தன் தலையில் கை வைத்து கொண்டு சுவாதியை அவளவு நேரமும் நினைத்தை தன்னை மறந்து அவளை ரசித்தது எல்லாமே நினைத்து ஏதோ அவன் குற்றம் செய்தவன் போல் உணர்ந்தான் .பின் அப்போது டீ பிரேக்ம் முடியவும் அவளை மறந்து விட்டு வேலையை பார்த்தான் .பின் சாயங்காலம் வேலை முடிந்த பின் மணியிடம் சொல்லி விட்டு கிளம்பினான் .
அதன் பின் காரில் ஏறி அவன் வீட்டிற்கு போகும் போது போகும் வழியில் சுவாதியின் ஆபிஸ் பக்கம் வண்டியை நிறுத்தினான் .அவள கூப்பிட்டு போவோமா என்று யோசித்து கொண்டு காரை ஒரு ஓரமாக நிப்பாட்டினான் .
வழக்கம் போல அந்நேரம் அவன் மனசாட்சி வந்து அவனிடிம் பேசியது டேய் உனக்கு ஒரு தடவ சொன்னா புரியாதா இப்ப ஏன் அவள கூப்பிட்டு போகணும்னு நிக்குற என்றது .இவன் பாவம் அவ உடம்பு ரொம்ப வீக்கா இருக்குன்னு டாக்டர் சொல்லிருக்கன்களா அதான் பாவம் அவள எதுக்கு ஸ்ட்ரைன் பண்ண வச்சுக்கிட்டு போற வழிலதான இருக்கு அவ ஆபிஸ் அதான் அவள கூப்பிட்டு போலாம்னு பாக்குறேன் என்று சொன்னான் .
என்னது பாவமா என்னடா நீ வர வர பாவம் எல்லாம் பாக்குற உனக்கு என்னதான் ஆச்சு ரொம்ப நல்லவனா மாறிகிட்டு வர நேத்து நைட் இருந்து சொல்ற என்ன ஆச்சு உனக்கு ஏன் இப்படி பண்ற என்றது மனம் .அவன் தெரியல எனக்கு ஒன்னும் புரியல என்றான் .
என்னது தெரியலையா இப்பதான் அவ யாருன்னு உன் facebook பாக்கும் போது உனக்கு ஞாபகம் வந்துச்சு மறந்துட்டியா என்றது மனம் .இல்ல என்றான் .அவ யாரு என்றது அவன் மனம் என் பிரண்டோட பழைய லவ்வர் என்றான் .அது உன் பிரண்டோட பழைய லவ்வர் அப்படி நினை என்று மனம் சொல்ல விக்கி அப்படியே ஸ்டீரிங்கில் சாய்ந்தான் .பின் அவன் சுவாதியை முதன் முதலில் பார்த்ததை நினைத்து பார்த்தான் .
தொடரும்….
Super aga story pogiradhu. Waiting for the next part