கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 44 4

மீனாதான் அன்னைக்கு நாள் பூரா புலம்பி புலம்பி கூச்சல் போட்டுக்கிட்டு இருந்தா.. அந்த புலம்பலும் கூச்சலும் தன் மனசுக்கு புடிச்சவன் கெட்டு சீரழியறானேங்கற ஆதங்கத்துல வந்ததுதானா.. இது இந்த மூளை கெட்ட முண்டத்துக்கு புரியலியே.. என் பொண்ணு மனசுல இருக்கறதை என்னால புரிஞ்சுக்க முடியலை… எதிர் வீட்டுக்காரி எனக்கு எடுத்து சொல்ல வேண்டியதா இருக்குது…

இப்ப மட்டும் என்ன கெட்டுப் போச்சு.. டேய் சீனு.. இது என்னடா வேலை.. குடிச்சுட்டு இந்த வீட்டுக்குள்ளே நுழையாதேன்னு ஒரு அதட்டு அதட்டினா என் பேச்சைக் கேக்காமலா போயிடுவான் அவன்…? மனதுக்குள் குமைந்தாள் மல்லிகா.

அம்மா.. இவன் என் கூட படிக்கற பையன்ம்மா.. என் கிளாஸ்ல என் பக்கதுலதான் எப்பவும் உக்காருவான்… இன்னைக்கு ஸ்கூல்லேருந்து வரும் போது மழையில நல்லா நனைஞ்சுட்டோம்.. இவனுக்கு ரொம்ப குளுருதாம்… என்கிட்ட இருக்கற காய்ஞ்ச சொக்கா ஒண்ணு இவனுக்கு குடுக்கறேம்மா…

செல்வாதான் சீனுவை கொட்டற மழையில ஒரு நாள் வீட்டுக்குள்ள இழுத்துக்கிட்டு வந்தான். அப்ப செல்வாவுக்கு பத்து வயசு இருக்குமா. இன்னைய தேதிக்கு அண்ணன் தம்பியாத்தான் பழகிக்கிட்டு இருக்கானுங்க ரெண்டு பேரும்.

சீனு தயங்கி தயங்கி வீட்டுக்குள்ள நுழைஞ்சது இன்னும் என் கண்ணுலேயே நிக்குது… உன் பேரு என்னடா கண்ணுன்னேன்.. பசிக்குதுன்னு பதில் சொன்னான்… வீட்டுல இருந்த ஒரு அடையை ரெண்டா புட்டு ஆளுக்கு ஒரு துண்டா கையில குடுத்தேன்.. அந்த குழந்தை அவசர அவசரமா அடையை பிச்சித் திண்ண அழகைப் பாத்துட்டு நெஞ்சு நிறைஞ்சு போய் நின்னேன்..

அப்புறம்…? அப்புறம் என்னா..?? அம்மா… அம்மான்னு என் முந்தானையை புடிச்சிக்கிட்டு இன்னைக்கு வரைக்கும் இந்த வீட்டுக்குள்ள அலையறான்.. நல்லது கெட்டது எல்லாத்துக்கும் முன்னே வந்து நிக்கறான். என் வீட்டு சாக்கடை முதல் கொண்டு குத்தி விடறான்.. என்னைக்காவது அவனை விட்டுட்டு சாப்பிட மனசு போவுதா?

வீட்டுல எது செய்தாலும் அவனுக்கு முதல்ல ஒரு பங்கு எடுத்து வெச்சுட்டுத்தான் நான் என் வாய்ல போடறேன்.. அந்த அளவுக்கு இந்த வீட்டோட ஒண்ணுக்குள்ள ஒண்ணாப் போயிட்டான். ரெண்டு நாள் அவன் மூஞ்சியைப் பாக்கலன்னா… அவனுக்கு என்ன ஆச்சோ.. ஏது ஆச்சோன்னு மனசு பதறிப் போவுது.

எம்மா… என்னை விட உனக்கு சீனுதான் எப்பவும் ஓஸ்தின்னு.. அப்பப்ப நான் பெத்த என் புள்ளை செல்வாவே மூஞ்சை தூக்கி வெச்சிக்கற அளவுக்கு என் கிட்ட செல்லம் கொண்டாடறான்… எந்த ஜென்மத்து குடுக்கல் வாங்கல் பாக்கி இருக்கோ.. இது அந்த திருத்தணி முருகனுக்குத்தான் வெளிச்சம்…

பதினைஞ்சு வருஷமா இந்த வீட்டுக்குள்ள இன்னொரு புள்ளையா வலம் வர்றவன், இப்ப என் வீட்டு மாப்பிள்ளையா வர்றேங்கறான்.. அம்மான்னு கூப்பிடற வாயால அத்தேன்னு கூப்பிடுவானா..? இல்லே மாமீன்னு கூப்பிடுவானா..?. இந்த ஒறவு மொறை சரிப்பட்டு வருமா?

செல்வா என் இனத்தை விட்டுட்டு, வேற இனத்துலேருந்து ஒரு பொண்ணை இழுத்துட்டு வர்றேன்னப்ப, வந்த கோபம் இவன் விஷயத்துல ஏன் எனக்கு வரலே..? என் புருஷனுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா அவர் என்ன சொல்லுவாரு?

“மல்லிகா உன் புருஷன் சொல்றதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்டீ.. நீ என்னடீ சொல்றே?” அவள் மனம் அவளிடம் எள்ளியது.

“விஷயத்தை கேட்டதுலேருந்து எனக்குத்தான் ஒண்ணும் புரியலியே? காலும் ஓடலை.. கையும் ஓடலே… மனசு நிலை கொள்ளலை…” நகைக்கும் மனசுக்கு பதில் கூறினாள், மல்லிகா.

“நிதானமா யோசனை பண்ணுடீ… பத்மாவுக்கு ஓரே புள்ளடீ இவன்… பிக்கல் பிடுங்கல் ஒண்ணும் கிடையாது…”

“உண்மைதான்.. கல்யாணம் முடிஞ்ச மூணு வருஷத்துல நாத்தானார் புருஷன் ஆகாசத்துல எரிஞ்சு போயிட்டான்.. வீட்டுக்கு வெத்து நெத்தியா திரும்பி வந்தவளை, தன் வீட்டுல, தன் கூடவே வெச்சுக்கிட்டு, அவ சொல்றபடி குடும்பம் பண்ற, நல்ல மனசுக்கு யாருக்கு வரும்.?

பத்மாவுக்கு தங்கமான குணம்… என் பொண்ணு மீனாவை பெத்த பொண்ணா நடத்துவாளுங்க ரெண்டு பேரும்.. இதுல எனக்கு ஒண்ணும் சந்தேகமேயில்லை..”

“அப்புறம் என்னடீ தயக்கம்…?”

“கல்யாணம்ன்னு வந்தா நாலு விஷயத்தையும் யோசிக்கணுமில்லையா?”

1 Comment

Add a Comment
  1. Mokka podathinga da story la

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *