என் காதலி Part 8 98

சரிடா தூங்கு நான் லஞ்ச் டைம் முடிஞ்சதுக்கு அப்புறம் வந்து எழுப்புறேன் என்று சொல்லிவிட்டு போனான் .சரி நைட் தான் ஸ்வாதிய நினச்சு தூங்கல இந்த அரை மணி நேரம் ஆச்சும் அவள நினைக்காம நிம்மதியா தூங்கனும் என்று நினைத்து கொண்டு கண் மூடினான் .ஒரு பத்து நிமிடம் அசதியில் தூங்கி இருப்பான் .உடனே மீண்டும் அவன் கனவில் சுவாதி சிரித்த முகத்தோடு வர இவன் கொஞ்ச நேரம் கனவிலே அவளை ரசித்து கொண்டு இருந்தான் .பின் அவசரமாக எழுந்து விட்டான் .இவளால பத்து நிமிஷம் கூட நிம்மதியா தூங்க முடியலையே ஏன் நாம அவள தூங்கும் போது கூட நினைக்கிறோம் என்று நினைத்தான்..

விக்கி சுவாதியை நினைத்து கொண்டு அங்கிட்டும் இங்கிட்டும் நடந்து கொண்டு இருந்தான் ஐயோ அவள நினைக்காம இருக்க முடியலையே என்று சொல்லி கொண்டு இருந்தான் .

எப்படி தீடிருன்னு எனக்கு அழகா தெரியுறா இத்தனைக்கும் முந்தி ஆச்சும் அவ அழகா இருந்தா இப்ப கர்ப்பமானதால குண்டா ஆயிட்டான்னு நம்மாலே சொன்னோம் அப்புறம் எப்படி அழகா தெரியுறா என்று நினைத்து கொண்டு இருக்கும் போது மணி உள்ளே வந்தான் .

வந்து பார்க்கும் போது விக்கி அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருப்பதை பார்த்து என்னடா தூங்கலையா என கேட்டான் .இல்லடா என்றான் .ஏன் எதுவும் முக்கியமான விசயமா இப்படி யோசிச்சு கிட்டு இருக்க என்றான் .எ அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல தூக்கம் வரல அதான் என்றான் .பின் எதையோ யோசித்து விட்டு மணி உன் கிட்ட ஒன்னு கேப்பேன் தப்பா எடுத்துக்க மாட்டியே என்றான் . கேளுடா எதுவா இருந்தாலும் என்றான் மணி .

டேய் உனக்கு இப்ப உன் பொண்டாட்டி பாக்க அழகா இருக்காளா என்றான் . என்னடா கேக்குற எனக்கு என் பொண்டாட்டி எப்பவுமே அழகுதான்டா ஏன் இப்ப இப்படி ஒரு கேள்வி கேக்குற என்றான் .ஒ இதுக்கு எப்படி பதில் சொல்ல சுவாதியும் வள்ளி மாதிரி கர்ப்பமா இருக்கா எனக்கு பாக்க அவ அழகா இல்ல ரொம்ப அழகா இருக்க மாதிரி இருக்கு அதான் கேட்டேன் அப்படின்னு இந்த ஒட்ட வாய் கிட்ட சொல்ல முடியுமா என்று மனதிற்குள்ளே நினைத்தான் .

பின் வெளியே அது ஒன்னும் இல்லடா நேத்து என் பிரண்டு ஒருத்தனுக்கும் எனக்கும் ஒரு சின்ன argument என்றான் விக்கி .என்ன argument என கேட்டான் மணி .ஒன்னும் இல்ல அவன் பொண்டாட்டியும் உன் பொண்டாட்டி மாதிரி கர்ப்பமா இருக்கா அவன் சொன்னான் அவன் பொண்டாட்டி எப்பயும் இல்லாம இப்ப ரொம்ப அழகா இருக்காளாம் அவள பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்காம் .இன்னும் சொல்ல போனா எல்லா பொண்ணுகளும் கர்ப்பமானதுக்கு அப்புறம் தான் அழகா இருப்பாங்களாம் அப்படின்னு சொன்னான் .

நான் சொன்னேன் அப்படி எல்லாம் கிடையாது பொண்ணுக கர்ப்பமா இருக்கும் போது தான் அசிங்கமா இருப்பாளுக குண்டா ஆகி பாக்கவே சகிக்க மாட்டலுக அப்படின்னு சொன்னேன் .ரெண்டு பேருக்கும் பயங்கரமான வாக்குவாதம் வந்துச்சு .அதான் நீ சொல்லு உன் பொண்டாட்டி கர்ப்பமாதான இருக்கா அவ முந்தி அழகா இருந்தாளா இப்ப அழகா இருக்கலா என கேட்டான் விக்கி .மணி சிறிது நேரம் யோசித்து விட்டு உன் பிரண்டு சொல்றதுதான் சரி உண்மைலே என் பொண்டாட்டி முன்ன விட இப்பதான் அழகா இருக்க மாதிரி இருக்கு

அது கர்ப்பமா இருக்கதால வந்த தாய்மை அழகுன்னு நினைக்கிறேன் , ppஅதுவும் என் குழந்தையா அவ வயித்துல சுமக்கிறதால எனக்கு பெருமையா இருக்கு அவ குண்டா இருக்க மாதிரியே தெரியல அவ வயிறு மட்டும் பெருசா இருக்கதால அத மட்டும் பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கு ,எல்லாத்தையும் விட நீ சொன்ன நம்ப மாட்ட அவ எப்ப தெரியுமா ரொம்ப அழகா இருப்பா என கேட்டான் மணி .

எப்ப என்றான் விக்கி .சில நேரம் கர்ப்ப வாந்தி பயங்கரமா எடுத்துட்டு மேல் மூச்சு கீல் மூச்சு வாங்கிட்டு வந்து அவ வாய் எல்லாம் துடைச்சுட்டு டயர்டா வந்து என் பக்கம் சாய்வ பாரு அப்ப அவ முகம் பாக்க குழந்தை மாதிரி இருக்கும் அப்ப அவளுக்கு ஆறுதலா தடவி கொடுத்து அவ நேத்தில ஒரு சின்னதா முத்தம் கொடுத்துட்டு அவ வயுத்துல வளர என் குழந்தைய தடவி கொடுப்பேன் பாரு பாரு அப்ப இருக்க சுகம்,நிம்மதி ,சந்தோசம் நீ பெருசா நினைக்கிற செக்ஸ்ல கூட கிடைக்காதுடா என்றான் மணி .

அங்கிட்டு போடா செக்ஸ்ல மட்டும்தான் சுகம் கிடைக்கும் என்றான் விக்கி .இன்னும் எத்தன காலத்துக்குத்தான் இதேயே சொல்லிக்கிட்டு இருக்க போரையோ என்றான் மணி .டேய் அதாண்டா உண்மை என்றான் விக்கி .சரி சரி லஞ்ச் டைம் முடிஞ்சுடுச்சு வா வேலைய பாப்போம் என்றான் மணி .

சரிடா என்றான் விக்கி .அது யாருடா மும்பைல எங்கள தவிர வேற பிரண்டு என கேட்டான் ,ஆஹா பயபுள்ள கரெக்ட்டா பாயிண்ட் பிடிக்குதே என்று நினைத்தான் விக்கி .அது மும்பை இல்ல சென்னை பிரண்டு போன் மூலம் பேசி சண்ட போட்டுகிட்டோம் .

1 Comment

  1. Super aga story pogiradhu. Waiting for the next part

Comments are closed.