என் காதலி Part 8 116

அதுக்கு இல்ல விக்கி ஆஸ்பத்திரில ஏற்கனவே உன் புருஷன கூப்பிட்டு வாங்கன்னு டாக்டர் சொல்றாங்க இப்ப நீ என் கூட வந்தா அப்புறம் நீ என் புருஷன்னு ரெஜிஸ்டர்ல பதிவாகிடும் அது உனக்கு பிடிக்காது அதுனால வேணாம் என்றாள் ,

எ நான் உள்ள வந்தாதானே பதிவாகும் நான் வெளிய நிக்குறேன் நீ மட்டும் போயிட்டு வா என்றான் .இல்ல விக்கி எனக்கு ஆட்டோவே போதும் என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே மயக்கமானாள் .மீண்டும் விழ போனவளை பிடித்து அவளை தூக்கி கொண்டு ஆஸ்பத்திரி போனான் .

விக்கி சுவாதியை காரில் உக்காரவைத்து ஆஸ்பத்திரிக்கு கூப்பிட்டு போனான் .பின் ஆஸ்பத்திரி வந்ததும் அவளை எழுப்பினான் . அவளும் எழுந்து நடந்து வந்தாள் .

பின் அவளை டாக்டரிடிம் கூப்பிட்டு சென்றான் .டாக்டர் அவளை பார்க்கும் முன் விக்கியை பார்த்து நீங்கதான் இவங்க ஹஸ்பண்டா என்று கேட்டார்கள் .

அவனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை ஏற்கனவே ஒரு ஆஸ்பத்திரியில் சண்டை போட்டது ஞாபகம் வர எதுக்கு வம்பு ஆமா என்று சொல்லி தொலைப்போம் என்று மனதில் நினைத்து கொண்டு ஆமாம் எனபது போல் வெறும் தலையை மட்டும் ஆட்டினான்.

டாக்டர் அவனை முறைத்து விட்டு சுவாதியை தனியாக கூப்பிட்டு சென்று செக் ஆப் செய்தனர் .பின் சுவாதியை பார்த்து கோபமாக மதியம் என்ன சாப்பிட்ட என கேட்டார் .வேற ஏதாவது சாப்பிட்டியா என கேட்டார் . இல்ல டாக்டர் என்று சொல்லிவிட்டு ம்ம் சாயங்காலம் பஜ்ஜி சாப்பிட்டேன் என்றாள் .

அதை கேட்டு டாக்டர் மிகவும் கோபம் அடைந்தார் .சுவாதியை செல்லமாக தலையில் கொட்டி குழந்தைய வயுத்தில வச்சுக்கிட்டு இப்படி செமிக்காத எண்ணெய் பண்டமா சாப்பிடறது என்றார் கோபத்தோடு .

இல்ல டாக்டர் ஆசையா இருந்துச்சு அதான் என்று இழுத்தாள் .ஆசையா இருந்தா எத வேணும்னாலும் சாப்பிட்ட்ருவியா .இப்ப நீ மட்டும் இல்ல உள்ள ஒரு உயிர் இருக்கு அத மறந்துடாத.நீ சாப்பிட்ட எண்ணெய் பண்டம் குழந்தைக்கு ஒத்துகிறாமா தான் உனக்கு வாந்தியும் மயக்கமும் மாறி மாறி வந்து இருக்கு என்றார் .

சாரி டாக்டர் என்றாள் சுவாதி .ஆமா இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல இரு உன் புருஷன் கிட்ட சொல்றேன் என்றார் .ஐயோ வேணாம் டாக்டர் என்று சுவாதி சொல்லி கொண்டு இருக்க அதை கேட்கமால் டாக்டர் திரையை விளக்கி விட்டு விக்கியிடம் போனார்கள் .

என்ன மிஸ்டர் பொண்டாட்டிக்கு ரொம்ப முடியாட்டி மட்டும்தான் ஆஸ்பத்திரிக்கு வருவிங்களோ என்றார் .அதை கேட்டு விக்கி புரியமால் முழிக்க சுவாதியை பார்த்தான் .

அங்க என்ன பாக்குறிங்க வீட்டுக்கு போனதும் திட்டலாம்னு பாக்குறிங்களா என டாக்டர் கேட்டார் .விக்கி சரி பொறுமையவே போவோம் என்று நினைத்து கொண்டு அப்படி இல்ல டாக்டர் ஆபிஸ்ல கொஞ்சம் வொர்க் பிஸி அதான் வர முடியல என்றான் .அதை கேட்டு சுவாதி ஆச்சரியப்பட்டாள் .என்ன இவன் இன்னைக்கு சுத்தமா எதுக்குமே கோபபடாம இருக்கான் என்று நினைத்தாள் .

எவளோ பிஸியா இருந்தாலும் அட்லிஸ்ட் மாந்தளி ஒரு தடவயாச்சும் வோயிப் கூட வாங்க அது உங்க குழந்தையும்தான அப்ப நீங்களும் அக்கறை காட்டனும் தான என்றார் .

விக்கி திணறி கொண்டே ஆமா டாக்டர் சரி டாக்டர் என்றான் .பாருங்க நீங்க வொர்க் பிஸில இருக்கீங்க அதுனால உங்க பொண்டாட்டிய பாத்துக்க முடியாம அவங்க கண்டதையும் சாப்பிற்றுகாங்க அதுனால இப்படி உடம்புக்கு முடியாம இருக்காங்க என்றார் .

1 Comment

  1. Super aga story pogiradhu. Waiting for the next part

Comments are closed.