வாசமான ஜாதிமல்லி – பாகம் 1 167

“சரவணன் வேலையாக இருந்தால் நீங்க பிள்ளைகளை அழைத்துட்டு போகவேண்டியது தானே?”

“இல்லங்க, நான் கோவில் தவிர அவர் இல்லாமல் வேறு எங்கும் போவதில்லை.”

“நீங்க பாவம் மதனி, நீங்க நிறைய விஷயங்கள் மிஸ் பண்ணுறீங்க.”

அவளுக்கு இருக்கும் வருத்தத்தை மீரா கட்டிக்கொள்ள விரும்பவில்லை. “இல்லை, எனக்கு வருத்தும் எதுவும் இல்லை, டிவி இருக்கு, அதில் பொழுதுபோகுது. அவர் கடும்மையாக உழைக்கிறார், நான் அதற்கு இடைஞ்சலாக இருக்க விரும்பவில்லை.”

“உன் ஆசைகளை நீ எவ்வளவு காலம் அடக்க முடியும் என்பதைப் பார்க்கிறேன்,” என்று பிரபு மனதில் நினைத்துக்கொண்டான்.

“சரி, மதனி நேரமாகுது. நான் கிளம்புறேன்.” அவன் போவதை கொஞ்சம் ஏக்கத்தோடு பார்த்தாள்.

அன்று மாலை சரவணன் வீட்டுக்கு வந்த பொது மீரா அவனிடம் கேட்டாள்,”என்னங்க மீனம் தியேட்டரில் புது படம் வந்திருக்காம்?”

“அப்படியா, எனக்கு தெரியாது, ஏன் நீ பார்க்க ஆசை படுறியா?”

“ஆமாங்க, இந்த வார கடைசியில் போகலாமா?”

சரவணன் சற்று யோசித்தான்,” சாரி மீரா, இந்த வார கடைசியில் கல்யாணத்துக்கு ஆனா புடவைகள் மற்றும் மற்ற ஆடைகள் டிலிவேரி ஆகுது. இந்த வாரம் முடியாது.”

அவள் முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தை பார்த்து,”இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கோ. நான் அடுத்த வார கடைசியில் உன்னை கூட்டிட்டு போறேன்.”

“சரிங்க,” என்று பொய்யாக புன்னகைத்தாள். அவளுள் இருந்த ஏமாற்றத்தை அவனிடம் இருந்து மறைத்தாள்.

அந்த மாலையில் பிரபு அவர்கள் வீட்டுக்கு வரவில்லை. படத்தை பற்றி கேட்க ஆர்வமாக இருந்த மீராவுக்கு அது ஏமாற்றமாக இருந்தது.

அடுத்த நாள் காலையில் பிரபு அவள் வீட்டுக்கு வந்தான்.

“எங்கே உங்களை நேற்று மாலை காணும்?”

“கொஞ்சம் வேலையாக இருந்தது, அதான் வரமுடியவில்லை.”

“சரி, சொல்லுங்க, படம் எப்படி இருந்தது?” ஆர்வமாக கேட்டாள்.

“யாருக்கு தெரியும்.”

“என்ன சொல்லுறீங்க, நீங்க படத்துக்கு போகலையா?”

“இல்லை.”

“ஏன், போவதாக தானே சொன்னிங்க.”

“இல்லை மதனி, உங்க முகத்தில் உள்ள வருத்தத்தை நான் நேற்று கவனித்தேன். நான் மட்டும் போய் பார்க்க மனமில்லை. இன்றைக்கு சரவணனிடம் கேட்குறேன். முடிந்தால் இந்த ஞாற்றுக்கிழமை எல்லோரும் போய் அந்த படத்தை பார்க்கலாம்.”

‘நான் வருதும்மா இருக்கிறேன் என்று இவர் போய் அந்த படத்தை பார்க்கவில்லையா?’ மீராவுக்கு வியப்பாக இருந்தது.

“நான் அவரிடம் கேட்டுவிட்டேன். இந்த வாரம் முடியாதாம். அடுத்த வாரம் பார்க்கலாம் என்று சொன்னாரு. ”

“அவ்வளவு நாள் படம் இன்னும் இருக்கும்மா என்று தெரியாதே.”

“பரவாயில்லை, இருந்த பார்த்துக்கிறேன். எங்களுக்காக நீங்க காத்திருக்காதிங்க, நீங்க முதலில் போய் பாருங்க.”

“வேணாம் மதனி, நான் பார்த்துவிட்டு படம் இப்படி இருந்தது, அப்படி இருந்தது என்று சொன்னால் நீங்க மேலும் வருத்தப்படுவீங்க, அதிர்ஷ்டம் இருந்தால் எல்லோரும் பார்க்கலாம், இல்லை என்றால் விட்டுவிடலாம்.”

முன்பு பிரபு அவள் கணவனின் நண்பன் என்று மட்டம் பார்த்த மீராவுக்கு அவனை பிடிக்க துவங்கியது, நண்பனாக என்று அவளுக்கு அவள் சொல்லி கொண்டாள்.

“சரி சொல்லுங்குங்க மதனி உங்களுக்கு எந்த நடிகர் நடிகை பிடிக்கும்?”

“எனக்கா? ஹ்ம்ம்… நடிகர் என்றால் கமலஹாசன். நடிகை ராதிகா.” மூன்று வருடத்துக்கு முன்பு வந்த சகலகலா வல்லவன் பார்த்ததில் இருந்து அவளுக்கு கமலஹாசன் ரொம்ப பிடித்து போய்விட்டது.

“உங்களுக்கு?”

“எந்த நடிகர் என்று சொல்லுறதுக்கில்லை. யார் படம் நல்ல இருந்தாலும் பார்ப்பேன், அனால் நடிகை என்றால் அம்பிகா.”

“ஏன், அம்பிகா மட்டும் ஸ்பெஷல்?”

“எனக்கு அம்பிகாவை பார்க்க ரொம்ப அழகா இருக்காங்க. எப்போதும் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று தோன்றும்.”

“அம்பிகா அழகு தான், அனால் மற்ற அழகான நடிகைகளும் இருக்காங்களே.”

“இருக்கலாம், அனால் ஒவ்வொருக்கும் ஒரு விருப்பம் இருக்கும் இல்லை. ஒன்னு சொன்ன நீங்க கோவிச்சிக்க கூடாது.”

“என்ன?”

“நீங்க கோவிச்சிக்க மாட்டிங்கனா நான் சொல்லுறேன்.”

“கோவிச்சிக்க மாட்டேன், சொல்லுங்க.”

“நீங்க அசப்பில் அவள் மாதிரியே இருக்கீங்க.”

2 Comments

  1. கேவலமான கதை நண்பனிகதைகள் உண்டு இது வேறமாதிரி ஒரு அசிங்மா இருக்கு நல்ல நண்பனா இருக்காம அவளுக்கு சுகம்முடியாத கணவன் எனாறால் பரவாயில்ல இது கேவலம்

  2. Oru nalla kadhaye podungappa

Comments are closed.