சித்தார்த் உன் சகவாசமே வேனமாம்டி என்னால முடியல என்று நினைத்து கொண்டு ஒன்றும் சொல்லாமால் அப்படியே ஒன்றும் சொல்லமால் போனான் .அவனை சித்தார்த் சித் என்று சுவாதி கூப்பிட அவன் திரும்பி பார்க்கமால் போனான் .சுவாதி சிரித்து கொண்டே அப்பா ஒரு வழியா இவன் இம்சைல இருந்து தப்பிச்சோம் .இனி சீப் கிட்ட போயி ரிசைன் லெட்டர் கொடுக்கணும் .அவர் கேக்குற கேள்விக்கு என்ன பதில் சொல்லி சமாளிக்க போறேனோ என்று நினைத்து கொண்டு ரிசைன் லெட்டர் எழுதி விட்டு சீப்பை பார்க்க சென்றாள் .
பின் ஆபிஸ் சென்று சீப்டிம் ரிசைன் லெட்டர் கொடுக்க போனாள் ,அவள் ரிசைன் பண்ண போகிறேன் என்பதை கேட்டு சீப் ஏன் சுவாதி தீடிருன்னு இந்த முடிவு உனக்குத்தான் இந்த வேல ரொம்ப பிடிக்குமே அது மட்டும் இல்லாம உனக்கு பேன்ஸ் நிறையாவும் இருக்காங்களே அப்புறம் ஏன் இந்த முடிவு சம்பளம் ஏதும் அதிகமா வேணும்னு பீல் பண்ணேனே சொல்லு நான் எம் டி கிட்ட பேசுறேன் என்றார் .
சுவாதிக்கு சித்தார்த் கிட்ட சொன்னது போல இவரிடிம் சொல்ல முடியவில்லை . அது மட்டும் இல்லாம எல்லார் கிட்டயும் பிரக்னட் சொல்லவும் முடியல அப்புறம் நான் லெஸ்பியன்னு பொய் சொல்லவும் முடியல அதானால அவர் கிட்ட இல்ல சார் நான் பாரின் போறேன் சார் அதான் ரிசைன் பண்றேன் என்றாள் ஒரு சலிப்போடு . என்ன விஷயமா போற சுவாதி என்றார் . அது கொஞ்சம் பர்சனல் சார் என்றாள் .சரி உன் பர்சனல்னா சொல்ல வேணாம் நானும் அத பத்தி கேக்கல .ஆனா உன் ரிசைன் லெட்டர நான் இந்த மாசம் முழுக்க மேல் இடத்துக்கு கொடுக்காம வச்சுருக்கேன் .
உனக்கு ஒரு வேல திரும்ப வேலைல ஜாயின் பண்ணனும்னு தோணுச்சுனா நீ தாரளாமா பண்ணிக்கலாம் .you are always welcome என்றார் சிரித்து கொண்டே . ஓகே சார் தேங்க்ஸ் என்றாள் .ஓகே அப்புறம் இந்த மான்த் சம்பளத்த அடுத்த மாசம் 5 தேதி உன் அக்கவுண்ட்ல ஏத்தி விட்டுறேன் அப்ப எடுத்துக்கோ ஓகேவா என்றார் .
ஓகே சார் நான் வரேன் என்றாள் .பின் அவள் யாரிடமும் சொல்லமால் தன் டெஸ்க்கில் இருக்கும் தன் பொருள்களை எடுத்து கொண்டு கிளம்பினாள் .அப்போது மணி மதியம் இரண்டாகி இருந்தது சரி சம்பளம் வர வரைக்கும் பேங்க்ல இருக்க பணத்த கொஞ்சம் எடுத்துக்குவோம் என்று அவள் பேங்கிற்கு சென்று விட்டாள் . அவள் பேங்கில் பணத்தை எடுத்து விட்டு பின் வீட்டிற்கு போயி விட்டாள் .
