என் காதலி Part 8 98

அவள் அங்கு வெளியே சொன்னது போல எனக்கு இதுதான் பிடிச்சு இருக்கு என்று சுவாதி தன் கர்ப்ப மான தாய் அழகை பிடித்து இருக்கிறது என்று சொன்னது போல

விக்கிக்கும் அவள் அழககாக இருப்பதாக தோன்றியது .பின் அவளிடிம் குட் நைட் சொல்லி விட்டு அவன் ரூமிற்கு போனான் .அவனை அறியமால் வாவ் என்றான் .

பின் அந்த நாளை பற்றியும் ஸ்வாதியோடு பார்க்கில் மனம் விட்டு பேசியதை பற்றியும் நினைத்து பார்த்தான் .பின் சுவாதியின் குழந்தை முகம் அவன் கண்ணில் வந்து போனது .அவனுக்கு அந்த முகத்தை மீண்டும் பார்க்க வேண்டும் என்று தோன்றியது .

படுத்து இருந்தவன் உடனே எழுந்து அவளை பார்க்க செல்ல எழுந்தான் . அப்போது யாரோ அவன் கன்னத்தில் பளார் என்று ஒரு அரை விட்டது போல இருந்தது .

விக்கி சுவாதியை பற்றி நினைத்து கொண்டு இருந்தான் .பின் அவள் முகத்தை பார்க்கலாம் என்று நினைத்த போது யாரோ அவன் கன்னத்தில் பளார் என்று அரை விட்டது போல் இருந்தது .

அது வேறு யாரும் அல்ல விக்கியின் மனசாட்சி தான் அது அவனை போல ஒரு உருவமாகவும் வெளியே வந்தது . வந்து அவனை இன்னொரு அரை விட்டு ஆமா என்ன தீடிருன்னு ரொம்ப நல்லவனா மாறிட்ட அவ கூப்பிட்ட உடனே வாக்கிங் போற

அவ கூட உன் பழைய லைப் பத்தி பேசுற அப்புறம் அந்த கடைகரான் உன்னையே அவ புருஷன் சொன்னதுக்கு கோப பட மாட்டிங்குற . அப்புறம் அவ வாந்தி எடுத்த உடனே அவள தாங்கி பிடிக்கிற அப்புறம் அவ மயக்கம் போட்ட தூக்குர அப்புறம் ஆஸ்பத்திரில உன்னையே புருஷன் சொன்னதுக்கு கோப பட மாட்டிங்குர டாக்டர் அவளுக்காக உன்னையே திட்டுனா கோப பட மாட்டிங்குற என்ன எதுக்குமே கோப பட மாட்டிங்குற சாப்பாட்டுல உப்பு சேக்கலையா என்று கத்தியது அவன் மனசாட்சி .

விக்கி எதுவம் சொல்லவில்லை சொல்றா ஏன் பேச மாட்டிங்குற என்றது மனம் .அது டாக்டர் அவ ரொம்ப வீக்கா இருக்காங்கன்னு சொன்னங்க அதான் கோபபப்படால என்றான் .அது மட்டுமா காரணம் என கேட்டது அவன் மனம் .ஆமா வேற என்ன என்றான் .வேற என்னவா கேப்படா ஒன்னும் தெரியாத மாதிரி நீதான் கார்ல இருக்கும் போது அவள ரசிச்சு பாத்தத எனக்கு தெரியுமே . என்ன அவ என்ன உன் கண்ணுக்கு அவளவு அழகாவா தெரிஞ்சா அப்படி சைட் அடிக்கிற என்றது மனம் .

