கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 44 7

அப்பா என்ன சொல்லுவார்.. அவர் மனசுல என்ன நினைச்சுக்கிட்டு இருக்கார்… அப்பாவுக்கு என் மேல ரொம்ப ஆசை.. நான் சீனுவை ஆசைப்படறேன்னு சொன்னா, முடியாதுன்னா சொல்லுவார்? முதல்லே நான் அம்மாவைத்தான் சரிகட்டணும்…

எனக்கு வரப்போற மாமனார் என்னடான்னா, நீ படிக்கறதுல தப்புல்லே.. நல்லாப் படி ஆனா வேலைக்குப் போய் என்ன பண்ணப் போறே… நீ சம்பாதிச்சுக்கிட்டு வரணுங்கற நிலைமை இந்த வீட்டுல இல்லே.. நிம்மதியா என் பொண்ணா வீட்டுல சுகமா இருங்கறார்…

சீனுவை வளத்த அத்தை, வீட்டுக்குள்ள நுழையும் போதே ஆசையா என் வாயில ஸ்வீட்டை திணிச்சி, தலையில நாலு மொழம் மல்லிப் பூவை சுத்தி நீதான்டீ இந்த வீட்டு மருமவன்னு, சீனுகூவே அவன் ரூமுக்கே என்னை தனியா அனுப்பி வெச்சிட்டாங்க..

சீனுவைப் பெத்தவளுக்கு வாயில வார்த்தையே வரலை.. என் புள்ளை நீ சொல்லி குடிக்கறதை விட்டுட்டேங்கறான்… சிகரெட்டை விட்டுடறேங்கறான்.. மீசை, தாடி எல்லாத்ததையும் வழிச்சிப் போட்டுட்டான்.. அவன் உன்னை வாசனைப்புடிக்க கிட்ட வந்தான்னா உன் மூஞ்சில முள்ளு குத்தாது… நீ சந்தோஷமா இருடீன்னு மனசார என்னை ஆசிர்வாதம் பண்றாங்க…

இந்த வீட்டுல பொறந்து வளந்து, இருபத்து ரெண்டு வருஷமா இங்க இருக்கேன்… என்னைப் பெத்தவங்க என்னை தரையில போட்டு வளக்கலை.. அவங்க தோள்லேயும், மார்லேயும்தான் போட்டு வளக்கறாங்க..

ஆனா நான் இப்ப ஒடம்பாலத்தான் இந்த வீட்டுல இருக்கேன்… என் மனசு இப்ப சீனு வீட்டுலதான் இருக்கு.. எப்ப அங்க போவேன்… போவேன்னு என் மனசு ஆலாப் பறக்குது… இது ஒருவிதத்துல ஞாயம் இல்லதான்.. ஆனா நான் என்னப் பண்ணுவேன்.. என் மனசும், உடம்பும், சீனு… சீனுன்னு அலையுதே..!

அம்மாவுக்கு எங்க விஷயம் தெரிஞ்சிட்டிருந்தா அதுவும் நல்லதுதானே? நாளைக்கு காலைல மொதல் வேலயா சியாமளா ஆண்டிக்கு ரெண்டு ஃபைவ் ஸ்டார் சாக்லெட் வாங்கி குடுத்து மனசார தேங்க்ஸ் சொல்லணும்..

எங்க காதலை, நானா எப்படி வீட்டுல சொல்றதுன்னு மனசுக்குள்ளவே மாய்ஞ்சு மாய்ஞ்சு போனேன்… அம்மா இப்ப இதைப் பத்தி பேசினால்… ஆமாம்ம்மா… நான் சீனுவைத்தான் ஆசைப்படறேன்.. நீ அவனையே எனக்கு கட்டி வைக்கணும்ன்னு, பட்டுன்னு மூஞ்சுக்கு நேரா சொல்லிட வேண்டியதுதான்.

நான் என்ன தப்பு பண்ணிட்டேன்…? என் மனசுக்கு பிடிச்சவனை, என்னை விரும்பறவனை நான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன்… அவ்வளவுதானே.. என் அம்மாகிட்ட இதுக்கு நான் ஏன் பயப்படணும்? என் வீட்டிலேயே நான் பயந்து பயந்து சாகறதுல அர்த்தமேயில்லை… மீனா மனதுக்குள் தெளிவாக யோசித்தாள்.

“மீனா… நாளைக்கு காலேஜ்ல டெஸ்ட்டுன்னு சொன்னியேம்மா.. பரிட்சைக்கு முதல் நாள், நேரத்துல தூங்கி நிம்மதியா, மனசுல டென்ஷன் இல்லாம காலையில ஃப்ரெஷ்ஷா எழுந்துக்கணும்…” நடராஜன், பாசத்துடன் பெண்ணின் தலையை வருடினார்.

“அம்மா சாப்பிட்டதும் தட்டை எடுத்துட்டுப் போவலாம்ன்னு உக்காந்து இருக்கேன்ம்பா.. அரை கப் பால் குடுக்கட்டுமா உங்களுக்கு…”

“வேணாம்மா இன்னைக்கு.. ரெண்டு நாளா கல்யாண வீட்டுல சாப்பாடு.. என்னமோ வயிறு கனமா இருக்கு…” சொல்லிக்கொண்டே பெண்ணின் பதிலை எதிர்பார்க்காமல், கட்டிலில் அவர் படுத்தார்.. தலை வரை போர்வையை இழுத்து விட்டுக்கொண்டார்.

***

1 Comment

  1. Mokka podathinga da story la

Comments are closed.