என் காதலி Part 8 118

எ மழைல பஜ்ஜி சாப்பிட்டா நல்லா இருக்கும்டா என்றாள் .நீதான் உனக்கு மழை பிடிக்காதுன்னு சொன்ன அப்புறம் என்ன என்றான் .எ மழைதான் பிடிக்காது ஆனா இந்த கிளைமாட்ல பஜ்ஜி சாப்பிட பிடிக்கும் என்றாள் என்னமோ பண்ணு ஆனா சீக்கிரம் சாப்பிட்டு முடி என்றான் .

பின் இருவரும் அந்த பஜ்ஜி கடைக்கு சென்றார்கள் .சுவாதி சூடாக போடப்பட்ட பஜ்ஜியை வாங்கி ஆசை ஆசையாய் சாப்பிட்டாள் ,விக்கிக்கு வேண்டுமா என்று கேட்டாள் .

அவன் அதை பார்த்து வேண்டாம் என்று சொல்லிவிட்டான் ,சுவாதி சாப்பிட்டு முடித்து கடைகாரரிடிம் நூரு ரூபாயை நிட்டினாள் .கடைக்கறார் சில்லறை இல்லையாம்மா என்றார் .சுவாதி என்கிட்டயும் இல்லையே என்றாள் ,அதான் பக்கத்துல உங்க வீட்டுக்காரர் இருக்காரே அவர் கிட்ட வாங்கி கொடும்மா என்றான் .

அதை கேட்டு விக்கி கோபபடுவான் என்று எதிர்பார்த்தாள் .ஆனால் அவன் சாதரணமாக என்கிட்ட இருக்கு எவளோ ஆச்சு என்றான் .ம்ம் இருபது ரூபா சார் என்றான் .

பின் அதை கொடுத்து விட்டு வந்தான் .இருவரும் மீண்டும் வீட்டிற்கு நடந்தனர் .சுவாதி மெல்ல சொன்னாள் ம்ம் அதான் இன்னைக்கு மழை பெய்யுது என்றாள் .எதுக்கு பெய்யுது என கேட்டான் .அந்த கடைக்காரன் சொன்னத கேட்டு நீ கோபப்படாம இருந்ததால என்றாள்

அப்படி என்ன அந்த கடைக்காரன் சொன்னன்னு கோபபடனும் என்றான் .அந்த கடைக்காரன் சொன்னத நீ கேக்கலையா என கேட்டாள் .கேட்டேன் ரெண்டு பேர் இப்படி ஒண்ணா போனா சொல்லத்தான் செய்வாங்க நீ வேற கர்ப்பமா இருக்கியா அதானல நம்மள அப்படி அவன் புருஷன் பொண்டாட்டியாத்தான் பாப்பான் . அதுக்கு அவன் குறை சொல்ல கூடாது .என்றான் .

பரவல நீ ஓரளவு mature ஆகிட்ட என்றாள் .பின் வீடு வந்தது .அவளால் வீட்டிற்ககுள் போவதற்கு முன் சுவாதி தீடிரென வாந்தி வருவது போல வாயை பொத்தினாள் .

உடனே விக்கி என்ன ஆச்சு என்று அவளை பார்த்து கேட்க உடனே சுவாதியால வாந்தியை அடக்க முடியாமல் பக்கத்தில் இருந்த விக்கி மீது கக்கி விட்டாள் .உடனே கடுப்பாகி அவளை திட்ட போகும் முன் மயக்கமும் போட்டாள் .அதை பார்த்த விக்கிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை .

அவளை எழுப்பி எழுப்பி பார்த்தான் அவள் எந்திரிக்கவில்லை பின் வெளியே நின்ற காரில் இருந்து தன்னீ பாட்டிலை எடுத்து அவள் மீது தண்ணியை தெளித்தான் .

அவள் முழித்தாள் .முழித்த உடனே மீண்டும் வாந்தி எடுக்க இந்த முறை வாந்தி விக்கி முகத்தின் மேலே பட்டது .விக்கி மிகவும் கோபப்பட்டான் . போடி லூசு அங்குட்டு போயி வாந்தி எடுரி என்றான் .பின் அவள் மெல்ல எழுந்தாள் .அவளால் நடக்க முடியவில்லை .மயக்கத்தால் தலையை பிடித்து கொண்டு விழ போனவளை விக்கி தாங்கி பிடித்து உள்ளே கொண்டு சென்றான் .

அவன் அவ்வாறு கொண்டு போகும் போது ஐ அம் சாரி விக்கி உன் மேல வாந்தி எடுத்ததுக்கு என்று மயக்கத்தில் சாரி சாரி என்று முனகி கொண்டே இருந்தாள் .

அவள் அவ்வாறு மயக்கத்திலும் இப்படி சாரி சாரி என்று சொல்வது விக்கி ஒரு மாதிரி அவள் மேல் பரிதாப உணர்வு ஏற்பட்டது .பின் கதவை திறந்து அவளை கை தாங்களாக பாத் ரூமில் கொண்டு போயி வாந்தி எடுக்க விட்டான்

மீண்டும் விழ போனவளை பிடித்து அவள் நெற்றியை பிடித்து கொண்டு அவளை வாந்தி எடுக்க விட்டான் .அவள் அன்று ஒரு நாள் எடுத்து போலவே பயங்கரமாக வாந்தி எடுத்தாள் .

பின் ஒரு வழியாக மூச்சு வாங்கி கொண்டே வாந்தியை நிறுத்தி விட்டு சாரி அண்ட் தேங்க்ஸ் விக்கி இனி நீ உன் ரூமுக்கு போ நான் பாத்துகிருவேன் என்றாள் .ஒன்னும் பிரச்சினை இல்லலே என்றான் .இல்ல ஒரு பிரச் என்று சொல்லி முடிப்பதற்குள் மீண்டும் அவள் பாத் ரூம் போயி வாந்தி எடுத்தாள் .

பின் வாந்தி எடுத்து விட்டு விக்கி என்னால வாந்திய நிப்பாட்ட முடியல எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா என கேட்டாள் .என்ன ஹெல்ப் வேணும் என கேட்டான் .

எனக்கு ஒரு ஆட்டோ பிடிச்சு கொடுக்கிறியா என்றாள் .எதுக்கு ஆட்டோ என்றான் .நான் ஆஸ்பத்திரி வரைக்கும் போயி டாக்டர பாத்து என்ன காரணும்னு கேட்டு மருந்து வாங்கிட்டு வரேன் அப்பதான் சரியாகும் என்றாள் .

அதுக்கு எதுக்கு ஆட்டோ என் கார் இருக்கே அதுலயே போகலாம் என்றான் .இல்ல விக்கி வேணாம் உனக்குத்தான் பிடிக்காதே என்றாள் .எ அதுக்குன்னு இந்த மாதிரி நிலைமைல பரவல நீ வா கார்ல போவோம் என்றான் .பரவல நீ ஆட்டோவே பிடி என்றாள் .இந்த மழைல ஆடோவுக்கு எங்க போறது நீ வா கார்ல போலாம் என்றான் .

1 Comment

  1. Super aga story pogiradhu. Waiting for the next part

Comments are closed.