பூக்காரியிடம் பணத்தை நீட்டினான்.

“வாங்க கோயில் உள்ளே போவம், ” என்று அவன் குடும்பத்தை உள்ளே அழைத்து சென்றான்.

‘கடவுளே, என் குடும்பத்துக்கு பழைய முழு சந்தோஷத்தை கொடு, அவளுக்கு மனா நிம்மதியை கொடு’ என்று மனதார வேண்டி நின்றான்.

அந்த கோயில் குருக்கள் வந்து அவர்களுக்கு பிரசாதம் கொடுத்துவிட்டு, “ஐயா நல்ல இருக்கீங்களா,” என்று கேட்டார்.

“இருக்கேன் குறுக்கால, எல்லாம் அவன் புண்ணியத்தில்,” என்றான் சரவணன்.

“நீங்க தாவரம்மா ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கும்பத்தோடு வரீங்க, உங்கள் கடவுள் எந்த குறையும் வைக்க மாட்டான். நீங்கள் நினைத்தது போல எல்லாம் நடக்கும்.”

2 Comments

  1. கேவலமான கதை நண்பனிகதைகள் உண்டு இது வேறமாதிரி ஒரு அசிங்மா இருக்கு நல்ல நண்பனா இருக்காம அவளுக்கு சுகம்முடியாத கணவன் எனாறால் பரவாயில்ல இது கேவலம்

  2. Oru nalla kadhaye podungappa

Comments are closed.