என் காதலி Part 10 106

நான் நினைக்கிறேன் டேவிட்க்கும் சுவாதிக்கும் இப்ப affair இருக்குன்னு நினைக்கிறேன் என்று மணி சொல்ல இவன் என்னடா புது கதைய கட்டி விடுறான் சரி என்ன சொல்றான்னு கேப்போம் . எப்படிடா சொல்ற என்று விக்கி கேட்டான் .

டேய் யோசிச்சு பாரு ஸ்வாதிய ஒரு ரெண்டு மாசமா காணோம் .நம்பரையும் மாத்திட்டா .அவ ரூம் மெட்டு கிட்ட கூட அவ எங்க போனான்னு சொல்லல அப்புறம் இந்த டேவிட் பையன் முகரையே ரெண்டு மாசமா ஒரு மாதிரி இருக்கு எதையோ மறைக்கிற மாதிரியே இருக்கு என்றான் மணி .

மணி இத மட்டும் வச்சு ரெண்டு பேருக்கும் தொடர்பு இருக்குன்னு சொல்ல முடியாது ஒரு வேல சுவாதி திரும்ப தமிழ் நாட்டுக்கே போயி இருக்கலாம் அவ லவ் பிரேக் ஆப் ஆனதால டேவிட்க்கு வேற எதாச்சும் டென்சன் இருக்கும் இது ரெண்டையும் முடிச்சு போட்டு பாவம் கல்யாணம் ஆனவன் வாழ்க்கைல விளையாடிடாத என்றான் விக்கி .

நான் அத வச்சு மட்டும் சொல்லலடா நேத்து ஒரு விஷயம் நடந்துச்சு அத வச்சு தான் சொல்றேன் என்று மணி சொல்லவும் விக்கிக்கு மனதில் தீடிரென ஒரு வருத்தம் வந்தது .இவன் என்ன சொல்றான் ஒரு வேல ரெண்டு பேருக்கும் தொடர்பு இருக்குமோ இந்த குழந்தை கூட அவனோடாத இருக்குமோ சும்மா ரெண்டு பேரும் என்னைய யூஸ் பண்றாங்களா என்று விக்கி நினைத்தான் .

பின் ஒரு வருத்தமான குரலில் அப்படி நேத்து என்னடா நடந்துச்சு என்றான் விக்கி ,நேத்து சாயங்கலாம் சுவாதி ஆபிஸ்க்கு போனேன் .அங்க போனப்ப அவ இல்ல .அங்க இருந்த செக்க்யுரிட்டி கிட்ட கேட்டப்ப என்ன இப்பதான் ஒருத்தர் அவங்களா கேட்டு போறாரு நீங்களும் கேக்குறிங்க அப்படின்னு சொன்னார் .

நானும் கேட்டேன் வந்தவர் எப்ப வந்தாரு எப்படி இருந்தாருன்னு அவர் கிட்ட கேட்டேன்

அவரு சொன்னாரு இப்பதான் ஒரு பத்து நிமிஷம் முன்னாடி வந்துட்டு போனாரு கருப்பு கலர் கார்ல ஆள் எப்படி இருப்பாருன்னு சரியா பாக்கல அப்படினாறு .நான் உடனே அப்ப டேவிட்க்கு போன் போட்டேன் அவன் எடுக்கல அப்புறம் மேல் மீட்டிங்க்ல இருந்ததா பொய் சொன்னான் இதுக்கு என்ன அர்த்தம் என்றான் மணி .

தெரியலையே நீயே சொல்லேன் என்றான் விக்கி .நம்ம செட்ல கார் வச்சு இருக்கிறது ரெண்டு ஆள் தான் .ஒண்ணு நீ இன்னொன்னு அவன் நீ வச்சு இருக்கிறது ப்ளு கலரு கார் அப்ப அவன்தானே வந்து இருக்கணும் நீயே சொல்லு என்றான் மணி .

தெரியல அது இருக்கட்டும் நீ எத்தன மணிக்கு அவள பாக்க போன என கேட்டான் விக்கி .நம்ம ஆபிஸ் முடிஞ்சதும் ஒரு அரை மணி நேரம் கழிச்சு 5.30 போல போனேன் .அட பாவி அப்ப பத்து நிமிசத்துக்கு முன்னாடி வந்தது நான் தாண்டா என்று மனதிற்குள் நினைத்து கொண்டு அது இருக்கட்டும் செக்க்யுரிட்டி என்ன சொன்னான் .ஆள் எப்படி இருப்பான் கார் எந்த கம்பெனி இதலாம் கேட்டியா அந்த ஆள் கிட்ட என்றான் .

அட போடா அங்க தான் சிக்கலே அந்த கிழவனுக்கு கண்ணே சரியா தெரியல வந்தது கருப்பு காரா பச்சை காரான்னு கூட தெரியல அப்புறம் எப்படி அவன் கிட்ட ஆள் எப்படின்னு கேக்க ஆனா அந்த ஆள் இன்னொன்னு சொன்னான் நேத்து காலைல அதே கார்ல தான் சுவாதி வந்தாளாம் .ஆனா ஆபிஸ விட்டு கொஞ்ச தூரம் தள்ளி நின்னு இறக்கி விட்டு போனானாம் .

அப்படினா அது நம்மளேதான் நான் தானே நேத்து அவள கார்ல அவ ஆபிஸ்க்கு கொண்டு போயி விட்டேன் .அப்ப அந்த குருட்டு கிழம் நம்ம ப்ளு கலர் கார கருப்புன்னு சொல்லி இருக்கு

அத நம்பி இந்த வேலக்கன்னை அதுக ரெண்டையும் முடிச்சு போடுது அவ புல்லா இப்ப என் கூட இருக்கா என்று நினைத்து கொண்டு சரி மணி அதுக எப்படி போனா எனக்கு என்ன லஞ்ச் முடிய போகுது வா நம்ம ரெண்டும் பெரும் நம்ம கேபினுக்கு போவோம் என்று சொல்லி விட்டு விக்கி போக பின் மணியும் போனான் .