வீட்டிற்கு போயி பிரஸ் ஆப் ஆகி விட்டு தன் அறையில் வந்து உக்காந்து தன் வயிற்ரை தடவி கொண்டே பேசினாள் . ஓகே டா செல்லம் அம்மா வேலைய விட்டுட்டேன் இனிமேல் முழுக்க உன் மேல மட்டும் தான் கவனம் செலுத்த போறேன் .சோ நீ பயப்படாம உள்ள இரு நீ வெளிய வந்ததும் நம்ம கனடா போயி சந்தோசமா இருப்போம் ஓகேவா என்று தன் கையில் முத்தம் கொடுத்து அதை தன் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு தொட்டு வைத்து கொண்டு சந்தோஷ பட்டு கொண்டாள் .
அவள் நிம்மதியாக குழந்தையை கொஞ்சி கொண்டு இருக்கும் அதே வேளையில் விக்கியால் நிம்மதியாக வேலை பார்க்க முடியவில்லை .
ஒரு பக்கம் நைட் புல்லா தூங்கமா இருந்த அலுப்பு இன்னொரு பக்கம் அடிக்கடி அவனுக்கு வந்த சுவாதி முகம் இது ரெண்டும் அவன ரொம்ப இம்ச பண்ணுச்சு ,ஒரு வழியா வொர்க் எல்லாம் கரெக்ட்டா பண்ணி ஒரு மூனு மணி வரைக்கும் சமாளிச்சான் .பின் மீண்டும் டீ பிரேக்கின் போது அவன் லேசாக கண்ணை மூட சுவாதி வாந்தி எடுத்து கொண்டே மூச்சு வாங்கி கொண்டு அவன் கனவில் வர அவன் தீடிக்கிட்டு எழுந்து உக்காந்தான் .
சே ஏண்டி இம்ச என்னையே நிம்மதியா ஒரு ரெண்டு நிமிஷம் கூட கண்ண மூட விட மாட்டிங்குற சரி கனவுல வந்ததுதான் வந்த அட்லிஸ்ட் அந்த மழை துளிய பிடிச்சு விளாண்டிய அப்படி வந்துருக்கலாம்ல ஏன் வாந்தி எடுத்து கிட்டே பாவமா வந்து நிக்குற சரி இருந்தாலும் நீ அப்பதான் அழகா இருக்க என்று நினைத்து கொண்டு பின் விக்கி தன சேரில் உக்காந்தான் .
ஏதோ தோன்றியது போல உக்காந்து யாரும் வருகிறார்களா என்று ஒரு முறை எட்டி பார்த்து விட்டு மெல்ல தன் கம்ப்யூட்டரில் facebook பேஜ் ஓபன் பண்ணான் .அப்படி நீ என்னதான் அழகா இருக்கன்னு நான் பாக்குறேன் என்று நினைத்து கொண்டு பின் அதில் சுவாதி இருக்கும் பக்கத்திற்கு போனான் .
பின் அதில் இருக்கும் அவள் பழைய போடோக்களை பார்த்தான் .அதை பார்த்து தன்னை மறந்து அவளை ரசித்தான் ,சே இவ எப்பவுமே அழகுதான் என்று அவள் போட்டோக்கள் ஒன்று ஒன்றாக பார்த்து ரசித்து கொண்டு இருந்தான் . பின் எதார்த்தமாக அவள் status பார்க்க அதில் அவள் ரிலேசன்ஷிப் சிங்கிள் என்று போட்டு இருப்பதை பார்த்தான்
மேலும் அதில் அவள் அவன் குரூப் விக்கி ,டேவிட் ,மணி ,வள்ளி என்று இவர்களோடு ஒன்றாக நின்று எடுத்த போட்டோ எதுவும் இல்லை . எல்லாத்தையும் நீக்கி இருந்தாள் . அதை எல்லாம் உணர்ந்து புரிந்து கொண்ட அவனுக்கு அப்போது தான் அவள் முன்பு தன் நண்பனின் காதலி ஆக இருந்தது ஞாபகத்திற்கு வர உடனே facebook பேஜை க்ளோஸ் பண்ணான் .
Super aga story pogiradhu. Waiting for the next part