அவ என்ன அவளவு அழகா என்று அவன் மனம் கேட்டவுடன் விக்கி மீண்டும் சுவாதியை நினைக்க ஆரம்பித்தான் .O God அவ என்ன என்னைக்கும் இல்லாத மாதிரி இன்னைக்கு அழகா இருக்கா பார்க்ல அவ சிரிச்சு பேசுனது அவ மழைய ரசிச்சது அப்புறம் பஜ்ஜி சாப்பிட்டது எல்லாத்தையும் விட அவ வாந்தி எடுத்துட்டு கொஞ்சம் டயர்டா வந்தா பாரு உண்மைலே அதான் அழகு இல்ல இல்ல கார்ல சின்ன குழந்தை மாதிரி தூங்கிட்டு வந்தா பாரு ஐயோ என்ன cute சான்சே இல்ல என்று தனக்கு தானே சொல்லி கொண்டு இருந்தான் .

மீண்டும் அவனை அவன் மனசாட்சி தட்டி எழுப்பியது .ஹலோ என்ன நான் இங்க ஒருத்தன் உன் கிட்ட பேசிகிட்டு இருக்கும் போதே அவள நினைச்சு உறுகுற என்ன ஆச்சு உனக்கு . என்னன்னு தெரியல எனக்கு திரும்ப அவ முகத்த பாக்கணும் போல இருக்கு அவளவுதான் என்றான் .டேய் என்ன மறுபடியும் லவ்வா ரெண்டு தடவ லவ்ல அடி வாங்கியும் உனக்கு புத்தி வரல பாரு உன்னையே எல்லாம் என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே அவன் ஒரு தலையணையை எடுத்து அந்த மனசாட்சி உருவத்தின் மீது எறிந்து விட்டு அங்குட்டு போடா நான் போயி அவள பாக்க போறேன் .

என்று சொல்லிவிட்டு கதவை திறந்து விறுவிறுவென்று நடந்தான் .போயி அவள் ரூம் கதவை தட்ட போனான் . ஆனால் அவனால் என்னவோ முடியவில்லை அப்படியே மெல்ல திரும்பி போயி உக்காந்தான் . அப்படியே தலையில் கை வைத்து கொண்டு உக்காந்தான் .பின் தன் மனதிடிம் சொன்னான் நீ சொன்னது தான் சரி எனக்கு இனி லவ் வேணாம் . ஒரு வேல இன்னைக்கு அவ மேல வந்தது ஒரு attraction ஆ இருக்காலம் அதுனால எனக்கு அவ வேணாம் என்றான் .

அப்படி வா வழிக்கு என்றது மனம் . பின் கண்ணை மூடி தூங்க போனான் . ஆனால் அவன் கண்ணை மூடினால் சுவாதி தான் வந்தாள் .அவள் கண்களும் அவள் பாவமான முகமும் அவனுக்கு வந்து வந்து போனது . அவன் எல்லா பக்கமும் திரும்பி திரும்பி படுத்தான் .தலையணியை போட்டு அடித்தான் .பின் அவனை அவனே சுவரில் முட்டி கொண்டான் . அவள நினைக்காத அவள நினைக்காத என்று தன் கன்னத்தில் தானே அடித்து கொண்டான் .

ஆனால் அவனால் முடியவில்லை . கிட்டத்தட்ட மணி ஒன்னு ஆகி விட்டது அவனுக்கு இன்னும் தூக்கம் வரவில்லை . சரி போயி டிவி பாப்போம் என்று போனான் .வழக்கம் போல மூடு பாடல்கள் ஓடி கொண்டு இருந்தது .ம்ம் இவெங்கே ஒருத்தேங்கே இப்படி பலான பாட்டா போட்டு மூட கிளப்பி விட்டுரனுக அப்புறம் நம்ம கஷ்டப்பட வேண்டியாதா இருக்கு என்று சொல்லி கொண்டு வேற சேனலை மாற்றினான் . பின் ஒரு discoveri சேனல் வைத்து பார்த்து கொண்டு இருக்கும் போது அவன் மனசாட்சி மீண்டும் வந்தது .

1 Comment

  1. Super aga story pogiradhu. Waiting for the next part

Comments are closed.